இலங்கை கிரிக்கெட் அணியின் ஒரு நாள் போட்டிகளில் அதிக சராசரியை இதுவரை வைத்திருந்த டாப் 3 வீரர்களின் விபரம் தெரியவந்துள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியில் பல்வேறு காலக்கட்டத்தில் பல வீரர்கள் அணிக்காக தங்களது சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். இதில் அதிக சராசரி வைத்திருந்த வீரர்களின் பட்டியல் 1. மேத்யூஸ் - இவரது ஒட்டுமொத்த சராசரி விகிதம் 42.36 ஆக உள்ளது. இவரது ஸ்டைரக் ரேட் 83.39 ஆகும். 2. சங்ககாரா - இவரது ஒட்டுமொத்த...
ஆசிய கிண்ண தொடரில் சொதப்பலான ஆட்டத்தினால் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான முகமது ஆமிர், சாம்பியன்ஸ் லீக் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி, பாகிஸ்தானை வெற்றி பெற வைத்தார். தொடர்ந்து அயர்லாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய ஆமிர், அதன் பிறகு அதிக விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை. குறிப்பாக...
இந்தியாவை சேர்ந்த பிரபல செஸ் வீரர், விளையாட்டு போட்டிக்கு சென்ற இடத்தில் கொலைம்பியாவை சேர்ந்த வீராங்கனையிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தியுள்ளார். ஜார்ஜியாவில் 43 வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்று வருகிறது, இதில் 189 நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ள இந்திய செஸ் வீரர் Niklesh Jain (34), கடந்த செவ்வாய்க்கிழமையன்று கொலம்பியா நாட்டை சேர்ந்த, Angela Lopez என்ற செஸ் வீராங்கனையிடம் தன்னுடைய காதலை...
பாகிஸ்தானிய படையினருக்கும் பயங்கரவாத அமைப்பினருக்குமிடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 4 பயங்கரவாதிகளும், 2 படையினரும் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் பாலுசிஸ்தான்  மாகாணத்தில் கலாத் என்ற இடத்தில் மங்கோசார் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகவும், அவர்கள் குறித்த மாகாணத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்துவதற்கு சதித்திட்டம் தீட்டியுள்ளதாகவும் பாதுகாப்பு படையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலைத் தொடர்ந்து அப் பகுதிக்கு படையினர் விரைந்தனர். படையினரை பார்த்ததும் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம்...
இணையத்தளங்களில் மருந்துகள் விற்பனை செய்ய கூடாது என்பதை வலியுறுத்தி இன்று இந்தியாவிலுள்ள சுமார் 8 இலட்சம் மருந்து கடைகளும் தமிழகத்திலுள்ள 35000 மருந்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இவ் விடயம் தொடர்பாக சில மாதங்களுக்கு முன் மருந்து கடைகளை அடைத்து கடை உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர். இந் நிலையில் இன்று மீண்டும் மருந்து கடை உரிமையாளர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இணையத்தளங்களில் மருந்துகளை விற்பனை செய்வது பொது மக்களுக்கு ஆரோக்கியமற்றது என்றும் வைத்தியர்களின்...
வடமாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் நேற்று நடைபெற்ற வடமாகாண சபையின் அமைச்­ச­ரவையின் மோசடி தொடர்பான முக்கிய சபை அமர்­வில் பங்குபற்றவில்லை என சபை தகவல்கள் தெரிவிக்கின்றன. சபை­யின் 132ஆவது அமர்வு நேற்று கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபையில் இடம்­பெற்­றது. சபை­யின் ஆரம்­பத்­தில் அவைத் தலை­வர் அறி­விப்­பின்­போது வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் இன்று (நேற்று) மின்­னஞ்­சல் அனுப்­பி­ருந்­தார் என்­றும், அதில், இன்று (நேற்று) காலை ஒரு நிகழ்­வில் பங்­கேற்ற பின்­னர் மருத்­து­வ­ம­னைக்­குச்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ.நாவில் கூறியுள்ளதை கூட்டமைப்பு ஒரு போதுமே ஏற்காது என நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன், இப்படிக் கூறியிருப்பதன் மூலம் எமக்கு மட்டுமன்றி, சர்வதேசத்துக்கு எழுத்து மூலமாக வழங்கிய வாக்குறுதியை ஜனாதிபதி மீறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ.நா பொதுச் சபைக் கூட்டத் தொடரில் நிகழ்த்திய உரை தொடர்பில் அவரிடம் வினவிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், ஐ.நா பொதுச் சபையில் ஜனாதிபதி...
வடக்கு மாகாணசபை யாழ் மாவட்ட உறுப்பினர்  என். விந்தன் கனகரட்ணம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அரியாலை நாவலடி, கோட்டை விநாயகர் வீதி அருள்மிகு ஸ்ரீ நாகம்மாள் ஆலயத்திற்கு ரூபா எழுபத்தைந்து ஆயிரம் பெறுமதியான ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கி வைப்பு. வடக்கு மாகாணசபை உறுப்பினர் என். விந்தன் கனகரட்ணம் தனது 2018 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் மூலம் அரியாலை நாவலடி, கோட்டை விநாயகர் வீதி அருள்மிகு ஸ்ரீ நாகம்மாள்...
திருகோணமலை, தம்பலகாமம் பகுதியில் கள்ள நோட்டுக்களுடன் மூன்றுபேரை கைது செய்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, கந்தளாய் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 96ம் கட்டை பகுதியில் சோதனை மேற்கொண்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து தம்புள்ளை நோக்கி பேருந்தில் வருகை, பின்னர் தம்புள்ளையில் கார் ஒன்றினை வாடகைக்கு பெற்றுக்கொண்டு திருகோணமலை பகுதிக்கு வந்து கொண்டிருந்த காரில் குறித்த சோதனை...
வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கையர்களில் சிலருக்கு நிரந்தர வதிவிட விசா வழங்குவது தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றதாக அரச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி இலங்கையில் பிறந்து வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் நிலையில் இரட்டை பிரஜாவுரிமையை பெற்றுக் கொள்ள முடியாதவர்களுக்கே இந்த சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு விசா கட்டுப்பாட்டாளர் சமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளதாக குறித்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில்...