அரசியல் கைதிகளிற்காக புறப்படுகின்றது நடைபயண பேரணி! தமிழ் அரசியல் கைதிகளது விடுதலைக்காக மீண்டும் யாழ்.பல்லைக்கழக மாணவ சமூகம் களமிறங்குகின்றது.எதிர்வரும் 8ம் திகதி திங்கட்கிழமை அடையாள கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தொடர்ச்சியாக கவனயீர்ப்பு நடைபயணமொன்றையும் ஆரம்பிக்கவுள்ளது. எதிர்வரும் செவ்வாய்கிழமை யாழ்.பல்கலைக்கழகத்திலிருந்து புறப்படுகின்ற கவனயீர்ப்பு நடைபயணம் ஏ-9 வீதியினூடாக அனுராதபுரம் சிறையினை சென்றடையவுள்ளது. குறித்த நடைபயணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள்,மாணவிகள் இணைந்து பயணிக்கவுள்ள நிலையில் வீதியெங்கும் அவர்களுடன் அரசியல் தலைவர்கள்,பொது அமைப்புக்கள்,மதத்தலைவர்கள்...
  மன்னார் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த நான்கு ஊடகவியலாளர்களை குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர். நாளை தெமட்டகொடவில் உள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் காரியாலயத்துக்கு வருமாறே அவர்களுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. விசாரணைக்கான கடிதம் சிங்கள மொழியிலேயே அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியாவின் சிரேஷ்ட ஊடகவியலாளர் மாணிக்கவாசகர், மற்றும் மன்னாரைச் சேர்ந்த மூன்று ஊடகவியலாளருக்கே இந்த கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடந்த கால அரசு செயற்பட்டது...
வவுனியா நகரபிதா காதலருக்கு வவுனியா பொதுப்பூங்காவை பயன்படுத்தக்கூடாது என்ற அறிவிப்பு காதலர் சங்கத்தை உருவாக்கலாம் ?ஆயிரக்கணக்கான காதலர்கள் மனஉழைச்சல் ஆகலாம் அவர்களுக்கு ஒதுக்குப்புறமாவது கட்டிக்கொடுத்திருக்க வேண்டும்.அல்லது சிறுவர் பூங்கா என பெயர் மாற்றப்படவேண்டும் வவுனியா நகரபிதாவின் அதிரடி அறிவிப்பு – நகரசபை பூங்காவில் காதலர்கட்கு தடை! இலங்கை, வவுனியா வ‌வுனியா ந‌க‌ர‌பிதாவின் அதிரடி ந‌ட‌வ‌டிக்கை! வ‌வுனியாவில் காண‌ப்ப‌டும் சிறுவ‌ர் பூங்காவில் பாட‌சாலை செல்லும் பாட‌சாலை மாண‌வ‌ர்க‌ள் விடுமுறை நாட்க‌ளில்...
நாம் தனித்துவமானவர்கள் யாருடனும் கூட்டு இனையோம். ஆனால் விக்கி ஐயா மட்டும் வந்தால் வண்டியை கட்டுவோம் என அங்கலாய்கும் அடிப்பொடிகளே. கட்சியை வளர்க்க தமிழ் மக்களின் யாதார்த்தபூர்வமான தீர்வை அடைய நீங்கள் தடையாக இருப்பது அசிங்கத்திலும் அசிங்கம். எப்போதவது ஒரு நாள் பட்டினி இருந்து பழக்கம் இருக்கா? தமிழ் மக்களுக்காக போராட புறப்பட்ட அனைத்து போராளிகளும் பசி பட்டினி அறிந்தவர்கள். அயல் நாட்டில் பயிற்சிக்கு சென்றவர்களின் நிலமை சொல்லில் மாளாது. அதை...
சிறுநீரில் உள்ள கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை ஒன்று திரண்டு, சிறுநீர்ப் பாதையில் பல்வேறு அளவுள்ள கற்களை உருவாக்குகிறது. சிறுநீரகக்கல் என்பது சிறிய படிகங்களை கொண்ட ஒரு திடப்பொருள் ஆகும். சிறுநீரகத்திலோ அல்லது சிறுநீரகக்குழாயிலோ ஒரே நேரத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கற்கள் இருக்கும். மேலும் கிட்னி கற்களை உருவாக்க காரணமாக உள்ள சில முக்கிய உணவுகளை பற்றியும் அதனை தவிர்த்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதைப் பற்றியும் பார்ப்போம். பால்...
இந்தோனேஷியா நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால், இதுவரை 1500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் 29ஆம் திகதி இந்தோனேஷியாவின் சிலாவெசி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் உண்டான சுனாமி, கடற்கரை நகரமான பலுவை தாக்கியது. இதில் கிட்டதட்ட அழிவு நிலைக்கு சென்ற அந்நகரத்தில் இருந்த வீடுகள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள், கட்டிடங்கள் அனைத்து தரைமட்டமாகின. சுனாமி தாக்குதல் மற்றும் இடிபாடுகளுக்கு சிக்கி ஆயிரக்கணக்கானோர் பலியாகினர். அந்நாட்டு ராணுவமும்,...
கனடாவில் சந்தேகம் அடைய கூடிய வகையில் சட்டவிரோதமாக உள்ளே நுழைந்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். ஒன்றாறிவோவில் உள்ள Stewart Boulevard-ல் நபர் ஒருவர், முழுவதும் தண்ணீரில் நனைந்த நிலையில் சென்று கொண்டிருந்தார். அவரை அழைத்து பொலிசார் விசாரித்த போது சட்டவிரோதமாக St. Lawrence ஆற்றின் மூலம் படகில் கனடாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தது தெரியவந்தது. குறித்த நபரை பொலிசார் சோதனை செய்ததில் அவரிடம் அமெரிக்க பாஸ்போர்ட் இருந்தது. இதையடுத்து அவரை குடியேற்ற சட்டத்தின் கீழ்...
சர்வதேச நாடுகள் கொடுத்த நெருக்கத்தின் விளைவாக, சுவிஸ் வரித்துறை, பிற நாடுகளுடன் தனது வங்கிக் கணக்கு விவரங்களை முதல்முறையாக பகிர்ந்து கொண்டுள்ள நிலையில், இனி சுவிஸ் வங்கிகளில் கருப்புப் பணத்தை பதுக்க முடியுமா என்னும் கேள்வி எழுந்துள்ளது. முறைகேடாக சம்பாதித்த கருப்புப் பணத்தை பதுக்கும் ஒரு நாடாக சுவிட்சர்லாந்து பார்க்கப்பட்டு வந்த நிலையில், பல உலக நாடுகள் தங்களது நாட்டு மக்கள் சுவிட்சர்லாந்தில் வைத்திருக்கும் வங்கிக் கணக்குகள் குறித்த விவரங்களை...
உயிரிழந்த தந்தையின் சடலத்தை வணக்கி விட்டு, ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சை எழுதச் சென்ற மாணவி சித்தி அடைந்துள்ளார். அம்பாறையில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி தந்தை உயிரிழந்த நிலையில், மாணவி ஒருவர் பரீட்சைக்கு தோற்றியிருந்தார். அம்பாறை, மரியகந்த பிரதேசத்தில் சேர்ந்த 10 வயதான விஹங்கி ஆகர்ஷா என்ற மாணவியே பரீட்சையில் சித்தியடைந்து வியப்பை ஏற்படுத்தியுள்ளார். புலமைபரிசில் பரீட்சைக்கு முதல் நாள் மாணவியின் தந்தை மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி...
கொழும்பின் பல பகுதிகளில் அதிகாலை முதல் அடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்படைத்துள்ளது. பிரதான வீதிகளில் லேசான வெள்ள நிலைமை காணப்படுவதால் போக்குவரத்து நெரிசலும் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை மேலும் அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். மத்திய, வடமேல், வடமத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், மன்னார் மாவட்டத்திலும், 100 மில்லி மீற்றர்களை...