பேருவளை பன்னில பகுதியில் இளைஞர் ஒருவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் ஐந்து இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
26 வயதுடைய இளைஞன் ஒருவர் நேற்றிரவு பேருவளை, பன்னில பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது இனந்தெரியாதோர் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.
இதனால் படுகாயமடைந்த இளைஞன் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திரசிகிச்சைக்குட்படுத்தப்பட்டார்.
இந் நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகத்தின் பேரில்...
-மன்னார் நகர் நிருபர்-
மன்னார் 'சதொச' வளாகத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் புதன் கிழமை (3) 79ஆவது தடவையாக மீண்டு் அகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மவட்ட நீதவான் ரி.சரவண ராஜா மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது.
பல்வேறு கேள்விகள் சந்தேகங்களை ஏற்படுத்தக்கூடிய வகையில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்று புதன் கிழமை அகழ்வு பணிக்கு...
(நோட்டன் பிரிட்ஜ் நிருபர்)
மலையகத்தின் முதுபெரும் கல்வியாளரும், பாராளுமன்ற மொழிப்பெயர்பாளரும், உதவிக்கல்வி பணிப்பாளரும், நோர்வூட் தமிழ் மகா வித்தியாலய ஸ்தாபகருமான அமரர். சின்னையா கணகமூர்த்தி அவர்களின் ஓராண்டு நினைவு அஞ்சலி கூட்டம் 06.10.2018 காலை 09 மணிக்கு இடம்பெறவுள்ளது.
நோர்வூட் நகர் ஸ்ரீ சிவசுப்ரமணியர் ஆலய மண்டபத்தில் இடம்பெறவுள்ள அஞ்சலி கூட்டத்திற்கு சமூக ஆர்வலர்கள் கல்விச் சமூகத்தினர் சமூக நலன் விரும்பிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டு குழுவினர் அழைப்பு விடுக்கின்றனர்.
அரசியல் கைதிகள் விவகாரத்தில் அரசியல் ரீதியிலான தீர்மானமே தேவை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
Thinappuyal News -
ஜனாதிபதியை கொழும்பில் சந்திக்கும் எதிர்க்கட்சித் தலைவர்
அரசியல் கைதிகள் விவகாரத்தில் அரசியல் ரீதியிலான தீர்மானமே தேவை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் அவர் ஜனாதிபதியுடன் இன்று மாலை கொழும்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான ஜனாதிபதி விசேட செயலணியின் கூட்டம், ஜனாதிபதி தலைமையில் இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டம் முடிவடைந்த பின்னர்...
துரோகிகளை துரத்தி துரத்தி சுட்டோம் கருணா வெளிபடுத்தும் துரோகிகள் பட்டியல் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ஈ.பி.டி.பி போன்ற இயக்கங்கள்
Thinappuyal News -
துரோகிகளை துரத்தி துரத்தி சுட்டோம் கருணா வெளிபடுத்தும் துரோகிகள் பட்டியல் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ஈ.பி.டி.பி போன்ற இயக்கங்கள்
https://www.facebook.com/tpntpnnews/videos/327725817982510/
இறுதித்தோட்டா இருக்கும்வரை களமாடிய மாவீரர்கள்...ஆம் அவர்கள் எமக்காகத்தான் வீழ்ந்தார்கள்!
வித்துடலாகிப்போன தம் தோழர்களின் உடல்களை அரணாய்க்கொண்டு அவர்கள் வீழும்வரை போரிட்டார்கள்.
இறுதித்தோட்டா இருக்கும்வரையிலும் அவர்கள் துப்பாக்கிகள் வெடித்துக்கொண்டேதானிருந்தன..
அவர்களுக்கு அழகான குழந்தைகள் இருந்தன, அன்பான மனைவி கணவன் இருந்தனர். பாசம்கொண்ட உறவுகள் இருந்தன, பத்துமாதம் சுமந்துபெற்ற தாய் தந்தையர் இருந்தனர்,,
ஆயினும் அவர்கள் அனைவரையும் விட இந்த மண்ணையும் மக்களையும் நேசித்தார்கள்.
தங்கள் சாவினை உறுதிசெய்துகொண்டுதான் அவர்கள் இரட்டைவாய்க்கால் கடந்தார்கள்.
முள்ளிவய்க்கால்வரை நம்பிவந்த மக்களை...
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் முழுமையான வெற்றியை அடைந்த ரித்விகா தற்போது விஜய்சேதுபதி படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரித்விகா வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்ட நொடியில் அவர் விட்ட கூச்சலுக்கும், சிந்திய கண்ணீருக்கும் அளவே இல்லாமல் இருந்தது. ஆம் பிக்பாஸ் வீட்டில் எந்தவொரு கெட்டப்பெயர் வாங்காமல் கடைசிவரை வந்து வெற்றியைத் தட்டிச் சென்றுள்ளார்.
பிக்பாஸ் வெற்றியில் கிடைத்த 50லட்சம் பரிசுப் பணத்தினை அவர் என்ன செய்யப்போகிறார் தெரியுமா? ஆம் 50 லட்சத்தில் 25...
இஸ்ரேல் நாட்டில் தொழில் வாய்ப்பை பெற்று தருவதாக கூறி பண மோசடி செய்த ஒருவரை, இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
கம்பளை - புஸ்ஸசல்லாவை பகுதியில் வைத்து இந்த சந்தேகநபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நபர் சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரம் இன்றி ஆட்களை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதற்காக பணத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் சந்தேகநபரை கைது செய்யும் போது பணம் பெற்றுக்...
இயற்கை முறையில் விளைவிக்கப்படும் காய்கறிகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வகையான நோயைத் தீர்க்கும் குணமுண்டு.
அந்த வகையில் 12 நோய்களை குணப்படுத்தும் குறிப்பிட்ட சில காய்கறிகளைப் பற்றி பார்ப்போம்.
12 நோய்களை தீர்க்கும் காய்கள்
சிறுநீரகக் கோளாறு – கத்தரிக்காய்
கத்திரிக்காயில் வைட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து உள்ளது. உடல் இயக்கத்தையும் சிறுநீரக செயல்பாட்டையும் சீராக்கும். வாய்ப்புண்ணை ஆற்றும் சக்தி கொண்டது.
பக்கவாதம் – கொத்தவரங்காய்
சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அழித்து புதிய செல்களை உருவாக்கும்...
உலக சிறுவர் தினத்தன்று தம்புள்ளை பிரதேசத்தில் நண்பர் ஒருவரின் வீட்டில் தனிமையில் இருந்த பாடசாலை மாணவி மற்றும் மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மாணவி மருத்துவ பரிசோதனைக்காக தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதுடன் மாணவனை பொலிஸார் தடுத்து வைத்துள்ளனர்.
15 வயதான பாடசாலை மாணவியும், 18 வயதான பாடசாலை மாணவனும் காதலித்து வந்துள்ளனர். தம்புள்ளை நகருக்கு அருகில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் இவர்களின் காதல் விடயத்தை அறிந்து...