பிரித்தானிய மகாராணி எலிசபெத் அவர்களின் குதிரை வண்டியின் பின்னால் பாதுகாவலராக இருந்தவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
21 வயதான Ollie Roberts என்பவர் பிரித்தானிய மகாராணியின் குதிரை வண்டி பாதுகாவலராக இருந்தவர். இவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் ஆவார். இதன் காரணத்தினாலேயே இவர் பிரித்தானிய மகாராணியுடன் இவர் செல்லும்போது இவர் மீது தனிக்கவனம் வந்தது.
ஊடகங்களில் இவர் குறித்த செய்திகள் அதிமாக வெளியாக ஆரம்பித்தன.
இந்நிலையில் இவர் பணியில் இருந்து பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக அரண்மனை வட்டாரரம்...
இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தோனேசியாவின் சுலேவேசி தீவில் கடந்த வெள்ளிக்கிழமையன்று 7.5 ரிக்டர் அளவில் நிலடுக்கமும், 170 முறை அதிர்வுகளும் ஏற்பட்டதையடுத்து பலு, டோங்கலா பகுதிகைளை சுனாமி தாக்கியது.
இந்த நிலடுக்கம் மற்றும் சுனாமி தாக்கம் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்த அந் நாட்டு அரசாங்கம் உயிரிழந்தோரின் முழுமையான தொகையினை முழுமையாக அறிவிக்கவில்லை.
அத்துடன் இதனால் பல கோடி மதிப்பிலான சொத்துகளுக்கும் பாரிய...
மல்வத்து பீடத்தின் சியம் மகா நிக்காயவின் சிரேஷ்ட தேரரான அளுத்கம ஶ்ரீ தம்மானந்த, இன்று காலை தனது 103 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
மல்வத்து பீடத்தின் சியம் மகா நிக்காயவின் சிரேஷ்ட செயற்குழுவின் உறுப்பினரான அளுத்கம ஶ்ரீ தம்மானந்த தேரர், கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் ஒரு பகுதியிலுள்ள ஏரியில் திடீரென பெருந்தொகை மீன்கள் உயிரிழந்தமையினால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
பூந்தல தேசிய பூங்காவிற்கு சொந்தமான ஏரியில் திடீரென ஆயிரக்கணக்கான மீன்கள் உயிரிழந்துள்ளன.
மீன்கள் உயிரிழந்த நிலையில் மிதப்பதை பூங்காவுக்கான பொறுப்பாளர் ஆர்.ஜீ.ஆர்.எஸ்.ரணதுங்க முதலில் அவதானித்துள்ளார்.
ஏரியில் ஆபத்தான பொருட்கள் எதுவும் கலக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் மீன்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் நாரா நிறுவனத்திடம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
திடீரென ஆயிரக்கணக்காக மீன்கள் உயிரிழந்தமையினால், அதுதொடர்பில் வாழ்வாதாரத்தை நம்பியுள்ள...
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட 8 தூத்துக்குடி மீனவர்களுக்கு ஐந்தாவது முறையாவும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த மீனவர்களை நேற்றயை தினம் புத்தளம் மாவட்ட சுற்றுலா நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே, நீதிவான் அவர்களை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இதனையடுத்து எட்டு மீனவர்களும் புத்தளம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சிலாபம், ஆனமடுவ உள்ளிட்ட பகுதிகளில் வீசிய பலத்த காற்றினால் பல வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஏ.எம்.ஆர். ஆழகக்கோன் தெரிவித்துள்ளார்.
மேலும் பலத்த காற்றின் காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இராணுவத்தின் ஒத்துழைப்புடன் இன்று அதிகாலை முதல் முறிந்து வீழ்ந்த மரங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை வழமைக்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்...
நேற்றிரவு பெய்த கடும் மழை காரணமாக ஹைலெவல், பேஸ்லைன் மற்றும் ராஜகிரியவை அண்டிய பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் வாகன நெரிசலை கட்டுப்படுத்தி போக்குவரத்தை வழமைக்கு கொண்டு வரும் நடவடிக்கையை போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட “சிறுவர் மன ஓவியங்கள்” சித்திரக் கண்காட்சி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று பிற்பகல் கொழும்பு இலங்கை மன்றத்தில் ஆரம்பமானது.
கலைகளினூடாக சிறுவர்களின் மனதினை ஆற்றுப்படுத்தும் நோக்குடன் Art of Life சிறுவர் ஓவியப் பயிற்சி மன்றத்தினால் இந்த சித்திரக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், 03 முதல் 12 வயது வரையிலான சிறுவர்கள் இதில் பங்குபற்றினர்.
கண்காட்சியின் ஆரம்ப வைபவத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி...
அரசியல்கைதிகள் விடுதலை தொடர்பில் வவுனியாவில் சத்தியாக்கிரகப்போராட்டம் – ஈ.பி.ஆர்.எல்.எவ் உடன் ஈ.பி.டி.பி பங்கேற்பு
Thinappuyal News -
வவுனியாவில் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான சத்தியாகிரகப் போராட்டத்தில் நீங்கள் என்னத்தை சாதித்தீர்கள் என்று சிலர் கேள்வி எழுப்பினர்.....?
நான் அவர்களுக்கு கூறும் பதில் பல வருடங்களாக சிறையில் வாடுபவர்களுக்காக அவர்களின் விடுதலைக்காக தொடக்கமான கூட்டு முயற்சி...!
இந்த போராட்டமானது தமிழ் தேசிய சாயம் பூசி அரசியல் செய்வோருக்கும் எதிர்கட்சி தலைவருக்கும் மற்றும் முதலமைச்சருக்கும் சூடு சுறணை இருந்தால் இவர்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விடுவிக்க முயற்சி செய்வார்கள்......!
ஒன்று மட்டும் கூறிக்கொள்ள...
வவுனியாவில் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 30க்கு மேற்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குருமன்காடு , வைரவபுளியங்குளம் , புகையிரத நிலைய வீதி , மாடசாமி கோவிலடி , யங்ஸ்டார் மைதானத்திற்கு அருகே போன்ற பகுதிகளில் மாலை நேரங்களில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது , தலைக்கவசம் அணிவதில்லை , ஓர் மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது...