சிலர் முகத்தில் சீழ் நிறைந்த பருக்கள் வந்துவிட்டால் அதை கைவிரலால் தொட்டு பிய்த்து எறிந்துவிடுவார்கள். இப்படி செய்தால், பருக்கள் ஓரிடத்தில் இருந்து பரவ ஆரம்பித்து, பின் முகம் முழுவதும் பரவி, முகத்தின் அழகையே பாழாக்கிவிடும்.
இத்தகைய வலிமிக்க மற்றும் அசிங்கமான சீழ் நிறைந்த பருக்களைப் போக்க சீழ் உதவும் சில எளிய ஆயுர்வேத சிகிச்சைகளைப் பற்றி தெரிந்து கொண்டு பயன் பெறலாம்.
மஞ்சள்
மருத்துவ குணம் நிறைந்த மஞ்சளில் ஆன்டி-பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு...
(பா.திருஞானம்)
இலங்கை யோசிடா அறக்கட்டளையின் தலைவர் வணக்கத்துக்குரிய பனகல உபதிஸ்ஸ நாயக்கதேரரின் தலைமையில் பார்க் ஜூன் ஹோ சர்வதேச ஆரம்ப பாடசாலை யாழ்ப்பானம் வட்டுக்கோட்டையில் (18.09.2018) திறந்து வைக்கபட்டது.
இந் நிகழ்வில் தமிழ்நாடு கல்வி பள்ளித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், இலங்கையின் கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன், விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் உட்பட பலர்...
சிவகார்த்திகேயன் நடிப்பில் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த சீமராஜா படம் வெளியாகிவிட்டது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வர வசூலிலும் கொஞ்சம் டல் அடித்து வருகிறது.
அவரது படங்களிலேயே இந்த படம் தான் வசூல் குறைவு என பல திரையரங்க உரிமையாளர்கள் கூறி வருகின்றனர்.
தற்போது செய்தி என்னவென்றால் சிவகார்த்திகேயன் ரவிக்குமார், ராஜேஷ் படங்களுக்கு பிறகு இரும்புத்திரை பட புகழ் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்த படத்தையும் 24 AM ஸ்டூடியோஸ்...
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அடுத்தடுத்து பல படங்கள் வரவுள்ளன. சாமி2, சர்கார் என பெரிய படங்களில் அவர் நடித்துள்ளார்.
அடுத்து அவர் சிம்புவுக்கு ஜோடியாக மாநாடு படத்திலும், சசிக்குமார் ஜோடியாக கொம்பு வெச்ச சிங்கம் என்கிற கிராமத்து பின்னணி கொண்ட படத்திலும் அவர் நடப்பார் என சமீபத்தில் தகவல் பரவியது.
ஆனால் தற்போது கீர்த்தி தரப்பு இது பற்றி விளக்கம் அளித்துள்ளது. சர்கார் படத்திற்கு பிறகு எந்த படத்திலும் கீர்த்தி...
நடிகர் ஆதி தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பிரபலம். அவர் நடிப்பில் கடைசியாக தமிழில் வெளிவந்த படம் மரகத நாணயம். அதன் பிறகு அவர் தெலுங்கு பக்கம் சென்றுவிட்டார்.
அங்கு அவர் சில படங்களை வில்லன் வேடத்திலும் நடித்துள்ளார். இது பற்றி பேசியுள்ள அவர் "Sarrainodu படத்தில் வில்லனாக நடித்தது நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின் வில்லன் ரோலில் நடிக்கச்சொல்லி பல்வேறு வாய்ப்புகள் வந்து குவிந்தது. முதலில் கேட்டனர், முடியாது என...
வவுனியா மாவட்ட தனியார் பஸ் ஊழியர்கள் மூன்று காரணங்களை முன்வைத்து நேற்று பகல் முதல் கால வரையறையற்ற பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
வவுனியா புதிய பஸ் நிலையத்தினுள் வெளிமாவட்ட பஸ்கள் உட்செல்வதினை தடை செய்ய வேண்டும் , புதிய பஸ் நிலையத்திற்கு முன்பாக வெளிமாவட்ட பஸ்கள் தரித்து நின்று பயணிகளை ஏற்றுவதை தடை செய்ய வேண்டும் , இணைந்த நேர அட்டவணையினை உடனே அமுல்படுத்த வேண்டும்
என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவிலிருந்து...
யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர்ப் பகுதியிலுள்ள நிதி நிறுவனம் ஒன்றில் சற்றுமுன்னர் பெருமளவு பணம் வாள் முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது.
குறித்த தனியார் நிதி நிறுவனத்தில் இன்று காலை 8.30 மணிக்கு சுமார் 18 லட்சத்து 91 ஆயிரத்து 21 ரூபா பணம் வாள் முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இன்று காலை வழமைபோல நிதி நிறுவனத்தை திறந்த பணியாளர்கள் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த பணத்தினை வங்கியில் வைப்பிலிடுவதற்காக எடுத்துள்ளனர்.
இதன்போது வாளோடு உள்நுழைந்த கொள்ளையர் அங்கிருந்தோரை அச்சுறுத்தி...
ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட 4 பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கை நாளந்தம் தொடர்ந்து விசாரணை செய்வதற்கு விஷேட மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 29ம் திகதி முதல் குறித்த வழக்கை நாளந்தம் விசாரணை செய்ய விஷேட மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா நிதியை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் காமினி செனரத்...
வ.மா.முன்னாள் சுகாதார அமைச்சரும், வவுனியா மாவட்ட மா.ச.உறுப்பினருமாகிய மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்களின் கிராமிய அபிவிருத்தி திட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில் வவுனியா சாஸ்திரி கூழாங்குளம் வட்டாரத்தில் நடைபெறும் அபிவிருத்தி வேலைகளை நேற்று (18.09) நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இதன்போது புதுக்குளம் மணியர்குளம் வீதி திருத்தம், கட்டையர்குளம் பிரதான வீதி திருத்தம் மற்றும் ஈஸ்வரன் விளையாட்டுக்கழக வாயிற்கதவு, பாதுகாப்பு வேலி கட்டுமானப்பணிகளையும் பார்வையிட்டார்.
மேற்படி திட்டங்களுக்கு மொத்தமாக ரூபா 4 மில்லியன்...
மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் சமர்பித்த 'பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான அபிவிருத்தி அதிகார சபை' மீதான பாராளுமன்ற விவாதமும் வாக்கெடுப்பும் இன்று இடம்பெறவுள்ளது.
'பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான அபிவிருத்தி அதிகார சபை' ஒன்றினை உருவாக்குவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் சமர்பிக்கப்பட்டு அமைச்சரவை அங்கீகாரத்தின் பின் பாராளுமன்றில் சட்டமூலமாக அங்கீகரிப்பதற்கு சமர்பிக்கப்பட்டது.
அதன்பின்னர் பாராளுமன்றம் நீதிமன்ற விளக்கத்திற்காக காத்திருந்த நிலையில், எவ்வித எதிர்ப்புக்களும் முன்வைக்கப்படாத காரணத்தால் சட்டமூலத்தை...