கட்சி அரசியல் செய்பவர்கள் தமது கட்சியை வளர்ப்பதற்கு ஒரு சில மக்களை பணம் கொடுத்து ஏமாற்றி ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ள வைக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றது. இதனை வன்மையாக கண்டிப்பதுடன், இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறாதிருக்க பொது மக்கள் விழிப்புனர்வுடன் செயற்படவேண்டும் என்பதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.
அண்மைக்காலமாக வன்னிப் பெருநிலப்பரப்பில் உண்ணாவிரதப் போராட்டங்கள், எதிர்ப்பு ஆர்பாட்டங்கள், அடையாள ஆர்ப்பாட்டங்கள் என்று தொடர்ந்து செல்கின்றது. இவ் ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் வன்னி மாவட்டத்தைப்...
சித்தமருத்துவத்தில் மிக முக்கியமான காயகற்ப மூலிகைப் பொருளாக திகழ்வது கடுக்காய்.
இவை உடலில் உள்ள கழிவுகளை நீக்கி, நோய்களை போக்குவதால் அமிர்தம் என்ற சிறப்பு பெயரும் இதற்கு உண்டு.
மேலும் கடுக்காய் உயிரைக் கொல்லும் 26 விதமான நோய்களுக்கும் தீர்வளிக்கும் வல்லமை கொண்ட ஓர் அதிசய மூலிகைக் காயாக விளங்குகின்றது.
கடுக்காயின் மருத்துவ குணங்கள்
கடுக்காய் உடலில் நன்கு பசியைத் தூண்டி இரத்தத்தைச் சுத்தப்படுத்தி வாத பித்த கபம் ஆகியவற்றால் வரும் ஏராளமான...
எந்த வகையான காய்ச்சல் ஏற்பட்டாலும் உடனடியாக வைத்தியரை நாடுமாறு விசேட வைத்திய நிபுணர்கள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
மேலும் காய்ச்சல் வந்தால் தொழில்களுக்கோ, பாடசாலைகளுக்கோ செல்ல வேண்டாம் என்றும் கோரப்பட்டுள்ளது.
இலங்கையில் டெங்கு நோய்த் தாக்கத்தால் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 44 பேர் பலியாகினர்.
அத்துடன் 38,565 பேர் டெங்கு நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மீண்டும் டெங்கு நோய் அதிகரிக்கக்கூடிய சாத்தியம் இருப்பதாக தொற்றுநோய் தடுப்பு பிரிவு எச்சரித்துள்ளது.
பிக்பாஸ்-2 இன்னும் சில தினங்களில் முடியவுள்ளது. யார் வெற்றியாளர்கள் என்பதை பார்க்க அனைவரும் ஆவலுடன் இருக்கின்றனர்.
இந்நிலையில் ஏற்கனவே எலிமினேட் ஆனவர்கள் கூட பிக்பாஸ் வீட்டிற்குள் இந்த வாரம் முழுவதும் வந்து செல்கின்றனர்.
அதில் இன்று ஷாரிக் வர, ஐஸ்வர்யா வெட்கத்தில் எதுவும் பேசாமல் இருக்க, அனைவரும் ஐஸ்வர்யாவை கலாய்க்க தொடங்கிவிட்டனர்.
https://twitter.com/vijaytelevision/status/1044475780732923906
இன்ஸ்டாகிராமின் இணை நிறுவனர்கள் தங்கள் பதவியை திடீர் ராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் திடீரென இன்ஸ்டாகிராமின் தலைமை நிர்வாகியான கெவின் சிஸ்ட்ரோம் மற்றும் இணை நிறுவனரான மைக் க்ரீகரும் இன்னும் சில வாரங்களில் பதவி விலகப் போவதாக நேற்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.
குறித்த அறிக்கையில் அவர்கள் தங்களது ஆக்கத்திறனை புதுப்பித்துக் கொள்ளவே இந்த முடிவு என சிஸ்ட்ரோம் கூறியுள்ளார். ஆனால் தங்களின் திடீர் ராஜினாமா முடிவுக்கு என்ன காரணம் என்பதைக்...
ஹிமாச்சல பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக மலை ஏறும் பயிற்சியில் ஈடுபட்ட 35 ஐ.ஐ.டி மாணவர்கள் நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அம் மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
ஹிமாச்சல பிரதேசத்தின் பெருவாரியான இடங்களில் நிலச்சலிவு ஏற்பட்டுள்ளது.
சுற்றுலாத் தளமான குலு மனாலியின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் அங்கு நிலச்சரிவினால்...
பிரதி அமைச்சர் பைசல் காசீம் ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை.
ஒலுவில் கடலரிப்பை உடனடியாகத் தடுக்கும்வகையில் ஆழ்கடலில் இருந்து மண்ணை அகழ்ந்து கரையோரத்தை மீள்நிரப்பும் செயற்திட்டத்தை உடன் மேற்கொள்ளுமாறு சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அவசர கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் பிரதி அமைச்சர் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.அக்கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு:
ஒலுவில் துறைமுகம் அமைக்கப்பட்டபோது அது அப்பகுதி மக்களுக்கு விடிவைக் கொண்டு...
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சொட்டிபாளையம் கிராமத்தில் கடந்த சனிக்கிழமை இரவு (22) வீட்டை உடைத்து கொள்ளையிட்ட கும்மலை திங்கட்கிழமை (24) மாலை கைது செய்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் 4 பேர் கொள்ளைச் சம்பவத்துடன் சம்மந்தப்பட்ட சந்தேக நபர்கள் எனவும், ஏனைய 4 பேரும் கொள்ளையர்கள் விற்ற பொருட்களை வாங்கியவர்கள் எனவும் தெரிவந்துள்ளது.
கொள்ளையர்களிடமிருந்து 31 பவுண் நிறையுடை...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட புதிய சுற்று சுங்க வரி விதிப்புகள் நேற்று திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வந்துள்ளன.
சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான வர்த்தகப் போர் ஆரம்பமானது முதற்கொண்டு விதிக்கப்பட்ட அதி கூடிய சுங்க வரி விதிப்பாக இது உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்பிரகாரம் 200 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சீன உற்பத்திகள் மீது புதிய சுங்கவரிகள் விதிக்கப்பட்டுள்ளன.
சீனாவால் நீதியற்ற முறையில் வர்த்தக செயற்பாடுகள்...
இலங்கைக்கு 480 மில்லியன் அமெரிக்க டொலர்களை அபிவிருத்தி உதவியாக வழங்க அமெரிக்க அரசாங்கம் முன்வந்துள்ளது.
ஐக்கிய அமெரிக்காவின் மில்லேனியம் சவால்கள் கூட்டுத்தாபனம் 480 மில்லியன் அமெரிக்க டொலர்களை அதாவது சுமார் 8000 கோடி நிதியுதவியை இலங்கையின் அபிவிருத்தி பணிகளுக்காக வழங்க முன்வந்துள்ளதாக அக் கூட்டுத்தாபனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி ப்ரொக் பியெர்மன் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 73 வது பொதுச்சபை அமர்வில் உரையாற்றுவதற்காக நியூயோர்க்கிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்ரிபால...