யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீதான கொலைக் குற்றச்சாட்டுப் பத்திரத்தில் 42 சாட்சிகள் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 20 பேர் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகினர். எனினும் சுருக்கமுறையற்ற விசாரணை வரும் நவம்பர் 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டியில் 2016ஆம் ஆண்டு ஒக்ரோபர் 20ஆம் திகதி...
பிள்ளைகள் நல்ல வசதியோடு இருந்தும், பெற்றோர்களை தாங்களே பார்த்துக்கொள்ளாமல் முதியோர் இல்லங்களில் சேர்க்கும் கொடுமையும் நம் நாட்டில் அதிகரித்து வருகிறது. இந்நிலை மாறவேண்டும் உலகம் முழுவதிலும் உள்ள மூத்த குடிமக்களை மதிக்கவும், மரியாதையை செலுத்தவும், குடும்பம், சமூகம் மற்றும் நாட்டுக்கு அவர்கள் ஆற்றிய சேவைகளை நினைவு கூறும் வகையிலும், அவர்களின் அறிவு, ஆற்றல் மற்றும் சாதனைகளை பார்த்துக் கற்றுக்கொள்ளவும் மக்களுக்கு எடுத்துரைக்கும் நாளாக சர்வதேச முதியோர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வயது முதிர்ந்தோர் எதிர்கொள்ள வேண்டிய சவால்களை கருத்தில் கொண்டுதான் முதியோருக்கான...
  வவுனியாவில் ஆவாக்குழுக்களுக்கு எதிராக பொலிசார் தீவிர நடவடிக்கை 30 பேர்ருக்கு தீவிர விசாரனை தொடர்கிறது பொதுமக்களின் முறைப்பாடுகளை கருத்தில் கொண்ட வவுனியா மாவட்ட போக்குவரத்து பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார், நேற்று மாலை 3.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணிவரை திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். குருமன்காடு, வைரவபுளியங்குளம், புகையிரத நிலைய வீதி, மாடசாமி கோவிலடி, யங்ஸ்டார் மைதானத்திற்கு அருகே போன்ற பகுதிகளில் மாலை நேரங்களில் பாடசாலை இளைஞர்கள்...
மீளா அடிமை உமக்கே ஆனோம்!!! உள்ளூராட்சி தேர்தல் நடக்கவிருக்கும் காலமிது. கட்சிகள் தமது பிரச்சாரங்களை புழுகுகளை கட்டவிழ்த்து விடும் போர்க்காலமிது. இதில் இப்படியொரு பதிவு . கண்ணில் தோன்றியதை ஏதாவது யாருக்காவது சிந்தனையை தூண்டுமாயின் அது மிகவும் நன்மையாகும் விடயம் . மீளா அடிமை உமக்கே ஆனோம்!!! எம் மக்கள் உயிரை இழந்தனர். உயிரின் உயிரானவரை இழந்தனர். வாழ்வை இழந்தனர். எல்லாப் பக்கமும் வன்முறை சூழ்ந்து கொண்டது. வறுமை சூழ்ந்து வற்றிப் போனது...
பிரித்தானியாவில் சோதனைக்கு சென்ற இடத்தில் பொலிசார் ஒருவரை சுட்ட நிலையில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெர்மிங்காம் நகரில் உள்ளூர் நேரப்படி காலை 5 மணிக்கு பொலிசார் ஒரு வீட்டுக்கு சென்றுள்ளனர். துப்பாக்கிகளை அனுமதி இல்லாமல் அங்கிருப்பவர்கள் வைத்துள்ளார்கள் என்ற அடிப்படையில் சோதனை செய்யவே பொலிசார் சென்றார்கள். சென்ற இடத்தில் பொலிசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் காயமடைந்தார். அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிருக்கு ஆபத்தில்லை என தெரியவந்துள்ளது. அந்த வீட்டில் இருந்த...
வர்த்தக சேவை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடக்கூடாது என இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது கவலைக்குரிய விடயம் என திலகரத்னே தில்ஷான் கூறியுள்ளார். இலங்கை அணியின் முன்னாள் வீரர் தில்ஷான் அளித்துள்ள பேட்டியில், நாங்கள் தேசிய அணியில் விளையாடிய காலப்பகுதியில் சில நாட்களில் போட்டிகள் முடிவடைந்து விமான நிலையத்திலிருந்து நேராக வர்த்தக சேவை கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்வோம். வர்த்தக சேவை கிரிக்கெட் போட்டி மிகவும் சிறந்தது. மாகாணங்களுக்கு இடையிலான போட்டியைவிட சிறந்தது. பல...
இந்திய அணியின் இளம் வீரரான கருண்நாயன் நான் தான் கோஹ்லியை விட பிட்டான நபர் என்று கூறியுள்ளார். ஆசியகோப்பை தொடர் முடிவு பெற்ற நிலையில், இந்திய அணி, மேற்கிந்திய தீவு அணியுடன் 2 டெஸ்ட் போட்டி, 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதற்கான இந்திய அணி வீரர்களின் பட்டியல் வெளியானது. அதில் முரளி விஜய் ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா, கருண் நாயர் ஆகியோருக்கு...
இலங்கை அணி வீரரான மேத்யூஸ் மிகவும் முக்கியமான வீரர் எனவும், விரைவில் உடற்தகுதி பெற்று நடைபெறவுள்ள உலகக்கோப்பையில் அவர் இருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் சங்ககாரா கூறியுள்ளார். மேத்யூஸ் தலைமையிலான இலங்கை அணி, சமீபத்தில் ஆசியகோப்பை தொடரில் மோசமான தோல்விகளை சந்தித்தது. இதனால் மேத்யூசுக்கு கேப்டன் பதவி பறிபோனதுடன், நடைபெறவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலிருந்தும் நீக்கப்பட்டார். இதற்கு பல காரணங்களை இலங்கை அணியின் பயிற்சியாளர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இலங்கை அணியின்...
நமது உடலின் செயல்பாடுகள் அனைத்தும் முறையாக செயல்படுவதற்கு தண்ணீர் இன்றியமையாத ஒன்றாகும். மேலும் உடலில் 70 சதவீத தண்ணீர் தசைகளிலும், 90 சதவீத தண்ணீர் மூளையிலும் மற்றும் 83 சதவீத தண்ணீர் இரத்தத்திலும் கலந்து உள்ளது. இந்த தண்ணீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வருவதின் மூலம் பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன. வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், நமது குடல் சுத்தமாக்கப்படும்....
உடலில் தேங்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைக்க பல வழிகள் உள்ளது. ஆனால் எவ்வித பக்கவிளைவுகளும் வராமல் இயற்கையான முறையில் கெட்ட கொழுப்பை கரைக்க சிறந்த உணவுப் பொருட்களைப் பற்றி பார்ப்போம். பூண்டு பூண்டை நன்றாக வேக வைத்து பாலில் கலந்து காலை மாலை என இருவேளையும் குடித்து வந்தால் உடம்பில் கெட்ட கொழுப்பு குறைந்துவிடும். ஆப்பிள் நார்ச்சத்து அதிகம் நிறைந்த உணவுப் பொருட்ளான ஆப்பிள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை சேரவிடாமல் தடுக்கும். சோற்றுக் கற்றாழை தினமும்...