உலக சிறுவர் தினம் மற்றும் உலக முதியோர் தினம் இன்று இலங்கையில் கொண்டாடப்பட்டு வருகின்றது.
1954ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட யோசனைக்கமைய உலக சிறுவர் தினத்தைக் கொண்டாடும் நிகழ்வு ஆரம்பமானது.
சிறுவர் உரிமைகளைப் பாதுகாத்து அவர்களுக்கு மிகவும் சிறந்த வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக 1989 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் திகதி சிறுவர் உரிமைகள் தொடர்பான சாசனம்...
உழைப்பிற்கேற்ப ஊழியம் வழங்கக்கோரி நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட மறே தோட்டத்தில் பாரிய ஆர்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது மறோ தோட்ட தேயிலை தொழிற்சாலை வாளாகத்தில் பதாதைகள் ஏந்தியவாறு 01.10.2018 காலை 8 மணிமுதல் 10 மணிவரை இவ் ஆர்பாட்டம் இடம்பெற்றது
கூட்டொப்பந்தத்தை இரத்துச்செய்யகோரிய ஆர்பாட்டகாரர்கள் கூட்டொப்பந்த அடிப்படையில் 730 ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகின்ற போதிலும்நிபந்தனை அடிப்டையிலே வழங்கப்படுகின்றது நாளொன்றுக்கு 18 கிலோ கிராம் கொழுந்தெடுக்க வேண்டும் என்பதுடன் 20...
வட கொரியா மீதான அமெரிக்க தடைகள் தொடர்கின்ற நிலையில் தனது நாடு ஆயுதங்களைக் களையப் போவதில்லை என அந்நாட்டு வௌிவிவகார அமைச்சர் ரி யோங் ஹோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறான தடைகள் அமெரிக்கா மீதான வட கொரியர்களின் நம்பிக்கையை வலுவிழக்கச் செய்கின்றன என ஐ.நா. கூட்டத் தொடரில் பேசும்போது ரி யோங் ஹோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஐ.நா. விதித்துள்ள தடைகளை நீக்குமாறு பியோங்யாங் மீண்டும் முறையிட்டுள்ளது.
ஆனால், வட கொரியா அணுவாயுதக்...
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டொலரின் விலையேற்றத்துக்கு முகம்கொடுத்து ஏற்றுமதித் துறையைப் பலப்படுத்துவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனையின் பேரில் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட குழு நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் எனவும் கூறப்படுகின்றது.
டொலரின் விலையேற்றத்திற்கு ஏற்ப, ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்படாது பாதுகாப்பதற்குத் தேவையான பரிந்துரைகளை முன்வைப்பது இக்குழுவின் பொறுப்பாகும் எனவும் ஐ.தே.க. தகவல்கள் தெரிவித்துள்ளன.
ஐக்கிய நாடுகளின் 73 வது பொதுச் சபை கூட்டத்தில் கலந்து கொள்ள நியூயோர்க் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அதிகாலை நாடு திரும்பினார்.
இந்த விஜயத்தின் போது ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் மற்றும் பொதுநலவாய நாடுகளின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பல உலக நாடுகளின் தலைவர்களையும் ஜனாதிபதி சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.
அக்குறணை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் நேற்று சனிக்கிழமை (29) இரவு தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக அக்குறணை நகரை அண்மித்து ஓடும் பிங்கா ஓயா பெருக்கெடுத்ததில் அக்குறணை நகர் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீரில் மூழ்கியது.
அக்குறணை நகரின் சியா வைத்தியசாலை சந்தியில் சுமார் ஆறு அடி வரையும் நகரின் ஏனைய பகுதிகளில் சுமார் நான்கு அடி வரையும் வெள்ளநீர் மட்டம் உயர்ந்து...
புதிய கட்டணங்கள் நாளை (01) முதல் அமுலுக்கு வரும் என இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, புகையிரத கட்டணம் 15 சத வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.
இந்தக் கட்டண திருத்தம் 10 வருடங்களுக்குப் பின்னர் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், குறைந்த பட்ச கட்டணமான 10 ரூபாவில் எவ்வித மாற்றமும் இல்லை என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
ஜாஎல, வெலிகம்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவம் ஒன்றில் 40 வயது பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த குறித்த பெண் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் வாகனத்தில் சென்ற குறித்த பெண் மீது இனந்தெரியாத ஒருவரினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வன்னி மண்னில் முஸ்லீங்களின் இனப்பரம்பலை தடுத்து நிறுத்த களம் இறங்கியுள்ளேன்-ஜனநாயக மக்கள் காங்ரஸ் தலைவர் பிரபாகணேசன்
Thinappuyal News -
வன்னி மண்னில் முஸ்லீங்களின் இனப்பரம்பலை தடுத்து நிறுத்தவும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிக் வாழ்வாதாரத்தை கட்டி எழுப்பவுமே களம் இறங்கியுள்ளேன் மலையக மக்களை வன்னி மக்களிடையே பிளவுகளை ஏற்ப்படுத்த அல்ல-ஜனநாயக மக்கள் காங்ரஸ் தலைவர் பிரபாகணேசன்
part-1
மலையகத்திலே இன்னும் மக்கள் லயத்தியேயே இருக்கிறார்கள் நிலமை இப்படி இருக்க வன்னியில் வந்து எப்படி அபிவிருத்திகள் செய்யப்போகிறீர்கள் - லயத்தில் மக்கள் சந்தோசமாக இருக்கிறார்கள்?
part-2
முஸ்லீங்கள் கரையாண் அரிப்பது போன்று தமிழ் பிரதேசங்களை அழித்து வருகிறார்கள்...