நாசாவின் கியூறியோசிட்டி ரேவரில் ஏற்பட்டுள்ள பிழைகள் காரணமாக அது தரவுகளை புவிக்கு அனுப்புவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நாசா தெரிவிக்கிறது. இதனால் செவ்வாய் மீதான ஆராய்ச்சி நடவடிக்கைகளில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அண்மையில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி கடந்த வாரம் சனி இரவன்று மேற்படி கோளாறு ஏற்பட்டதை விஞ்ஞானிகள் அறிந்திருந்தனர். ரோவரிலிருந்து தரவுகள் நல்லபடியாக வந்துகொண்டிருந்த போதிலும், நாசாவால் அதன் நினைவகத்திலிருந்து சில தகவல்கனைப் பெறமுடியாமல் போயுள்ளது. சில நாட்கள் முயற்சி செய்தும் கூட நாசாவால்...
சிறிய கோளொன்று புளுட்டோவிற்கு அப்பால் நமது சூரியனைச் சுற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. "Goblin" என அழைக்கப்படும் "2015 TG387" எனும் இக் கோளானது 2015 இல் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், தற்போது ஒக்டோபர், 1 ஆம் திகதியே இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பனிப்பந்து போல காட்சியளிக்கும் இக் கோளானது 300 கிலோமீட்டர்கள் விட்டமுடையது. இதன் ஒழுக்கு புவிக்கும் சூரியனுக்குமிடைப்பட்ட தூரத்தைப் போல 2,300 மடங்கு தூரமானது. மிக நீண்ட ஒழுக்கில் சூரியனை வலம்வரும் இக்கோளானது அதன்...
உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்ற பழமொழியில், நாம் சாப்பிடும் உணவில் சேர்க்கப்படும் உப்பிற்கு எவ்வளவு அவசியம் உள்ளது என்பதை சொல்கிறது. அத்தகைய உப்பை பயன்படுத்தி வீட்டில் இருக்கும் ஏழ்மை விலக்கவும், தீய சக்திகளை விரட்டவும் செய்து செல்வத்தை அதிகரிக்கலாம். மேலும் உப்பு எதிர்மறை சக்தியை வெளியேற்றும் ஒரு பொருள். கைக்குள் உப்பை வைத்துக் கொண்டு நேர்மறையாகப் பேசினால் உடலில் நேர்மறை சக்தி அதிகரிக்கும். அதிர்ஷ்டம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? தினமும் அதிகாலையில்...
நாம் உண்ணும் ஆரோக்கியமான உணவுகள்தான் நம் உடல் மற்றும் உயிருக்கும் ஆதாரமாகவும் விளங்குகின்றன. மேலும் காலை உணவே நம் உடலுக்கும் மூளைக்கும் தேவையான சுறுசுறுப்பைத் தரும். எனவே காலை வேளையில் நாம் எந்த உணவை எவ்வாறு எடுத்துக்கொள்ளலாம், எவற்றைத் தவிர்க்கலாம் என்பதைப் பற்றி பார்ப்போம். பருத்திப்பால் இரவு தூங்க செல்வதற்கு முன்பு பருத்தி விதைகளைத் தேவையான அளவு ஊறவைத்து பின்பு காலையில் அதில் இருந்து பால் எடுத்து அதனுடன் தேங்காய்ப் பால் மற்றும் பசும்பால்...
மீனவர்கள், மீன்பிடிப் படகுகள் மூலம் பிரான்ஸிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்கும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாக மீன்பிடிப் படகு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். பலநாட்கள் கடலில் தங்கியிருந்து மீன்பிடிக்கக் கூடிய வசதியுடைய படகுகள் மூலம் மீன்பிடிக்கச் செல்லும் சில மீனவர்கள் அரசியல்வாதிகளின் ஒத்துழைப்புடன் பிரான்ஸின் தீவு ஒன்றில் குடியேறும் புதிய முயற்சியொன்றில் ஈடுபட்டுள்ளனர். பல நாட்கள் கடலில் தங்கியிருந்து மீன்பிடிக்கச் செல்லும் சில மீனவர்கள் நடுக் கடலில் குறித்த படகினை நீரில் மூழ்கச் செய்துவிட்டு, வேறும் படகு...
வவுனியாவில் இன்று பொலிஸாரின் தெடுதல் நடவடிக்கையின் போது வாகனம் ஒன்றில் கேரள கஞ்சாவினை எடுத்துச் சென்ற 3 இளைஞர்களைக் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 12 இலட்சம் ரூபா பெறுமதியான கஞ்சாவினை கைப்பற்றியுள்ளதாகவும் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் போதை பொருள் ஒழிப்புப்பிரிவினர் தெரிவித்துள்ளனர். இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுரா அபேவிக்கிரம தலைமையில் கீழ் செயற்படும் போதை பொருள் ஒழிப்புப்பிரிவினர் இன்று அதிகாலை ஓமந்தை...
திருகோணமலையில் காதலனுக்கு எதுவும் செய்ய வேண்டாம் என கடிதம் எழுதிவிட்டு இளம் யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்புள்ளை பகுதியில் காதலித்து வந்த காதலனுடன் தொலைபேசியில் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் கோபம் கொண்ட யுவதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. திருகோணமலை, சிறிமாபுற பகுதியைச் சேர்ந்த அமாளிகா விராஐனி சொய்சா என்ற 22...
யாழ் குடாநாடு முழுவதும் வெள்ளத்தினால் மூழ்கிப் போகும் அபாயம் உள்ளதாக சிரேஷ்ட பொறியாளர் ம.இராமதாசன் எச்சரித்துள்ளார். சட்டவிரோத கட்டட நிர்மாணங்களால் ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதுடன், நிலத்தடி நீரும் இல்லாமல் போகும் அபாயமுள்ளதாக தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பொறியிலாளர் கருத்து வெளியிட்டார். கடந்த காலங்களில் யாழ்ப்பாண நகரத்தில், மாநகர சபையின் அனுமதியில்லாது பல்வேறு கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக வெள்ள நீர் ஓடுவதற்காக நிர்மாணிக்கப்பட்ட கால்வாய்கள் மூடப்பட்டுள்ளன. இன்றும் யாழில்அனுமதியற்ற கட்டட...
கொழும்பு கொள்ளுப்பிட்டியில் விளையாட்டு துப்பாக்கியை காட்டி நபர் ஒருவர் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளார். கொள்ளுப்பிட்டியில் விசா அனுமதி பத்திரம் வழங்கும் நிலையத்தில் விளையாட்டு துப்பாக்கியை காட்டி 55000 ரூபாவை கொள்ளையடித்த நபர் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார். எனினும் அந்த நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரி, நுட்பமான முறையில் சந்தேக நபரை கைது செய்துள்ளார். அந்த நிலையத்தின் பணம் அறவிட்டாளர் பம்பலப்பிட்டி பிரதான அலுவலகத்திற்கு பணம் கொண்டு செல்ல ஆயத்தமாகியுள்ளார். அதற்காக தயார் செய்யப்பட்ட பண பார்சலை குறித்த...
பெங்களூர் நகரில் ஒரே நாளில் 33 தொன்  பிளாஸ்டிக் பொருட்கள் சேகரித்து  கின்னஸ் சாதனை படைத்துள்ளார்கள். பெங்களூர் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், நாடு முழுவதும் நேற்று முன்தினம் காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பல்வேறு இடங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பெங்களூர் மாநகராட்சி சார்பில் ‘பிளாக் ரன்’ என்ற பெயரில் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து சுற்றுச் சூழலை பாதுகாக்கும்...