தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி அலுவலகம் மீது இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர். சாவகச்சேரி மீசாலை மேற்கிலுள்ள இந்த அலுவலகத்தின் மீது நேற்றிரவு 11 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:- நேற்று இரவு 11 மணியளவில் மேற்படி கட்சியின் அலுவலகத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற குழுவொன்று கட்சியின் பெயர் பலகையை அடித்து சேதப்படுத்தியுள்ளது. இதன்போது கட்சியின் வயதான உறுப்பினர் ஒருவர் அந்த அலுவலகத்திற்குள்...
நாம் ஒருபோதும் தனிநாடு கோரவில்லை,  தனிஈழம் என்ற கொள்கையில் இருந்ததுமில்லை. எமக்கான அந்தஸ்துடன் வாழ்வதற்கான உரிமையையே நாம் கோரி நிற்கின்றோம் என சமூக உட்கட்டமைப்பு மற்றும் மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார். பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றுகையில் இதனைக் குறிப்பிட்ட அவர், தோட்ட சமுதாயத்திரனுக்கு மாற்று வாழ்வாதார வாய்ப்புக்களை உருவாக்கவும், அவர்களுக்கான வழிகாட்டல்களை வழங்கவும் பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய...
நாட்டில் தனி ஈழம் சிந்தனை வர கூடாதென்றால் தொடர்ந்தும் தமிழர்களுக்கு அநீதிகள் இடம்பெற கூடாது. அரச நிர்வாக போட்டி பரீட்சைகளில் தொடர்ந்தும் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவது தனி ஈழம் கேட்பதற்கு அரசாங்கம் தீனி போடுவதாக அமையும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் சபையில் தெரிவித்தார். அத்துடன் மலையக அபிவிருத்தி அதிகார சபை மற்றும் பிரதேச சபை சட்ட திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டமை பாராட்டதக்கது. ஆகவே இந்த வாய்ப்பை...
யாழ்ப்பாணத்தில் பிரதான வீதிகளில் 15 இடங்களில் வீதி ஒழுங்கு பிரச்சினைகள் உள்ளதாகவும், அவற்றை அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியபோது அதனை அவர்கள் ஏற்றுக் கொண்டதாகவும் யாழ். பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வருண ஜயசுந்தர தெரிவித்தார். நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இதனை தெரிவித்த  அவர், யாழ்ப்பாணத்தின் போக்குவரத்து பிரச்சசினைகள் மற்றும் விபத்துகளை தடுப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டு இருந்தேன். அதன்போது,  யாழ்ப்பாணத்தில் போக்குவரத்து நெரிசல்கள், விபத்துக்ளை கட்டுப்படுத்தும் நோக்கில் நாம்...
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம், கொடிகாமம் நோக்கிச் சென்று கொண்டிருந்த உழவியந்திரத்தினை யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் முந்திச்செல்ல முற்பட்டவேளை குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார்  தெரிவித்துள்ளனர். கொடிகாமம் கோயிலாமனைக்கும்  இராமாவில் ஆலயத்திற்கும் இடைப்பட்ட ஏ-9பிரதான வீதியிலேற்பட்ட இவ்விபத்தில் மீசாலை வடக்கைச் சோ்ந்த 27வயதான நபர்...
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு  நோக்கி கேரளா கஞ்சாவினை கடத்தி சென்றவரை வவுனியா பொலிஸார் நேற்று   இரவு கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்  யாழ் - கொழும்பு பஸ்ஸை நொச்சிமோட்டை பகுதியில் வழிமறித்து  சோதனை மேற்கொண்ட போது குறித்த பஸ்ஸில் பயணித்த கொழும்பை சேர்ந்த  19வயதுடைய சத்தியவேல் சஞ்சீவன் என்ற இளைஞனை 6கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின்...
கிழக்குத் தமிழர் ஒன்றியத்தினால் தயாரிக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வரைபு வடிவம் அனைத்துத் தமிழ் அரசியற் கட்சிகளிடமும் சென்ற வாரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கட்சிகளின் இறுதி நிலைப்பாட்டையும் கேட்டிருக்கின்றோம். அவற்றிற்கமையவே அடுத்த கட்ட செயற்பாடுகள் அமையும் என கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயற்குழுத் தலைவர் மா.செல்வராசா தெரிவித்தார். கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர்...
-மன்னார் நகர் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக அனைத்துப் பகுதி மக்களும் குடிநீர் பிரச்சனையால் பாதிப்படைந்துள்ளனர். இந்த நிலையில் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்கு உற்பட்ட பகுதிகளில் வரட்சியின் காரணமாக மக்கள் நீரை பெற்றுக்கொள்ளுவசில் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையில் அப்பகுதி மக்களுக்கு முசலி பிரதேச சபையினால் நீர் வழங்கப்பட்டு வருகின்றது. எனினும் முசலி பிரதேச சபையினால் வழங்கப்படும் குடி நீருக்கு முசலி பிரதேச...
  வவுனியாவில் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள பொது அமைப்புகள்! விரைவில் போராட்டம் வவுனியாவில் வேதாளங்கள் முருங்கைமரம் ஏறுகின்றன தமிழ்ஈழ விடுதலைப்போராட்டத்தை காட்டிக்கொடுத்தவர்களும் இலங்கை அரசுடன் பின்கதவுவழியாய் செல்லுபவர்களே இந்தப்போராட்டத்தை முன்நின்று செய்பவர்கள் தேசியத்தலைவர் பிரபாகரனை விசயந்து என்று கூறியEPDP கட்சி சார்ந்த ஒரவரும் இந்தியா இராணுவத்தினருடன் இனைந்து மண்டையில் போட்ட மண்டையன் குழுவும் இரானுவ ஒட்டக்குழுக்களும் கட்சிவிட்டு கட்சி தாவிய காவாலிகளும் தேசியத்தலைவர் பிரபாகரன் உருவப்படத்தை காலில்போட்டு மிதித்து எரித்த...
தமிழ் மக்களது விடுதலைக்காக போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை விஷயந்து என தமிழ் மக்கள் மத்தியில் துரோகியாகப் பார்க்கப்படுகின்ற ஈபிடிபியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா கூறயதனை வன்மையாகக் கண்டித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ.கNஐந்திரன் இக் கருத்திற்கு தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்பை டக்களஸ் தேவானந்தா கேட்க வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.   டக்கஸ்தேவானந்தாவை மன்னிப்பு கேட்கக்கூறும் செ. கஜேந்திரன் ஊடக சந்திப்பு அர்தமற்றது...