தலையில் கத்தி குத்தப்பட்ட நிலையில் சாதாரணமாக இருந்த நபரைப் பார்த்து பொலிசார் ஆச்சரியமடைந்தனர்.
Thinappuyal News -0
தலையில் கத்தி குத்தப்பட்ட நிலையில் சாதாரணமாக இருந்த நபரைப் பார்த்து பொலிசார் ஆச்சரியமடைந்தனர்.
ரஷ்யாவின் Donetsk பகுதியில் Yury Zhokhov என்ற நபரே இவ்வாறு கத்தியால் குத்தப்பட்ட நிலையில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்த பொலிசார் அவரிடம் எப்படி இவ்வாறு ஆனது எனக் கேட்ட போது எனக்கு மூக்கில் மூச்சு விட சிரமமாக இருந்தது. அதன் காரணமாக தலையை கத்தியை வைத்து துளைத்தேன்.
ஆனால் தலையிலும் சுவாசிக்க முடியவில்லை. ஏனெனில் தலையில் கத்தி...
தூதரகத்திற்குள் கொலை செய்யப்பட்ட சவுதிஅரேபிய பத்திரிகையாளரின் உடலை கொண்டு செல்வதற்காக பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் கறுப்புநிற வாகனத்தை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை துருக்கி அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்
சவுதிஅரேபிய அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வந்த அந்த நாட்டை சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் ஜமால் கசோகி துருக்கியிலுள்ள சவுதி அரேபிய தூதுரகத்திற்குள் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
துருக்கி அதிகாரிகளும் இதனை உறுதி செய்துள்ளதுடன் பத்திரிகையாளரின் உடலை கொண்டுசெல்வதற்கு பயன்படுத்தப்பட்ட கறுப்பு நிற வாகனத்தை...
கைது செய்யப்பட்ட நக்கீரன் ஆசிரியர் கோபால் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் வைத்து இன்று காலை 7 மணியளவில் நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டார்.
ஆளுநர் மாளிகையில் இருந்து கொடுக்கப்பட்ட முறைப்பாட்டின் பேரில் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட கோபால் ஒரு மணிநேர விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்டார்.
இந் நிலையில் பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பில் ஆளுநர் மீது அவதூறு செய்தி வெளியிட்டதாக கோபால் மீது...
கடலுக்குச் சென்றிருந்த வேளையில் படகிலிருந்து தவறி விழுந்த மீனவரைக் காணவில்லையென வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.மீன்பிடிக்காக வாகரைப் பிரதேசத்தையொட்டிய வங்காளக் கடலுக்குச் சென்றிருந்த வேளையில் படகிலிருந்து குறித்த மீனவர் தவறி கடலுக்குள் விழுந்துள்ளார்.
இன்று இடம்பெற்ற இச்சம்பவத்தில் வாகரை புளியங்கண்டலடி கிராமத்தைச் சேர்ந்த 37 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே காணாமல் போயுள்ளார்.
இதுபற்றி பிரதேச மீனவர்களால் தமக்கு அறிவிக்கப்பட்டதின் பேரில் தொடர்ந்து தேடுதல் இடம்பெற்று வருவதாக பிரதேச அனர்த்த நிவாரண சேவைகள்...
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மூவர் அடங்கிய விசேட நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் அவர் விஷேட மேல் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா தாண்டிக்குளம் இராணுவ உணவகத்திற்கு முன்பாகஇராணுவ வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து
Thinappuyal News -
வவுனியா தாண்டிக்குளம் இராணுவ உணவகத்திற்கு முன்பாக இன்று காலை 7மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இன்று காலை 7மணியளவில் தாண்டிக்குளம் இராணுவ உணவகத்திற்கு முன்பாக இராணுவத்தினரின் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு இரணுவத்தினரின் கனரக வாகனம் ஒன்றில் நிகழ்வினை ஒழுங்கு படுத்துவதற்கு ஏற்றிவரப் பொருட்களின் வாகனம் உணவகப் பகுதிக்கு செல்ல முற்பட்டபோது...
நாம் இன்று மன்னார் மாவட்டத்தில் இடம்பெறும் சுற்றாடல் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இங்கு ஒன்று கூடியிருக்கிறோம். இதுபோன்ற பல சுற்றாடல் மாநாடுகளை நாடளாவிய ரீதியில் நடத்தியிருக்கிறோம்.
இதேபோன்று போதைப்பொருள் ஒழிப்பு மாநாடும் பல மாவட்டங்களில் இடம்பெற்றுள்ளன. சிறுவர்களை பாதுகாப்பது சம்பந்தமான மாநாடும் பல்வேறு மாவட்டங்களில் இடம்பெற்றுள்ளன. இந்த அனைத்து திட்டங்களும் ஜனாதிபதி அலுவலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
பதவியிலிருந்த பெரும்பாலான முன்னாள் ஜனாதிபதிகள், ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டதும் நிதியமைச்சினையே தங்களுக்கு கீழ் கொண்டு வந்தனர்....
“அரசியல் கைதிகள் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும்”யாழ். பல்கலைக்கழக மாணவர்
Thinappuyal News -
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படும் விடுதலை வேண்டிய நடைபயணம் சற்று முன்னர் யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பமாகியது.
யாழ். பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலய முன்றிலிருந்து யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கி.கிருஸ்ணமீனன் தலைமையில் இந்த நடைபயணம் ஆரம்பமாகியது. பெருமளவு மாணவர்கள் கலந்து கொண்டுள்ள இந்த நடை பவனி கிளிநொச்சி,...
மைத்திரியே ஜனாதிபதி வேட்பாளர் பொறுமையாக இருப்போம் – அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வா
Thinappuyal News -
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வேறு எந்தக் கட்சியுடனும் இணைய வேண்டிய அவசியம் இல்லை. இணைந்து செயற்பட விரும்பும் அனைவரும் எம்முடன் இணையலாம், அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வா தெரிவித்தார்.
உரிய நேரத்தில் தேசிய அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் விவகாரம் மற்றும் தேசிய அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா...
கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர்களின் நிரந்தர மற்றும் தற்காலிக இட மாற்றங்கள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் மாகாண பணிப்பாளர் எம் கே எம் மன்சூர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக இவ்விடமாற்றங்கள் அனைத்தும் டிசம்பர் 31ஆம் திகதி வரைக்கும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவளை சுற்றுநிருபத்துக்கு அமைவாக மகப்பேற்று காலம் வரையிலான இடமாற்றங்கள் மட்டும் வழங்கப்படும் எனவும் அவர்...