கிளிநொச்சி மாவட்டத்தில் 259 புதிய விவசாய கிணறுகளை அமைப்பதற்கும், 202 விவசாய கிணறுகளை புனரமைப்பதற்கும் 103 மில்லியன் ரூபா நிதி தேவைப்படுவதாக மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் வே.ஆயகுலன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாய செய்கைகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதும் பல்வேறு தேவைப்பாடுகள் காணப்படுகின்றன. குறிப்பாக புதிய விவசாய கிணறுகள், கைவிடப்பட்ட மற்றும் சேதமடைந்த விவசாய கிணறுகளை புனரமைத்தல் போன்ற தேவைகள் உள்ளன. இது தொடர்பில்...
பற்களையும், பல் ஈறுகளையும் முறையாகப் பராமரிப்பதால் நம்முடைய வாய் மட்டுமே புத்துணர்வாக இருப்பதில்லை. நலமான பற்கள், நலமான இதயத்துக்கும் உதவுகின்றன என்கிறார்கள் மருத்துவர்கள். பல் ஈறுகளைச் சரியாகப் பராமரிக்காதபோது, அங்கே உள்ள பாக்டீரியா ரத்தத்தில் கலந்து ரத்த நாளங்களில் ரத்த உறைவை ஏற்படுத்துகிறது. இது பல்வேறு இதய நோய்களுக்குக் காரணமாக அமைகிறது. பல் ஈறு நோய்களால் ஏற்படும் வீக்கமும் இதயத்தில் ரத்த உறைவு உருவாகக் காரணமாக இருக்கின்றன. இந்த ரத்த உறைவு,...
யாழ். குடாநாட்டில் ஆவா குழுவை ஒடுக்குவதற்காக பொலிஸார் அவசரமாக இராணுவத்தின் உதவியை கோர வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். காலியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், தெற்கில் வன்முறை குழுக்களை அடக்குவதற்கு எவரும் அனுமதி கோருவதில்லை. தேவையான நேரத்தில் படையினர் களமிறங்குவர். வடக்குக்கு மட்டும் தனிச்சட்டமா என்ன? எனவே, ஆவா குழு போன்ற சமூகவிரோத...
பாராளுமன்றத்துக்கு செல்லும் பாதையில் நிலம் தரையிறங்கியமைால் பாரிய குழியொன்று ஏற்பட்டுள்ளது. டென்சில் கொப்பேகடுவ மாவத்தையின் நடைபாதையில் இன்று அதிகாலை பாரிய குழியொன்று ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தம் காரணமாக மின்சார கம்பங்கள் மற்றும் சில மரங்கள் பல அடிகள் கீழே சென்றுள்ளன. சேதமடைந்த மின்சார கம்பங்களை மாற்றும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.      
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணக்கப்பாட்டின் அடிப்படையில் எதிர்வரும் தேர்தல்களுக்கு முகம் கொடுப்பது தொடர்பில் மகிந்த ராஜபக்‌ஷ விருப்பம் கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. 19வது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஜனாதிபதியின் அதிகாரங்களை மீறி செயற்படும் வகையிலான அதிகாரங்கள் பிரதமர் பதவி வகிக்கும் நபருக்கு கிடைக்கப் பெறவுள்ளது. இதன் காரணமாக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு பொதுஜன பெரமுண மற்றும் சுதந்திரக்கட்சியை இணைத்து தேர்தல்களில்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் காலை உணவை பார்த்து தென் மாகாண முதமைச்சர் ஆச்சரியமடைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த வாரம் கடல் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, ஜனாதிபதி காலி மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். ஜனாதிபதியை அழைத்து வந்த ஹெலிகொப்டர் தடல்ல மைதானத்திற்கு சென்ற போது தென் மாகாண முதமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வாவும் அங்கு சென்றிருந்தார். இதன்போது, தான் இன்னமும் காலை உணவு பெற்றுக் கொள்ளவில்லை. தேரர் ஒருவரை பார்ப்பதற்கு சென்றமையினால்...
மாலைதீவில் நேற்று இடம்பெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் 58.3 சதவிகித வாக்குகளைப் பெற்று எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை காலை 8 மணிக்கு மாலைதீவு ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆரம்பமாகியது. இந்நிலையில் மாலை வாக்குப்பதிவு முடிந்த பின்னர் 92 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. அதில், 58.3 சதவிகித வாக்குகள் பெற்று எதிர்க்கட்சி வேட்பாளர்...
இலங்கை அணியின் தலைவராக தினேஸ் சந்திமாலை நியமிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிகெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள ஒரு நாள் போட்டித் தொடரில் இலங்கையை தலைமை தாங்குவதற்காகவே சந்திமல் நியமிக்கப்படவுள்ளார். இந்நிலையில் அணித்தலைவராக செயற்பட்டுவரும் அஞ்சலோ மெத்தியூஸை ஒருநாள் மற்றும் இருபதுக்கு - 20 போட்டிகளின் தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சட்ட சிக்கல்களை தீர்த்து வைத்த பின் ஆறு மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்தும்படி பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதேவேளை, மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் முறை குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என்று ராஜாங்க அமைச்சர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார். எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டதனால் இந்த நிலைமை உருவாகி உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். மல்வத்துபீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரை சந்தித்த பின்னர்...
அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்தமையால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு வெற்றிகரமான முறையில் முகங்கொடுக்க தயாராக இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எனவே, இந்த நெருக்கடி தொடர்பில் மேற்கொள்ள  வேண்டிய நடவடிக்கைகள் பற்றி பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரமர் கூறினார். கடந்த காலத்தில் சவால்களுக்கு முகங்கொடுத்து முன்னோக்கிச் சென்றதைப் போன்று டொலரின் பெறுமதி அதிகரித்தமையால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு வெற்றிகரமான முறையில் முகங்கொடுக்க இருக்கின்றுாம். கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட மாட்டாது. டொலரின் பெறுமதி...