இலங்கையில் வாழும் இளைஞர்கள், யுவதிகள் 20000 பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் மேற்கொண்டுள்ளனர். 20000 பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்குவதற்கான பட்டியல் தயாரிப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் எதிர்வரும் தேர்தலை இலக்கு வைத்தே இந்த நடடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக...
கொழும்பில் வெள்ள அபாயம் ஏற்படுவதற்கான காரணம் குறித்து துறைசார் நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர் சிறியளவில் மழை பெய்தாலும், கொழும்பு நகரம் பல அடி நீரில் மூழ்கிப் போகிறது. இதற்கான காரணம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முத்துராஜவெல சதுப்பு நிலத்தில் அமைந்துள்ள தொழிற்சாலை, வீடுகள், ஹோட்டல்கள் என்பனவற்றினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. சதுப்பு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டடங்கள் காரணமாக நீர் பாய்ந்து செல்ல முடியாமையினால், வெள்ள நிலைமை ஏற்படுவதாக சுற்றுச் சூழல் ஆர்வலர் ரவீந்திர காரியவசம்...
சுவிட்சர்லாந்து பேர்ன் மாநிலத்தில் அமைந்துள்ள சைவ நெறிக்கூடம் தமிழர் களரி மண்டபத்தில் புள்ளிகள் கரைந்த பொழுது என்னும் நாவல் அண்மையில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் ஆதிலட்சுமியின் எட்டு ஆண்டுகால தவமாக இந்த நாவல் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. எழுதுவதற்கு ஒரு தகமை எனச் சில எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்… இலக்கியம் படைக்க சிலர் எழுதுகிறார்கள்! சிலர் உலகை உய்விக்க, கலைகள் சிறக்க, மொழிகள் செழிக்க, என எழுதுகிறார்கள்! கண்டது, கேட்டது, எண்ணியது, விரும்பும் எண்ணம் எனவும் சிலர் எழுதுகிறார்கள்! காலச்...
இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்துக்கு ஈடாக இராணுவ கட்டமைப்பை மேம்படுத்த இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் திறனைக் கொண்டுள்ளதாக ஜப்பானிய அமைச்சரவைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய நிஹொன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரும் பாதுகாப்பு ஆலோசகருமான நொமோசு யொஸிடொமி இந்த ஆலோசனையை தெரிவித்துள்ளார். இந்த தகவலை அமெரிக்காவின் ஸ்டெம்போட் எட்வகேட் நாளிதழ் வெளியிட்டுள்ளது. இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில் இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தமது கண்காணிப்பை அதிகரித்துள்ளதாக...
ஈழ விடுதலைப் போராட்டத்தில் போராடிய பெருமளவான போராளிகள் மன அழுத்தத்தின் காரணமாகவும் மனவியல் தாக்கத்தின் காரணத்தினாலுமே உயிரிழக்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். லங்காசிறிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். புனர்வாழ்வளிக்கப்பட்டு தற்போது சமூகத்துடன் வாழும் முன்னாள் போராளிகள் பெருமளவிலானோர் நோய்வாய்ப்பட்டு இறப்பது தொடர்பிலும், அவர்கள் ஏன் நோயாளர்களாக மாறி வருகின்றனர் அதற்கான காரணங்கள் என்ன என்பது தொடர்பிலும் வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், வடமாகாண சபையின்...
யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதான குழுவை சேர்ந்த 7 தலைவர்கள் உட்பட 58 பேர் கடந்த 4 மாதங்களில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி வருண ஜயசுந்தர தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்....
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்படும் திடீர் அனர்த்தம் தொடர்பில் அறிவிப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அவசர இலக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதற்கமைய 117 என இலக்கம் 24 மணித்தியாலமும் சேவையில் உள்ளதாக நிலையம் அறிவித்துள்ளது. மன்னார், புத்தளம், கொழும்பு, காலி, மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் கடும் காற்றுடன் மழை பெய்யும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக மீனவர்கள், கடல்துறைசார் நடவடிக்கையில் ஈடுபடுவோர் மிகுந்த...
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் ஆரம்பப்பிரிவில் தரம் ஐந்தில் கல்வி கற்று வந்த சிவநேசன் விதுசன் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட நிலையிலும் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி 173 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார். வவுனியா கோவில்குளம் பகுதியில் வசித்துவரும் குறித்த மாணவன் இரத்தப் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு தற்போது மஹரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றார். விவசாயம், தச்சுவேலை மேற்கொண்டு வரும் தந்தையின் பராமரிப்பிலும் உறவினர்களின் பங்களிப்பிலும் இவர் சிகிச்சை பெற்றுவருவதாக விதுசனின்...
நேற்றைய தினம் (08)லண்டன் ஒக்ஸ்போட் யூனியனில் உரையாற்றியிருந்த ஶ்ரீலங்காவின் பிரதமருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. நாடு கடந்த தமிழீழ அரசினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப் போராட்டமானது இரவு 7 மணி தொடக்கம் 10 மணி வரை நடைபெற்றது. ஐ நா தீர்மானங்களை நலினப்படுத்தி போர் குற்றவாளிகளை காப்பாற்றி வரும் ரணிலை இலங்கைக்கு திரும்பி செல்லுமாறு கொட்டொலிகள் முழங்கிய வண்ணம் இருந்தனர் குறித்த ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் இலண்டனில் அமைந்துள்ள இலங்கை தூதரக  ...
  கட்டிபுடி கட்டிபுடிடா கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா" என பாடல்களை காமம் சொட்ட சொட்ட தமிழர்களுக்கு படைத்த மாபெரும் கவிப்பேரரசு வைரமுத்துவின் காம களியாட்டங்கள் தற்போது பொதுவெளிக்கு வந்திருக்கிறது. என்ற hashtag-ல் கடந்த மூன்று தினங்களாக பெண்கள் தங்கள் பணியிடங்களில் நேர்ந்த பாலியல் தொல்லைகளை வெளி உலகத்திற்கு தெரிவித்து வருகின்றனர். தங்கள் பாதுகாப்பு கருதி பல பெண்கள் தாங்கள் யார் என்பதை அடையாளப்படுத்தாமல் தங்களுக்கு நேர்ந்த அவலங்களை மட்டும் பதிவிட்டு வருகின்றனர். #சந்தியாமேனன் எனும்...