வவுனியாவில் அண்மைய சில நாட்களாக மோட்டார் சைக்கிளில் செல்லுபவர்களிடம் போக்குவரத்துப் பொலிஸார் புகைப் பரிசோதனை பத்திரத்தை கோரிவருவதுடன், அதனைக் காண்பிக்கத்தவறினால் உடனடியாக தண்டப்பணம் 500 ரூபா அறவிடப்பட்டுள்ளது. வவுனியாவில் - செட்டிகுளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்தவரிடம் மோட்டார் சைக்கிளுக்கு மேற்கொள்ளப்பட்ட புகைப்பரிசோதனை பத்திரத்தை காண்பிக்குமாறு போக்குவரத்துப் பொலிஸார் கோரியுள்ளனர். மோட்டார் சைக்கிளில் செல்பவர் தமது சாரதி அனுமதிப்பத்திரம், வாகன வரி அனுமதிப்பத்திரம், காப்புறுதிப்பத்திரம் என்பனவற்றையே தம்வசம் எடுத்துச் செல்கின்றார். இதனையே...
அரச வங்கியின் ATM இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பல லட்சம் ரூபாய் பணத்தை பெண் ஒருவர் இழந்துள்ளார். வெலிகம பகுதியிலுள்ள அரசாங்க வங்கிக்கு சென்ற பெண் ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார். குறித்த பெண் மூன்று இலட்சம் ரூபா பணத்தை வைப்பு செய்வதற்கு முயற்சித்த போது இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் பணத்தின் ஒரு பகுதி மாத்திரம் வைப்பிலிடப்பட்டுள்ளது. அதிக பணம் இயந்திரத்திற்கு வெளியே வந்துள்ளது. இது தொடர்பில் அந்த...
பொத்துவில் - அக்கறைப்பற்று வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் அவரது இரு மகள்களும் பலியாகியுள்ள நிலையில் மகன் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வீதியில் தாய், அவரது இருமகள்மார் மற்றும் மகனுடன் சென்றுகொண்டிருந்த போது அவ் வீதியால் சென்ற காரொன்று அவர்கள் நால்வர் மீதும் மோதியுள்ளது. குறித்த சம்பவத்தில் 34 வயதுடைய தாயும் 6 வயது மற்றும் 12 வயதுடைய பெண் பிள்ளைகள் இருவரும் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, சம்பவத்தில் காயமடைந்த 11...
பத்தரமுல்லை, பொல்துவ சந்தியில் பாராளுமன்றத்துக்கு பிரவேசிக்கும் பகுதியில் மரம் முறிந்து வீழ்ந்துள்ளதனால் வாகன நெரிசல் ஏற்பட்டு அப் பகுதிக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அப் வழியாக போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வாகன சாரதிகளை வேறு மாற்றுவழிகளை பயன்படுத்தி தற்காலிகமாக போக்குவரத்து நடவகடிக்கைகளை மேற்கொள்ளுமாறு போக்குவரத்து பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். அத்துடன் முறிந்து வீழ்ந்த மரத்தை அப் பகுதியிலிருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச்சபை  கூட்டத் தொடருக்கு சமாந்தரமாக இடம்பெறும் நெல்சன் மண்டேலா சமாதான மாநாடானது அனைத்து அரச தலைவர்களின் பங்குபற்றலுடன் நேற்று நியூயோர்க் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் ஆரம்பமானது. இந்த மாநாட்டில் பங்குபற்றியுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ரூடோவை சந்தித்துக் கொண்டபோது...
நெல்சன் மண்டேலா போன்ற தலைசிறந்த தலைவர்கள் சென்ற பாதையில் நாமும் பயணிப்போம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச்சபை  கூட்டத் தொடருக்கு சமாந்தரமாக இடம்பெறும் நெல்சன் மண்டேலா சமாதான மாநாடானது அனைத்து அரச தலைவர்களின் பங்குபற்றலுடன் நேற்று நியூயோர்க் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் ஆரம்பமானது. இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய...
-மன்னார் நகர் நிருபர்- சிறு கைத்தொழில் முன்னேற்றத்திற்கு என கூட்டுறவு திணைக்களத்திற்கு  ஆயிரம் மில்லியன் ரூபா நிதி 2018ஆம் ஆண்டின் வரவு -செலவு திட்டத்தில்  ஒதுக்கப்பட்டுள்ளது.தற்பொழுது செப்டம்பர் மாதம் நடை பெறுகிறது. டிசம்பர் மாதத்திற்கு முன்பு அந்த வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். மன்னார் மேற்கு பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தின் ஏற்பாட்டில் அங்கத்தவர்களை கௌரவிக்கும்...
நாட்­டி­லி­ருந்து வெளி­யேற இலங்­கை­யர்கள் 62 ஆயி­ரத்து 338 பேருக்கு வெளி­நாட்டுப் பயணத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­கள தக­வல்கள் தெரிவித்துள்ளது. நீதி­மன்ற நட­வ­டிக்­கை­களை மையப்­ப­டுத்தி இந்த தடை உத்­த­ர­வுகள் பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும்  இதில் 30 ஆயிரம் பேர் வரை­யி­லானோர் பாது­காப்பு தரப்­புக்­களைச் சேர்ந்­த­வர்கள் எனவும் திணைக்­க­ளத்தின் உயர் அதி­காரி ஒருவர் கூறினார். பாது­காப்புத் தரப்­பி­னரில்  உயர் மட்­டத்தில் இருந்து கடை நிலை வரை­யி­லான உத்­தி­யோ­கத்­தர்கள்  பயணத் தடை விதிக்­கப்­பட்­டோரில் அடங்­கு­வ­தாக...
புகையிரத விபத்தில் படுகாயமடைந்த சிறுமி மேலதிக சிகிச்சைக்காக சுவீடன் செல்வதற்காக விசேட உலங்குவானூர்தி மூலம் வவுனியாவில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டார்! வவுனியா, ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் கார் மீது புகையிரதம் மோதியதில் படுகாயம் அடைந்த சிறுமியை மேலதிக சிகிச்சைக்காக சுவீடன் நாட்டு மருத்துவர் குழாம் விசேட உலகவானூர்தி மூலம் இன்று வவுனியா வைத்தியசாலையில் இருந்து அழைத்துச் சென்றனர். யாழில் இருந்து மாத்தறை நோக்கிச் சென்ற புகையிரதம் வவுனியா, ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம்...
  கடந்த 22.09.2018 அன்று திருகோணமலை கடலில் உயிரிழந்த விரிவுரையாளர் போதநாயகியின் இறுதிச்சடங்கு இன்று வவுனியா கற்குளத்தில் உள்ள அவரது பெற்றோரின் இல்லத்தில் இடம்பெற்றபோது அங்கு கூடியிருந்த மக்கள் மற்றும் பெண்கள் அமைப்புக்கள் ஒன்றினைந்து நீதி கோரி போராட்டம். ஒன்றினை நடாத்தியுள்ளனர். இதில் போதநாயகி  நம்பிக்கை துரோகத்தால்த்தான்  உயிரிழந்தார் என்ற தொனிப்படவும் திருமணத்தில் ஏமாற்றப்பட்டிருக்கிறார்  என்ற கருத்துப்படவும் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கி பெண்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர். மரணச்சடங்கில் கலந்துகொண்ட அனைவரும் போதநாயகியின் குடும்பத்தின்...