சந்தன மரக்கடத்தல் வீரப்பனை கொல்ல உதவிய பெண் இந்திய அரசின் வெகுமதி மற்றும் சலுகைகளுக்காக கடந்த 14 ஆண்டுகளாக போராடி வருவதாக இந்திய ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். தமிழகம், கர்நாடக வனப் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த சந்தன மரக்கடத்தல் வீரப்பன் மற்றும் அவரது சகாக்களை கொலைசெய்வதற்கு தமிழக, கர்நாடக அரசுகள் பல முயற்சிகள் மேற்கொண்டன. அதன்ஒரு பகுதியாக, வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி மற்றும் அவரது குழந்தைகளை கோவை வடவள்ளி பகுதியில்  பொலிஸார்...
(நோட்டன்  பிரிட்ஜ் நிருபர்)  தமிழ் முற்போக்கு கூட்டணி அமைச்சு பதவிக்கு வந்த மூன்று ஆண்டுகளில் மக்களுக்கான அதிகார சபையை கொண்டுவந்துள்ளது. ஆனால் ஆண்டாண்டு காலமாக அமைச்சுப்பதவியை வைத்திருந்தவர்கள் கால்நடை அமைச்சையும் கால்நடை அபிவிருத்தி சபையையுமே வைத்திருந்தனர். இன்று கால்நடை அபிவித்தி சபை தலைவருக்கு என்ன நடந்துள்ளது என எல்லோருக்கும் தெரியும். ஊவா மாகாண அமைச்சர் செந்தில் ஜல்லிக்கட்டு விளையாடுகிறார். அவரது தந்தையார் முத்துவிநாயகம் இங்கே சல்லிக்கட்டோடு விளையாடுகிறார். இரண்டு விளையாட்டுகளுமே...
ஆசிரியர் ஒருவர் தூக்கில் தொங்கி  தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இன்று காலை மட்டக்களப்பு தாளங்குடா ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். முல்லைதீவு கொத்தனி பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய எம்.பிரதீப் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியர் கலாசாலையில் கடந்த ஜூன் மாதம் ஆரம்பமான முதலாம் பிரிவில் பயிற்சி பெற்றுவரும் ஆசிரியர், சம்பவதினமான இன்று வழமைபோல கலாசாலையில் பயிற்சி பெற்றுவந்த...
19 வயதுக்குட்பட்ட இளையோருக்கான ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி 144 ஓட்டங்களினால் இலங்கை அணியை வீழ்த்தி அபாரமாக வெற்றி வாகை சூடி, கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. இவ்­விரு அணி­க­ளுக்­கி­டை­யி­லான இறுதிப் போட்டி  பங்­க­ளாதேஷ் தலை­நகர் டாக்­கா­வி­லுள்ள ஸ்ரீரே பங்­க­பந்து சர்­வ­தேச கிரிக்கெட் மைதா­னத்தில் இன்று காலை ஆரம்பமாகியது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 304...
சுவிட்சர்லாந்தில் St Gallen மாகாணத்தில் அமைந்துள்ள ஹொட்டல் ஒன்று தீக்கிரையானதில் இருவர் கொல்லப்பட்டதுடன் 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. St Gallen மாகாணத்தில் அமைந்துள்ள பிரபல ஹொட்டல் ஒன்றில் ஞாயிறு இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அந்த ஹொட்டலானது முற்றாக சேதமடைந்துள்ளது. அதிகாலை 3.20 மணியளவில் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவப்பகுதிக்கு விரைந்து சென்ற அதிகாரிகள் தீயை கட்டுக்குள்...
உலகம் 2030ஆம் ஆண்டு மிகப்பெரிய இயற்கை பேரழிவை சந்திக்க வாய்ப்புள்ளதாக ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது. ஐ.நாவின் “இன்டர்கவர்மெண்டல் பேனல் ஃபார் கிளைமேட் சேஞ்ச் (Intergovernmental Panel for Climate Change)'' அமைப்பு 400 பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மனித குலத்திற்கே மிகப்பெரிய எச்சரிக்கை விடுப்பதாக அமைந்துள்ளது என கூறப்படுகின்றது. மனிதர்கள் பயன்படுத்தும் வாகனங்களில் இருந்து வெளிவரும் புகைதான் இதற்கு காரணம்...
-மன்னார் நகர் நிருபர்-   எமது நாட்டிலே டெங்கு நோய் மக்களை மிகவும் பாதீத்திருக்கின்றது. அதனை தடுக்க  எமது வீடுகள், நிறுவனங்கள், பாடசாலைகள் பல தெருக்கள் இவை எல்லாம் சுத்தமாக இருந்தால் தான் நாங்கள் டெங்குவை பரப்பும் அந்த நுளம்பை அழிக்க முடியும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்தார். இலங்கை இராணுவத்தின் 69 ஆவது ஆண்டு நிறைவையொட்டி மன்னார் தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில்...
   ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரஷ்யாவின் டானில் மெட்வதேவ் சாம்பியன் பட்டம் வென்றார். பரபரப்பான பைனலில் உள்ளூர் நட்சத்திரம் கெய் நிஷிகோரியுடன் (12வது ரேங்க்) நேற்று மோதிய மெட்வதேவ் (32வது ரேங்க்) 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். நிஷிகோரி பட்டம் வெல்வார் என ஜப்பான்  ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில், மெட்வதேவ் அவர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். இந்த தொடரில் நிஷிகோரி 3வது நிலை...
பிரபல ஆடை வடிவமைப்பாளர் மணிஷ் மல்கோத்ரா வடிவமைத்த ஆடையினை அணிந்து கொண்டு நடிகை ஐஸ்வர்யா ராய் சமீபத்தில் பேஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த பேஷன் நிகழ்ச்சியில் தனது மகள் ஆரத்யாவையும் அழைத்துக்கொண்டு வந்திருந்து, மகளுடன சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்கள் வைரலானது. மேலும், இந்த நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா அணிந்திருந்த ஆடையின் கழுத்து பகுதி சற்று பெரிதாக இருந்ததால் பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருந்துள்ளது. இதனால், தனது மகளுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களில் தனது...
பிக்பாஸ்-2 வெற்றிக்கரமாக முடிந்துவிட்டது, அனைவரும் அவர்கள் வேலையை பார்க்க தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் பிக்பாஸ் பிரபலங்கள் ஒரு சிலர் மட்டும் இன்னும் ஒன்றாக ஊர் சுற்றி வருகின்றனர். அந்த வகையில் ஐஸ்வர்யா, ஜனனி, ரித்விகா, மஹத் என அனைவரும் சமீபத்தில் செக்கச்சிவந்த வானம் படம் பார்க்க சென்றது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் ஜனனி சமீபத்தில் ஒரு பேட்டிக்கொடுத்துள்ளார், அதில் ஐஸ்வர்யாவிற்கு கொடுத்த லிப் கிஸ் குறித்து கேள்வி கேட்டனர். அதற்கு ஜனனி ‘நீங்கள்...