இந்திய அணியில் தவான் மற்றும் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு மற்ற இரண்டு வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார். துபாயில் நடைபெற்று வரும் ஆசியக்கோப்பைத் தொடரில் ரோகித் தலைமையிலான இந்திய அணி பட்டையை கிளப்பி வருகிறது. தற்போது இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டாலும் ஆப்கானிஸ்தான அணியுடன் இன்னும் ஒரு போட்டி இருக்கிறது. அந்த போட்டியில் இந்திய அணி தோற்றாலும், கவலையில்லை என்பதால் இந்திய...
போர்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, எகிப்தின் முகமது சலா ஆகியோரை பின்னுக்குத் தள்ளி குரோஷியாவை சேர்ந்த லூகா மோட்ரிச் உலகின் சிறந்த கால்பந்து வீரராக என்ற விருதினை வென்றுள்ளார். உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரோஷிய அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் செல்ல உதவிய மோட்ரிச், ரியல் மேட்ரிட் கிளப் அணி சாம்பியன்ஸ் கோப்பையை வெல்லவும் உறுதுணையாக இருந்தார். சிறந்த கோலுக்கான புஸ்காஸ் விருதை முகமது சலா வென்றார். இங்கிலீஸ் ப்ரீமியர் லீக்...
டெல்லியில் இருந்து பாட்னா சென்ற விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது கழிவறைக்கு பதிலாக விமானத்தின் கதவை திறந்த வாலிபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கோ ஏர் விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று டெல்லியில் இருந்து பீகார் தலைநகர் பாட்னாவுக்கு 150 பயணிகளுடன் சென்றது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது 27 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவர் திடீரென எழுந்து சென்று கழிவறை என நினைத்து விமானத்தின் பின்புற...
யாழில் ஆறு வயது சிறுமியின் கையைப் பிடித்தார் எனும் குற்றசாட்டில் கைதுசெய்யப்பட்ட 70 வயது முதியவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். நாவற்குழி பகுதியில் கடந்த சனிக்கிழமை வீதியால் நடந்து சென்ற சிறுமியை முதியவர் தவறான நோக்கத்துடன் கையைப் பிடித்து இழுத்தார் என சிறுமியின் பெற்றோரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் குறித்த முதியவரை கைது செய்து சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற பதில்...
யாழில் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் பெண் ஒருவர் உட்பட ஆறு பேர் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாகம் , பருத்தித்துறை , வல்வெட்டித்துறை , மற்றும் மானிப்பாய் ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலேயே குறித்த ஆறு பேரும் கைது செய்யப்பட்டனர். நீர் இறைக்கும் இயந்திரத்தை திருடிய குற்றசாட்டில் சாவற்காட்டு பகுதியை சேர்ந்த ஒருவர் மானிப்பாய் பொலிஸாராலும், வீடுகளை உடைத்து நகை, பணம் என்பவற்றை கொள்ளையடித்த குற்றச்சாட்டில்...
சமூகவலைதளங்களில் தற்போது பரவலாக காணமுடிவது விஜய் நடித்துள்ள சர்க்கார் படத்தின் டேக்குகள் தான். பலரும் எதிர்பார்த்த முதல் சிங்கள் ரிலீஸ் ஆகிவிட்டது. விவேக் எழுதியுள்ள இந்த பாடல் சிம்டங்காரன் என தொடங்கி உள்ளூர் லோக்கல் வார்தைகள், சில தமிழ் வார்த்தைகள் கலந்த காம்பினேஷனாக ரஹ்மான் இசையில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சன் சானலின் யூ டுயூப் பக்கத்தில் வெளியாகி 4.5 மணிநேரத்தில் 3.1 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இதை அவர்களும் ட்விட்டரில் கூறியுள்ளார்கள். லைக்ஸ்...
கடந்த முறை பிக்பாஸ் வீட்டில் ஒருவருக்கொருவர் அவ்வளவு மரியாதையுடன் இருந்தனர். ஆனால் இம்முறை அப்படியே தலை கீழாக இருந்தது, மரியாதையாக பேசுவது இல்லை. அதிலும் ஐஸ்வர்யா டாஸ்க் என்ற பெயரில் பாலாஜி மீது குப்பை கொட்டியது ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் புகுந்துள்ள நித்யா, ஐஸ்வர்யா மீது தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவரை விட மற்ற போட்டியாளர்கள் மீது அதிக கோபம் இருக்கிறது, அவர்கள் நினைத்திருந்தால்...
மகளுக்கு பிடிக்காத படங்களில் நடிக்க மாட்டேன் என்று அபிஷேக் பச்சன் கூறியுள்ளார். மனைவி ஐஸ்வர்யாராயுடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய படமொன்றில் ஜோடியாக நடிக்கிறார் அபிஷேக் பச்சன். சினிமா வாழ்க்கை மற்றும் மகள் ஆரத்யா குறித்து அபிஷேக் பச்சன் அளித்த பேட்டி வருமாறு:– ‘‘எனக்கு காதல் கதைகளை விட அதிரடி படங்களில் நடிக்கவே ஆசை. ஏற்கனவே நான் நடித்துள்ள பல படங்கள் அதிரடி படங்கள்தான். படப்பிடிப்பில் டைரக்டருக்கு திருப்தி ஏற்பட்டாலும் சிறப்பாக...
யாழில் இரட்டை குழந்தைகளைப் பிரசவித்த தாயார் ஒருவர் உயிரிழந்துள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.   அமினிஓடிக் திரவம் குருதியில் கலந்ததால் அவர் உயரிழந்ததாக சட்ட வைத்திய அறிக்கை தெரிவிக்கின்றது. தீவகம் வேலணையைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்தார். கர்ப்பிணித் தாய் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில்  வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில். அவர் பிற்பகல் 3 மணியளவில் இரண்டு ஆண் குழந்தைகளை பிரசவித்துள்ளார். இந்த நிலையில் தாயார் மாலை 4 மணியளவில் உயிரிழந்துள்ளார் என...
பலத்த காற்றுடன் கூடிய மழை வீழ்ச்சினால் நாட்டின் பல பகுதிகளிம் 300 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கிணங்க இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய பகுதிகளில் 119 வீடுகளும் அனுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய ஆகிய பகுதிகளில் சுமார் 200 வீடுகளும் தெவுந்தர பகுதியில் 15 வீடுகளும் பலத்த காற்று மற்றும் மழையினால் சேதமடைந்துள்ளன. இவ்வாறு சேதமடைந்த வீடுகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபா நஷ்டஈடு வழங்கும் நடவடிக்கைகள் இன்று முதல்...