இந்த வாரம் நோர்வேக்கு விஜயம் செய்யும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அதையடுத்து லண்டனுக்கும் விஜயம் மேற்கொள்ள உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் இன்றைய தினம் நோர்வேக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார். அங்கு நோர்வே பிரதமர் எர்னா சோல்பெர்க் உள்ளிட்ட ஏனையோருடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரியவருகிறது.
அத்துடன் அவர் தமது விஜயத்தின்போது பல வணிக கூட்டங்களில் கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேநேரம், 3ஆம் திகதி முதல் 5ஆம் திகதிவரை...
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் மத்திய கல்லுரி மாணவனான விஜயகாந்த் வியஸ்காந்த் என்ற 17 வயது இளைஞனுக்கே இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
40 வருடங்களின் பின்னர் முதல் முறையாக யாழ்ப்பாண மாவட்ட இளைஞன் ஒருவர் 19 வயதுக்குட்பட்ட தேசிய கிரிக்கெட் அணியில் இணைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
வலது கை பந்துவீச்சாளரான அவர் 19 வயதுக்குட்பட்ட...
தடுப்புக் காவலில் விசாரணைகளை எதிர்நோக்கி இருக்கும் 54 தமிழ் அரசியல்கைதிகளில் பெரும்பாலானோரை கட்டம் கட்டமாக ஏதோ ஒரு வகையில் விடுவிப்பதற்கான யோசனைத் திட்டம் ஒன்றை சட்டமா அதிபர் முன்வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சில பிரதான வழக்குகளுடன் சம்பந்தப்பட்டோரை விடுவிக்கும் முடிவை தாம் எடுக்க முடியாது என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதி அமைச்சர் தலதா அத்துகோரளவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி...
இலங்கை கால்பந்தாட்டச் சம்மேளனம் நடத்தும் எவ்.ஏ. கிண்ணத்துக்கான கால்பந்தாட்டத் தொடரில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஆட்டத்தில் நாவாந்துறை சென். நீக்கிலஸ் அணி வெற்றிபெற்றது.
கொழும்பு சிற்றி லீக் கால்பந்தட்ட மைதானத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஆட்டத்தில் நாவாந்துறை சென். நீக்கிலஸ் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து யாழ்ப்பாணம் நாவாந்துறை சென். மேரிஸ் விளையாட்டுக் கழக அணி மோதியது.
கோல்கள் இல்லாமல் முடிந்தது முதல் பாதி. இரண்டாவது பாதியிலும் அதேநிலமைதான். நிர்ணயிக்கப்பட்ட நிமிடங்களின் நிறைவில் இரண்டு...
இலங்கையின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாக அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் AccuWeather அமைப்பு எச்சரித்துள்ளது.
இந்த வார இறுதியில் தென்னிந்தியா மற்றும் இலங்கையின் பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதற்கான ஆபத்துக்கள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாளாந்தம் பெய்து வரும் மழைவீழ்ச்சியில் ஏற்பட்ட அதிகரிப்பே இதற்கு பிரதான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒகஸ்ட் மாதத்தில் கேரளா மாநிலத்தின் பல பகுதிகள்வெள்ளத்தில் மூழ்கியமையினால் சுமார் 500 பேர் உயிரிழந்தனர்.
கடந்த வாரங்களில் கடும் வறட்சியான...
ஒரு கொள்ளைக்கார கும்பலை விரட்டிவிட்டு இன்னொரு கொள்ளைக்கார கும்பலை ஆட்சிக்கு கொண்டுவந்துவிட்டோம். மீண்டும் இரண்டில் ஒரு கொள்ளைக்கார கும்பலுக்கு ஆட்சியை கொடுக்க இடமளிக்க கூடாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கருத்துக் கூறுகையில்,
நல்லாட்சி அரசாங்கம்...
விடுதலைப்புலிகள் அமைப்பின் திலீபனின் நினைவு தினத்தை அனுஸ்டிப்பதற்கு அனுமதித்ததன் மூலம் அரசாங்கம் பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என தெரிவிக்கப்படுவதை வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரோ நிராகரித்துள்ளார்
ஐலன்டிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே ரெஜினோல்ட் குரே இதனை தெரிவித்துள்ளார்.
தீலிபனின் நோக்கம் என்னவாகயிருந்தாலும் அவர் விடுதலைப்புலிகள் சார்பில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தார் என்பதை சுட்டிக்காட்டியுள்ள ஆளுநர் திலீபனை நினைவுகூறுவதன் மூலம் விடுதலைப்புலிகளுக்கு புத்துயுர் அளிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்தத்தின் பின்னரும் அரசாங்கம்...
இலங்கையில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளமை தொடர்பில் அமைச்சர்கள் மத்தும பண்டாரவும் மங்கள சமரவீரவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கடுமையான விவாதத்தில் ஈடுபட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன
நேற்யை அமைச்சரவை கூட்டத்தின்போதே ஜனாதிபதியுடன் இரு சிரேஸ்ட அமைச்சர்களும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையின் பொலிஸ்மா அதிபரின் திறமையின்மையாலேயே குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன என ஜனாதிபதி குற்;றம்சாட்டியதை தொடர்ந்தே அமைச்சர்கள் இருவரும் ஜனாதிபதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இருவரும் ஜனாதிபதியின் கூற்றை நிராகரித்துள்ளதுடன் புள்ளிவிபரங்களை சுட்டிக்காட்டி தற்போது குற்றச்செயல்கள் குறைவடைந்துள்ளன...
கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயில் அட்டன் பகுதியில் தடம்புரண்டுள்ளது.
பயனிகளுக்கு எவ்விதமான சேதமும் ஏற்பட்வில்லையெனவும் மலையகத்திற்கான ரயில் சேவை எவ்வித பாதிப்பும் இல்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு ஏற்பட்ட சம்பவத்தினால் பதுளை கொழும்பு சேவை வழமை போல் இயங்குவதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் எதிர்கால சந்ததியினருக்கு சமூகவலைத்தளங்களினால் ஏற்படவுள்ள அழுத்தங்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளமையால், இலங்கையில் முகநூலை தடை செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அரச தகவல் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை இலங்கையில் தடை செய்ய தீர்மானிக்கப்பட்டு வருவதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திரானி பண்டார தெரிவித்துள்ளார்.
சிறுவர் தினத்தை முன்னிட்டு அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்...