கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை அரசு தவறவிடும் பட்சத்தில் நாடு பின்னோக்கியே செல்லும் என எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரிட்டனின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களுக்கான அமைச்சர் மார்க் பீல்ட் நேற்று கொழும்பில் வைத்து இரா.சம்பந்தனை சந்தித்து பேசியுள்ளார். இதன்போதே இரா.சம்பந்தன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், "கடந்த அரசோடு ஒப்பிடுகையில் இந்த அரசின் செயற்பாடுகளில் மாற்றம் உள்ளது. ஆயினும், அது...
திருகோணமலை குச்சவெளி பகுதியில் பிரதேச செயலாளர் ஒருவரின் கடமைகளை செய்ய விடாது இடைஞ்சல்களை ஏற்படுத்தியதாக கூறப்படும் நபரை இம்மாதம் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று உத்தரவிட்டார். புடவைக்கட்டு,செந்தூர் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பிரதேச செயலாளரின் ஏற்பாட்டில் நடைபெற்ற மணல் அகழ்வு நடவடிக்கைகளுக்கு குறித்த சந்தேகநபர் எதிர்ப்பு தெரிவித்து அவரின் கடமைகளுக்கு இடையூறாக, தகாத...
எந்த நடிகர் பரபரப்பாக பட வேலைகளை கவனிக்கிறாரோ இல்லையோ ரஜினி பேட்ட படத்தில் செம பிஸியாக இருக்கிறார். அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிய வண்ணம் உள்ளன. இப்போது படம் குறித்து ஒரு குட்டி தகவல், அதாவது படத்தில் முக்கிய வேடத்தில் மலையாள சினிமா நடிகரும், நஸ்ரியாவின் கணவருமான பகத் பாசிலை நடிக்க வைக்க படக்குழு அணுகியுள்ளனர். ஆனால் அந்த நேரத்தில் அவர் வரதன் என்ற...
இலங்கையில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள மாநாட்டு நிகழ்வு ஒன்றில் அமெரிக்கா மற்றும் சீனாவின் உயர் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு உதவி ஆலோசகர் பன்காஜ் சரன், அமெரிக்காவின் ராஜாங்க திணைக்கள உதவி செயலாளர் எலிஸ் ஜி வெல்ஸ், சீனாவின் வெளியுறவு அமைச்சின் கடல் வலய திணைக்கள பணிப்பாளர் இ சியான்லியாங் ஆகியோர் இந்த மாநாட்டு நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர். இந்து சமுத்திரமும், எதிர்கால முக்கியத்துவமும் என்ற...
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெறாத மாணவர்களை உள ரீதியாக காயப்படுத்த வேண்டாம் என சுகாதார அமைச்சு பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. சுகாதார அமைச்சின் உளவியல் சுகாதார பிரிவின் பணிப்பாளர் நிபுணத்துவ மருத்துவர் சித்ரமாலி டி சில்வா இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். அவர் தொடர்ந்தும் கோருகையில், தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் உரிய அடைவினை பெற்றுக் கொள்ள தவறிய மாணவர்களை பெற்றோர் திட்டக்கூடாது. அடுத்து வரும் பரீட்சைகளில் சித்தி எய்த முடியும்...
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஏதேனுமொரு வழியில் பதவி நீக்கம் செய்துவிட்டு, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி தலைமையில் ஆட்சியமைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளான தேசிய காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மக்கள் ஐக்கிய முன்னணி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்ற முக்கியத்துவம் மிக்க கூட்டத்திலேயே மேற்படி யோசனை முன்மொழியப்பட்டுள்ளது. நாட்டில் அரசியல், பொருளாதார ரீதியில் பெரும்...
வவுனியாவில் இன்று காலை 5.30 தூக்கில் தொங்கிய நிலையில் வீட்டிற்கு முன்னாள் சடலம் ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற  பொலிஸார்  சடலத்தினை  மீட்டெடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் வசித்த வந்த விவசாயியான 46 வயதுடைய கனகசிங்கம் கதிர்காமநாதன் என்பவர் இன்று காலை 5.30 மணியளவில் வீட்டிற்கு முன்னாலுள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். நேற்று இரவு 10 மணியளவில் நித்திரைக்கு  சென்றதாகவும் ...
கந்தானை – வெலிகம்பிட்டிய பிரதேசத்தில் பெண்ணொருவரை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான அமுனுகொட சஞ்சீவ, ஜாஎல – தடுகம் ஓயாவில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த சந்தேக நபர் அநுராதபுரத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று அதிகாலை பேலியகொடவிற்கு அழைத்து வரும் வழியில் தனக்கு சிறுநீர் வருவதால் வாகனத்தை நிறுத்தமாறு கோரியுள்ளார். பல முறை அவர் இவ்வாறு கோரியதிற்கு அமைய வாகனத்தை நிறுத்திய...
இறக்கக் கண்டி பகுதியில் உள்ள வீடொன்றில் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவரை இன்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இன்று மேற்கொண்ட திடீர் சுற்றி வலைப்பில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் கொழும்பு -08, பொரளை எனும் முகவரியை பிறப்பிடமாகக் கொண்டவரும் வாழை ஊற்று, இறக்கக்கண்டி, நிலாவெளி எனும் முகவரியில் வசித்து வந்த(38)...
காலி தடல்ல பிரதேச கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள தாழை மரமொன்றில் கடந்த 2ம் திகதி தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சிறுமியின் சடலம் தொடர்பான மரண பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் சிறுமியின் சடலத்தின் உடற்பாகங்கள் மேலதிக பரிசோதனைக்காக அரசாங்க ஆய்வாளருக்கு அனுப்பி அதன் அறிக்கை கிடைத்த பிறகு மரணத்திற்கான காரணத்தை கூற முடியும் என கராப்பிட்டிய வைத்தியசாலை வைத்தியர் அஜித் ரத்னவீர தெரிவித்துள்ளார். கடந்த 2ம் திகதி கொடகவெல பல்லேவத்த பிரதேசத்தைச்...