அவுஸ்திரேலியாக்கு எதிரான முதல் டெஸ்டில், பாகிஸ்தான் அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 255 ஓட்டங்கள் எடுத்துள்ளது. அவுஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று துவங்கியது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய இமாம்-உல்-ஹக் மற்றும் முகமது ஹபீஸ் களமிறங்கினர். இருவரும் நிலைத்து நின்று ஆடியதால், அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் இந்த ஜோடியை பிரிக்க சிரமப்பட்டனர். இந்த ஜோடி முதல்...
பெண்கள் மாதவிடாய் காலத்தில் வைட்டமின் சி, இரும்புசத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். அவை அதிக ரத்த இழப்பு, திரவ இழப்புகளை ஈடு செய்யும். ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் துணை புரியும். அதிக வலி, தசைப் பிடிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு நிவாரணமாகவும் அமையும். முளைகட்டிய தானியங்கள், கீரை, வெல்லம், பழங்கள், நட்ஸ்கள், முழு தானியங்கள் போன்றவற்றை சாப்பிடலாம். சமையலில் மஞ்சள் பொடி, இஞ்சி, சீரகம், லவங்கப்பட்டை போன்றவற்றை தவறாமல் சேர்த்துக்கொள்ள...
சீன ஓபன் டென்னிஸ் போட்டி பீஜிங் நகரில் நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் 2-ம் நிலை வீராங்கனையான கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்), தரவரிசையில் 20-வது இடம் வகிக்கும் அனஸ்டசிஜா செவஸ்தோவாவை (லாத்வியா) எதிர்கொண்டார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய வோஸ்னியாக்கி 6-3, 6-3 என்ற நேர் செட்டில் செவஸ்தோவாவை தோற்கடித்து பட்டத்தை கைப்பற்றினார். இந்த ஆட்டம் 1 மணி 27 நிமிடங்கள் நடந்தது. இந்த தொடரில்...
சீரற்ற வானிலையால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு 1,200 படையினர் தயாராக உள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேற்றைய தினம் 200 இராணுவத்தினர், அனுப்பிவைக்கப்பட்டதாக இராணுவ ஊடகப் பேச்சாளர், பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார். கொழும்பு மாவட்டத்தில் 60 பேரும் காலி மாவட்டத்தில் 50 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 110 இராணுவத்தினரும் சேவையில் ஈடுபட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
ஜா எல – ரத்தொலுகம பகுதியில் நேற்று (07) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நேற்று இரவு 9 மணியளவில் ரத்தொழுகம வீடமைப்பு மைதானத்திற்கு அருகில் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. காரொன்றிலிருந்த நபர் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த நபர், ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்தொழுகம பகுதியைச் சேர்ந்த 36 வயதான ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு...
மத்திய மாகாணசபையின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடையவுள்ளது. இதன்படி, சபையின் நிர்வாகத்தை ஆளுநரிடம் கையளிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக் குழுவின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். இதனைத்தவிர, எதிர்வரும் 10ஆம் திகதி வட மேல் மாகாணத்தினதும் எதிர்வரும் 25ஆம் திகதி வட மாகாணத்தின் பதவிக்காலமும் நிறைவடையவுள்ளது. கடந்த வருடம் செப்டெம்பர் மாதத்துடன் வட மத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் பதவிக்காலம் நிறைவடைந்தது. எதிர்வரும் ஏப்ரல் மாதம்10 திகதி மற்றும் 21 ஆம் திகதிகளில் தென் மாகாணசபை...
காணாமற்போனதாகக் கூறப்படும் இன்டர்போல் தலைவர் மெங் ஹொங்வெய்யை (Meng Hongwei) தடுத்துவைத்துள்ளதாக சீனா உறுதிசெய்துள்ளது. ஊழலுக்கு எதிரான விசாரணைக் குழுவினால் அவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக பெய்ஜிங் தெரிவித்துள்ளது. இன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸின் தலைவர் மெங் ஹோங்வெய் கடந்த மாதம் 25 ஆம் திகதி முதல் காணாமற்போயுள்ளதாக அவரது குடும்பத்தினரால் முறையிடப்பட்டிருந்தது. மெங் ஹோங்வெய், பிரான்ஸிலுள்ள இன்டர்போலின் தலைமையகத்திலிருந்து கடந்த 25 ஆம் திகதி சீனாவிற்கு சென்றபோதே காணாமற்போனதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பிரான்ஸ் அரசினால்...
முன்னாள் சட்டமா அதிபர், ஜனாதிபதி சட்டத்தரணி ஷிப்லி அசீஸ் காலமானார். தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், தனது 75 ஆவது வயதில் அவர் காலமானார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தில் முக்கிய பல பதவிகளை வகித்த ஜனாதிபதி சட்டத்தரணி ஷிப்லி அசீஸ், அரசியலமைப்புச் சபையின் உறுப்பினராகவும் செயற்பட்டுவந்தார். சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எச்.ஏ. அசீஸின் புதல்வரான ஷிப்லி அசீஸ், பல ஜனாதிபதி ஆணைக் குழுக்களின் உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார். காலஞ்சென்ற ஜனாதிபதி சட்டத்தரணி ஷிப்லி அசீஸின் ஜனாசா,...
நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. சித்தா, ஆயுர்வேதம் போன்ற இயற்கை மருத்துவங்களில் நெல்லிக்காயைத் தவறாமல் பயன்படுத்துகிறார்கள். நெல்லிக்காய் உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும் குணமுடையது என்பதால் ஜலதோஷத்தை உண்டாக்கிவிடும் என்று சிலர் தவறாக நினைக்கிறார்கள். உண்மையில் ஜலதோஷம் வராமல் நெல்லிக்காய் தடுக்கும். நெல்லிக்காய் வைரஸ் மூலம் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்தும். திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி இருக்கிறது. ஆனால்,...
பற்களில் சொத்தை ஏற்படுவதற்கு முக்கியமான காரணம் இனிப்புப் பொருட்களை அதிக அளவில் உட்கொள்வதாகும். எந்த ஒரு உணவுப் பொருளை உட்கொண்ட பின்னரும், வாயை நீரினால் கொப்பளிக்காததும் பற்சொத்தையை ஏற்படுத்தும். மேலும் பற்களில் சொத்தை உண்டாவதைத் தடுக்க, கனிமச் சத்துக்கள் நிறைந்த உணவை உண்ண வேண்டும். நல்லெண்ணெய் தினமும் காலையில் நல்லெண்ணெயை வாயில் ஊற்றி, 10 நிமிடம் வரை வாயினுள் வைத்து கொப்பளித்தால் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் வெளியேறி, ஆரோக்கியம் மேம்படுவதோடு பற்சொத்தை ஏற்படுவதும்...