இவ்வருடத்திற்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் இன்றைய தினம் காலை வெளியாகியிருந்தன. நாடளாவிய ரீதியில் பல்வேறு மாணவர்கள் அதி உயர் சித்திகளைப் பெற்று, தமது வீட்டுக்கும் பாடசாலைக்கும் பெறுமை சேர்த்திருந்தனர். இந்நிலையில், முல்லைத்தீவில் வசிக்கும் யுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு தனது கையை இழந்த சிறுமி ஒருவரின் சாதனை அனைவரையும் அவர்பால் ஈர்க்கச் செய்துள்ளது. முல்லைத்தீவு, முள்ளியவளை கலைமகள் வித்தியாலய மாணவி ராகினி 169 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார். கடந்த மூன்று தசாப்த காலமாக...
கடந்த மே மாதத்தின் பின்னர் எரிபொருட்களின் விலைகள் நான்கு தடவைகள் அதிகரித்துள்ளன. மே, ஜுலை, ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் இந்த விலைகளின் அதிகரிப்பு இடம்பெற்றுள்ளதாக கனியவள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, 95 ஒக்டெய்ன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 148 ரூபாவிலிருந்து 161 ரூபாவாகவும், 92 ஒக்டெய்ன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 137 ரூபாவிலிருந்து 149 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது. இதேநேரம், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 109 ரூபாவிலிருந்து...
குழியொன்றுக்குள் விழுந்த இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குருணாகல், பொத்துகர பகுதியிலுள்ள கட்டுபிட்டியாவத்தையிலுள்ள குழியொன்றிலேயே குறித்த இரு சிறுவர்களும் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 4 வயது மற்றும் 13 வயதுடைய சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண்ணொருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் ஆற்றில் குதித்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 30 ஆம் திகதி கந்தானை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் பெண்ணொருவர் உயிரிழந்திருந்தார். இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் நேற்று பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தார். குறித்த சந்தேக நபரை பொலிஸார் சிலாபத்திலிருந்து அழைத்துவரும் போது அவர் தண்டுகம ஓயாவில் குதித்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் இரு பெண்கள் உட்பட ஐவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு கிராண்ட்பாஸ் மாவத்தை பகுதியில் வைத்தே குறித்த ஐவரும் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்களிடமிருந்து சுமார் 70 இலட்சம் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான 650 கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றின் அடிப்படையிலேயே குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார், அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
  நாட்டின் பொருளாதார நெருக்கடியைக் குறைக்கும் பாரிய சக்தி விவசாயிகளிடமுள்ளது - காதர் மஸ்தான் நாடு தற்போது பலவேறான பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ளதை யாவரும் அறிவோம். அதனைத் தடுப்பதற்காக பலவேறான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது எனினும் நிரந்தரமான நாட்டின் பொருளாதார நெருக்கடியைக் குறைக்கும் பாரிய சக்தி விவசாயிகளிடமுள்ளது என மீள்குடியேற்ற புனர்வாழ்வு, வடக்கு மாகாண அபிவிருத்தி பிரதியமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார். வவுனியா தெற்கு தமிழ் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட...
  வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டு குழுவினரால் அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக வெகுசன போராட்டம் அதனை தொடர்ந்து சத்தியாகிரக போராட்டம் என பலமுனைகளிலும் போராட்டங்களை மேற்கொண்டு இலங்கை அரசிற்க்கு அலுத்தத்தை கொடுத்திருந்தது இதன் தொடர்ச்சியாக அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி சிங்கத்தின் வாயில் புலிகளின் போராட்டம் என்ற வகையில் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி அனுராதபுரம் மத்திய பேருந்து...
  தேசிய சுற்றாடல் மாநாடு - 2018 ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (05) முற்பகல் மன்னார் நகர சபை விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
  இலங்கை – இந்திய கூட்டுச்சதியை முறியடிக்க பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல் குமரப்பா – லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகள். https://www.facebook.com/100013461901544/videos/375259312932796/ தமிழீழக் கடற்பரப்பில் பயணித்தவேளை சிறிலங்கா கடற்படையால் பிடிக்கப்பட்டு பலாலி படைத்தளத்தில் வைக்கப்பட்டிருந்த இவர்களை கொழும்பிற்கு கொண்டு செல்வதற்கு சிறிலங்கா – இந்தியப் படைகள் மேற்கொண்டிருந்த கூட்டுச் சதியினை முறியடிக்க 1987ஆம் ஆண்டு இதே மாதம் 5ஆம் நாள் சயனைட் உட்கொண்டு யாழ். மாவட்ட தளபதி லெப்.கேணல்...
அங்கொட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இரு ஆயுதமேந்திய இனந்தெரியாதோரே குறித்த நபர் மீது துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.