பஸ் கட்டணத்திற்கான விலைச் சூத்திரமொன்றினை தயாரிப்பது தொடர்பில் இன்று போக்குவரத்து அமைச்சுடன் கலந்துரையாடலொன்றினை மேற்கொள்ளவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ண தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், எரிபொருள் விலை சூத்திரத்திற்கு ஏற்ப எரிப்பொருட்களின் விலையில் ஒவ்வொரு மாதமும் மாற்றம் ஏற்ப்படுமாயின் விலை அதிகரிப்புக்கு ஏற்றாற்போன்று தனியார் பஸ் கட்டணங்களிலும் மாற்றங்களை கொண்டுவர வேண்டும். வருமானத்தை எதிர்பார்ப்பதைப்போன்று தனியார் பஸ் போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுபவர்களின் நலன்...
பயங்கரவாத குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை இளைஞருக்கு ஆதரவாக கொழும்பில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞர் தொடர்பில் விரைவான நீதி விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று மாலை கொழும்பில் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பயங்கரவாதக் குற்றச்சாட்டில் இலங்கை பிரஜையான மொஹமட் நிசாம்டீன் என்பவர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார். பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான திட்ட ஆவணங்கள் சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய...
60 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் கடந்த வருடம், உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. யுனிசெப் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்கள் மற்றும் பல்வேறு பட்ட காரணங்களினால் இந்த மரணங்கள் சம்பவித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய ஒவ்வொரு 5 வினாடிகளுக்கும் ஒரு சிறுவர் வீதம் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் பொருளாதார தடை அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த நாட்டில் இருந்து தருவிக்கப்பட்ட மசகு எண்ணெய் இறக்குமதியை நிறுத்தியுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது. வோசிங்டன் போஸ்ட் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவின் தகவல்படி இலங்கை ஈரானிடம் மசகு எண்ணெய்யை கொள்வனவு செய்யவில்லை. சிங்கப்பூரிடம் இருந்தே மசகு எண்ணெய்யை கொள்வனவு செய்கிறது என்று தெரிவித்துள்ளார். அணுவாயுத உடன்படிக்கையை மீறியதாக கூறியே அமெரிக்கா ஈரானுக்கு எதிராக பொருளாதார தடையை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அனுராதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட கிராமம் ஒன்றில் ஏற்படும் அமானுஷ்ய செயற்பாடு காரணமாக மக்கள் பெரும் அச்ச நிலையில் இருக்கின்றனர் என தகவல் வெளியாகி உள்ளது. கிராமம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்து அடுத்த 21வது நாட்களில் அடுத்தடுதடுத்து பலர் உயிரிழந்து வருவதாக தெரியவந்துள்ளது. அனுராதபுரம் மாவட்டத்திற்கு சொந்தமான பலுகஸ்வெவ பிரதேச செயலகத்தில் உள்ள கிராமத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்று வருகிறது. கலேன்பிந்துவெவ, ஹல்மில்லவெவ என்ற பெயர் கொண்ட இந்த கிராமத்தில் கிட்டத்தட்ட ஒரு வருடங்களாக மரணங்கள்...
தமிழ் மக்களுக்கு இந்தியா செய்து வருகின்ற உதவிகள் அளப்பரியவை. அந்த உதவிகளை இந்தியா தொடர்ந்தும் வழங்க வேண்டும் என்று தமிழகக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக அரசினால் யாழ். பொது நூலகத்துக்கு 50 ஆயிரம் நூல்கள் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது, தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், யாழ்ப்பாண நூலகம் ஆசியாவின் சொத்தாக இருந்தது....
பலாங்கொடயில் பாடசாலை மாணவர்களுக்கு ஆபத்தினை ஏற்படுத்த முயற்சித்த வாகன சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதிக மதுபானம் அருந்திவிட்டு பாடசாலை மாணவர்களை அழைத்து சென்ற தனியார் பேருந்து சாரதி ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று மாலை இந்த சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பாடசாலை பேருந்து பின்னவல, உடகமவில் இருந்து நெல்லிவெல ஊடாக அலுத்நுவர பிரதேசத்திற்கு சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குடிபோதையில் வாகனம் செலுத்திய சாரதி கைது செய்யப்பட்ட...
-மன்னார் நகர்  நிருபர்-   ஜனாதிபதியின் சிந்தனைக்கு அமைவாக  பிரகடனப்படுத்தப்பட்ட தேசிய கரையோரக் கடல் வளங்களைப் பேணும் வாரமும், கரையோரத்தை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டமும் நேற்று செவ்வாய்க்கிழமை(18)  மன்னாரில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் தலைமையில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.  இந்த நிலையில் வங்காலை கடற்கரையில் வங்காலை மீனவர்கள்,கடற்படை அதிகாரிகள் மறும் மாவட்ட கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை , பிரதேச சபை, மேற்கு கிராம அலுவலகர், ஆகியோர் இணைந்து...
ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் முறுகல் நிலை தீவிரம் அடைந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் செயற்பாடு குறித்து அதிகம் பேசப்பட்டு வருகிறது. கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நேற்று முன்தினம் நடைபெற்ற சர்வதேச நிகழ்வு ஒன்றில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். குறித்த நிகழ்வு ஆரம்பித்த வேளையில் ஜனாதிபதி...
சீனியின் விலை எந்த காரணத்திற்காகவும் அதிகரிக்கப்பட மாட்டாது என நிதி அமைச்சு அறிவித்துள்ளது. சீனி கிலோகிராம் ஒன்றுக்கு 18.50 இறக்குமதி வரியாக விதிக்கப்பட்டுள்ளது. சீனிக்கு இது வரையில் காணப்பட்ட வற் வரி 15 வீதத்தினாலும், சுங்கத்தீர்வை 20 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இறக்குமதி வரி உயர்த்தப்பட்ட மாத்திரத்தில் சீனியின் விலையை அதிகரிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்தியா மற்றும் பிரேஸில் ஆகிய நாடுகளில் சீனி உற்பத்தி அதிகரித்துள்ளதால் விலை குறைவடைந்துள்ள நிலையில்,...