நாட்டின் எதிர்காலம் கல்வி கற்ற எதிர்கால தலைமுறையின் கைகளிலேயே தங்கியுள்ளதென்றும் இலவசக் கல்வியை பலப்படுத்துவதற்கு கடந்த மூன்றரை வருட காலமாக அரசாங்கம் பல்வேறு முக்கிய நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுத்துள்ளதென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இலவசக் கல்வியை பலப்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு விரிவான நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில் அதன் நன்மைகளை பெற்றுக்கொண்ட அனைவரும் சிறந்த பிரஜைகளாக தாய் நாட்டுக்காக தமது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டுமென்று ஜனாதிபதி தெரிவித்தார்.
கொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க கல்லூரியில் புதிதாக...
கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படுகின்ற பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளால் தினமும் ஆபத்தை எதிர்நோக்குவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் முறிகண்டியிலிருந்து முகமாலை வரை 25 க்கு மேற்பட்ட பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் உண்டு இதில் பல முக்கியமான வீதிகளாக நாளாந்தம் நூற்றுக்கணக்கான பொது மக்கள் பயணிக்கின்ற வீதிகளாகவும் காணப்படுகின்றன.
இந்த பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளில் கடந்த காலங்களில் பல விபத்துக்களும் இடம்பெற்று பலரும் உயிரிழந்துள்ளனர்.
எனவே இப் பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளின் ...
தேசிய பாதுகாப்பு, பொருளாதார நெருக்கடி, பிரமுகர்கள் கொலை சூழ்ச்சி உட்பட முக்கிய சில விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்காளிக் கட்சிகளுக்கு அவசர அழைப்பு விடுத்துள்ளார்.
இத்தகவலை பொது எதிரணியின் தலைவர் தினேஷ் குணவர்தன ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இதன்படி இன்று மாலை 5.30 மணிக்கு மஹிந்தவின் இல்லத்தில் பொது எதிரணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் முகாமிட்டு சமகால அரசியல் நிலை சம்பந்தமாக அலசி ஆராயவுள்ளனர்.
குறிப்பாக வரவு -...
அம்பலாந்தோட்டை வலவெட்ட பகுதியில் இன்று அதிகாலை 17 வயது யுவதியொருவர் ஆயுதம் தாங்கிய கும்பலொன்றினால் கடத்தப்பட்டுள்ளார்.
ஆயுதங்களுடன் வீட்டிற்குள் பிரவேசித்த ஆறுபேர் அடங்கிய கும்பல் 17 வயது யுவதியின் தந்தையையும் சகோதரியையும் தாக்கிய பின்னர் யுவதியை கடத்திச்சென்றுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டின் கதவையும் யுவதி உறங்கிக்கொண்டிருந்த அறையின் கதவையும் உடைத்து உள்ளே நுழைந்த கும்பல் யுவதியை கடத்திச்சென்றுள்ளனர் என தெரிவித்துள்ள பொலிஸார் வீட்டின் மேல் குறிப்பிட்ட கும்பல் துப்பாக்கி பிரயோகத்தை...
நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு பிறகு அவரது மகள்கள் சினிமாவில் ஹீரோயின் ஆகும் முனைப்பில் உள்ளனர். முதல் மகள் ஜான்வி கபூர் நடித்த முதல் படத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.
அதுமட்டுமின்றி இரண்டாவது மகள் குஷி கபூரின் புகைப்படங்களும் அடிக்கடி வைரலாகின்றன. தற்போது அவர் அம்பானி மகள் இஷாவின் நிச்சயதார்த்தத்திற்கு மிக கவர்ச்சியான உடையில் சென்றபோது எடுத்த புகைப்படம் வெளிவந்துள்ளது.
அவை இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன.
மொனராகலையில் வீதியால் சென்ற பெண்ணெ வழிமறித்த மர்ம குப்பல் வலுக்கட்டாயமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளனர்.
தனியார் நிறுவனம் ஒன்றில் பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த பெண்ணை வீதியில் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
தனமல்வில செவனகல பொலிஸ் பிரிவில் கிரிவெவ பிரதேசத்தை சேர்ந்த 48 வயதான பெண் ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் இருவர் அவரை வீதிக்கு அருகிலுள்ள பகுதிக்கு இழுத்து சென்று கொடூரமாக துஷ்பிரயோகம்...
ஈரானில் சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்பட்ட மதுபானங்களை அருந்திய 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஈரானில் மக்கள் கள்ளச்சந்தையில் கிடைக்கும், வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட மற்றும் வீட்டிலேயே தயார் செய்யப்பட்ட மதுபானங்களை வாங்கி குடிப்பதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.
குறித்த நிலையில் ஹோர்மோஸ்கான், வடக்கு கோர்சன், அல்போர்ஸ், கோஹிலயா மற்றும் போயர் அஹ்மத் ஆகிய மாகாணங்களில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மதுபானங்களை வாங்கி குடித்த 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 300-க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு...
நாடளாவிய ரீதியில் நேற்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் 5 கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
ஊறுகஸ்மங்ஹந்திய, ஹல்துமுல்லை, சீதுவ மற்றும் ஜா-எல ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இக்கொலைகள் பதிவாகியுள்ளதாகவும் இவற்றில் மூன்று கொலைகளின் பின்னணியில் பாதாள உலக குழுவினரின் தொடர்புகள் இருப்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஊறுகஸ்மந்திய – ரத்தொடவில பகுதியில் வீடொன்றிற்குள் நேற்று முன்தினம்...
சரத்பொன்சேகாவிற்கு எதிரான நடவடிக்கை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிலர் அமைச்சர்கள் தமது கூட்டுப்பொறுப்பை புறக்கணித்துவிட்டு அரசாங்கத்தின் தீர்மானங்களை விமர்சனம் செய்வது குறித்து ஜனாதிபதி சீற்றத்துடன் உள்ளார் இது குறித்து அவர் பிரதமருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் போது ஜனாதிபதியை வெளிப்படையாக விமர்சித்து வரும் சரத்பொன்சேகாவிற்கு எதிராக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து...
யாழ். பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் இன்று முன்வைக்கப்படவுள்ளது.
போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு, கொள்கை திட்டமிட்டல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு இணைந்து இந்த யோசனையை முன்வைக்க உள்ளன.
பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் இந்தியாவுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருந்தன.
இதற்காக இந்திய அதிகாரிகள் குழு ஒன்று பலாலிக்கு விஜயம் செய்து, ஆய்வுகளை நடத்தி...