இலங்கை பாராளுமன்றக் குழு நோர்வே விஜயம் – வைத்திய கலாநிதி சி.சிவமோகன்(எம்.பி) பங்கேற்பு
Thinappuyal News -0
நோர்வேயிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்கள் தினப்புயல் இணையத்தளத்திற்கு வழங்கிய கருத்து.
நோர்வே நாட்டின் ஒஸ்லோ தலைநகரிற்கு இலங்கையின் 15பேர் அடங்கிய பாராளுமன்றக்குழு நேற்று முன்தினம் விஜயம் ஒன்றினை மேற்கொண்டது. அந்நாட்டின் அரச இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடி இலங்கைக்கான தீர்வுத்திட்டங்களை எந்தவகையில் பெறமுடியும் என்றும் அந்நாட்டின் அரசியல் நகர்வுகள் குறித்து ஆராயும் நோக்கோடு இந்தக்குழு நோர்வே புறப்பட்டுச் சென்றது. இவ் விஜயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னிப் பாராளுமன்ற...
இராணுவத்துக்குத் தேவையான அதிகாரங்களை வழங்கினால், வடக்கில் செயற்படும் குழுக்களை அடக்கி விட முடியும்-இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க
Thinappuyal News -
ஶ்ரீலங்கா இராணுவத் தளபதி கோரியுள்ள மேலதிக அதிகாரத்தை வழங்க அரசு தயாராக இருப்பதாக இராஜாங்க அமைச்சர் அஜித் பீ.பெரேரா தெரிவித்துள்ளார்.
‘குறிப்பிட்டளவான ஒரு காலத்துக்கு மாத்திரம், இராணுவத்துக்குத் தேவையான அதிகாரங்களை வழங்கினால், வடக்கில் செயற்படும் குழுக்களை அடக்கி விட முடியும். இராணுவம் தனது கடமைகளை செய்யும். இராணுவத்துக்கு மேலதிக அதிகாரங்களை வழங்குவது பற்றி அரசுதான் முடிவு செய்ய வேண்டும்’ என்று இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க கண்டியில் வைத்து...
இலங்கை முஸ்லீம்களுக்கு முன்பே செய்தி வழங்கிய சிவம்
வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய்கள் ஒதுக்கீடு- மதிப்பீட்டு அறிக்கை தயாரானது
Thinappuyal News -
அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகள் மீது நம்பிக்கை அதிகரிப்பு
இலங்கை அரசாங்கத்தின் 2019 ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சுக்கு 30 ஆயிரம் கோடி ருபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக இலங்கை நிதியமைச்சின் மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திற்கு முன்னோடியான மதிப்பீட்டு அறிக்கை, அடுத்த சபை அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஏனைய அமைச்சுக்களை விட பாதுகாப்பு அமைச்சுக்கே அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2009...
2025 ஆம் ஆண்டு நிறைவடைவதற்கு முன்னர் நாட்டின் பொருளாதார பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்போமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
உலக பொருளாதார பிரச்சினைக்கு முகம்கொடுக்கத் தேவையான வேலைத்திட்டங்களை ஏற்படுத்துவதற்கான சக்தி எமது அரசாங்கத்துக்கு மாத்திரமே இருக்கின்றது.
2025 ஆம் ஆண்டு நிறைவடைவதற்கு முன்னர் நாட்டின் பொருளாதார பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்.
கடந்த அரசாங்கம் பெற்றுக்கொண்ட பாரிய வெளிநாடுக்கடன் காரணமாகவே இந்தளவு பொருளாதார பிரச்சினைக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது
குருணாகல் கடுபொத...
வவுனியாவில் தனியார் பாடசாலை ஒன்றின் வாயிலில் அமைக்கப்பட்டிருக்கும் மின்மாற்றியை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா வைரவப்புளியங்குளத்தில் அமைந்துள்ள தனியார் ஆங்கில பாடசாலை வாயில் முன்பாக அமைந்துள்ள மின்மாற்றியை அகற்ற மின்சாரசபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து அப் பாடசாலையின் அதிபர் திருமதி. நகுலேஸ்வரன் கீதாஞ்சலி தலைமையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து பாடசாலை அதிபர் கருத்து தெரிவிக்கையில்,
மின்மாற்றியை அகற்றுவதற்கு மின்சாரசபை பணம் கேட்பதாகவும் மழை காலம்...
வவுனியாவில் இன்று காலை முதல் பல இடங்களில் ஆவா குழுவினரின் துண்டுப்பிரசுரங்கள் வீதிகளில் வீசப்பட்ட நிலையில் பொலிசாரல் மீட்கப்பட்டுள்ள
இவ் விடயம் குறித்து மேலும் தெரியவருவதாவது…
இன்று காலை வவுனியா குருமன்காடு, வைரவப்புளியங்குளம், புகையிரத நிலைய வீதி, கண்டி வீதிகள் போன்ற பகுதிகளில் வீதிகளில் வீசப்பட்ட நிலையில் ஆவா குழுவினரின் துண்டுப்பிரசுரங்கள் காணப்பட்டுள்ளன. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எமது செயற்பாடு யாழ்மாவட்டத்தைப் பொறுத்த வரையில் இளைஞர்களின் ஒத்துழைப்புடன் சிறந்த முறையில் செயற்பட்டுவருவது அனைத்து மக்களும்...
வன்முறைகளுடன் தொடர்புடைய மூவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், அவர்களிடம் இருந்து மிகவும் ஆபத்தான கிறிஸ் கத்தி உட்பட வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் நல்லூரைச் சேர்ந்த இளைஞரொருவரைத் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கல்வியங்காடு பகுதியில் தொடர்ச்சியாக 4 வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் ஒன்று, கடந்த 6 ஆம் திகதி தாக்குதல் நடத்தியது. அதில் தந்தை, மகன் மற்றும் குடும்பப்...
வவுனியாவிலிருந்து கொழும்பிற்கு மோட்டார் சைக்கிளில் கேரளா கஞ்சாவினை கடத்த முற்பட்ட 26 வயதுடைய யுவதியொருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வவுனியா ஒயார்சின்னக்குளத்தினை சேர்ந்த 26 வயதுடைய யுவதி கொழும்பிலுள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றார்.
அங்கிருந்து வவுனியாவிற்கு மோட்டார் சைக்கிளில் வருகை தந்து கேரளா கஞ்சாவுடன் மீண்டும் கொழும்பினை நோக்கி மோட்டார் சைக்கிளில் புறப்படவிருந்த சமயத்தில் குருமன்காடு பகுதியில் வைத்து வவுனியா பொலிஸார் கைது...
கடந்த சில தினங்களாக நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் அக்குறணை நகரம் வெள்ளத்தில் மூழ்கியது.
இந்நிலையில் குறித்த நகரத்தில் மழை வெள்ளம் வடிந்தோடிய நிலையில் அங்கு மக்களின் அன்றாட வாழ்க்கை வழமைக்குத் திரும்புவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.