பாரிய விபத்தில் இருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க நொடி பொழுதில் உயிர் தப்பியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ராஜகிரியவில் மரண வீடு ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் மீண்டும் திரும்பும் போது ஆபத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.
பிரதமரை நோக்கி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மேற்கொண்ட விபத்தில் ரணில் நொடியில் உயிர் தப்பியுள்ளார். எனினும் அவரின் பாதுகாவலர்கள் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக...
ஐ.நா பொதுச்சபையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரையை வாழ்த்துகிறேன்:பைஸர் முஸ்தபா
Thinappuyal News -
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில், தூர நோக்குச் சிந்தனையோடு உரை நிகழ்த்தியிருப்பதை நான் மனதார வாழ்த்துகிறேன் என பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி இவ்வாறு அந்தச் சபையில் கையாண்ட அணுகுமுறைகளை, இலங்கை மக்கள் சார்பில் பாராட்டுகின்றேன் என மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
அமைச்சர் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ...
வவுனியா, பூவரசங்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் 63 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த முதியவர் தனது வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது நீர் இறைக்கும் இயந்திரத்திற்குச் சென்ற மின்சார இணைப்பின் வயரை பிடித்துள்ளார்.
இதன்போது வயறில் மின் ஒழுக்கு ஏற்பட்டு மின்சாரம் உடலில் பாய்ந்ததால் தூக்கி வீப்பட்டார். உடனடியாக முதியவரை வவுனியா வைத்தியசாலையில் அனுதித்தபோதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை...
பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் நாளை நண்பகல் 11.30 மணிக்கு யாழ் பஸ்நிலையத்தில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்க்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு தெரிவி்த்துள்ளது.
அனுரதபுரம் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் கடந்த 14ஆம் திகதி தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. எனினும் தமது கோரிக்கைகள் அரசினால் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் தமக்கான மருத்துவ உதவிகளையும் புறக்கணிக்க ஆம்பித்துள்ளதாக அறிய முடிகின்றது.
ஏற்கெனவே பலதடவைன...
ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் ரயில்வே கட்டணங்களை அதிகரிப்பதற்கான திருத்தங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
அதற்கமைய, ரயில்வே கட்டணம் 15 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.
ரயில் கட்டணத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டாலும், 10 ரூபா ஆரம்பக் கட்டணத்தில் எவ்வித மாற்றங்களும் ஏற்படாது என ரயில்வே திணைக்களத்தின் பிரதி வணிக அத்தியட்சகர் என்.ஜே. இத்திபாலகே குறிப்பிட்டார்.
எனினும், ஆரம்பக் கட்டணத்திற்கான தூரம் 9 கிலோமீட்டரிலிருந்து 07 கிலோமீட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, கொழும்பு கோட்டையிலிருந்து ஹூனுபிட்டிய வரை இதுவரைக்காலம் 10...
மடு பரசன் குளம் பகுதியில் மக்களுடைய விவசாய காணியில் காட்டு யானை ஆபத்தான நிலையில் மீட்பு
Thinappuyal News -
மன்னார் மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பரசன்குளம் பகுதியில் மக்களுடைய விவசாய காணியில் காட்டு யானை ஒன்று நோய்வாய்ப்பட்ட நிலையில் (27) கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக காட்டுயானை ஊருக்குள் வருவதாக மக்கள் தெரிவித்தனர்.
நீண்ட காலமாக மழை இன்மையால் குளங்கள் வற்றியும் தாவரங்கள் காய்ந்து போயுள்ளமையால் யானைக்கு உணவின்றி உடலிலே இயங்க கூடிய அளவு சக்தியின்றியே காணப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் அருகிலுள்ள இராணுவத்தினரும்,மடு பிராந்திய வன ஜீவராசிகள் திணைக்களத்தினரும் யானைக்கு...
இன மத முறுகலை வன்னியில் ஏற்படுத்தும் காதர் மஸ்தான் -ஊடக சந்திப்பில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் குற்றச்சாட்டு
Thinappuyal News -
சுயநல வாக்குக்காக கிறிஸ்தவ, இந்து மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்த பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் முயல்கிறார்: சிவமோகன் எம்.பி
சுயநல வாக்குக்காக கிறிஸ்தவ, இந்து மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்த பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் முயல்கிறார் என வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் குற்றம் சாட்டியுள்ளார்.
வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
புதுக்குடியிருப்பு யுத்தம் முடிவுற்ற...
திருமணமான சிறிது நேரத்தில் கணவரின் தாய் கல்லறைக்கு அவரை அழைத்து சென்ற புதுப்பெண்ணின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிக் நோர்வுட் என்பவருக்கும் ஷயானே என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் ஆன நிலையில், நிக்கின் தாய் உயிரிழந்தார்.
பின்னர் திருமணம் நெருங்கிய வேளையில் நிக் அவரின் தாயின் பிரிவால் வாடினார்.
இதையடுத்து நிக்குக்கும், ஷயானேவுக்கும் திருமணம் நடைபெற்றது.
திருமணமான சிறிது நேரத்தில் நிக்கின் கண்களை துணியால் கட்டிய ஷயானே அவரை சர்ப்ரைஸாக ஒரு இடத்துக்கு அழைத்து...
ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்து இன்றும் சீராக இயங்கும் ஆப்பிள் 1 கம்ப்யூட்டர் சுமார் இரண்டு கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் வோஸ்னியாக் ஆகியோர் இணைந்து முதன் முதலாக ஆப்பிள்-1 கம்ப்யூட்டரை ஏப்ரல் 1976-ம் ஆண்டு விற்பனைக்கு வந்தது. இதை மையமாக வைத்து அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய கம்ப்யூட்டர்கள் உருவாகி வருகின்றன.
இந்த நிலையில் இன்றும் சீராக இயங்கும் ஆப்பிள்-1 கம்ப்யூட்டர்...
இருபது வயதை எட்டிய உலகின் பிரபல தேடு பொறி நிறுவனமான கூகுள் இனி தேடல் முடிவுகள் காண்பிக்கப்படும் விதத்தில் மாற்றங்கள் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக தொழில்நுட்ப இணையதளமான 'மஷாபிள்' செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளது.
குறித்த செய்தியில், முன்பு போலவே இனியும் கூகுளின் தேடல் முடிவுகள் காண்பிக்கப்படும் முறையில் மாற்றம் வரவுள்ளது.
மேலும் சமூக வலை தள நிறுவனங்கள் போல இனி தேடல் முடிவுகளில் நியூஸ் பீட்கள், செங்குத்து வடிவ வீடியோக்கள், புகைப்படங்களுடன்...