எதிர்வரும் நாட்களில் நாடு முழுவதும் மின்சார விநியோகத்தில் தடை ஏற்படலாம் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலையை தொடர்ந்து மின்சாரத்திற்கான கோரிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின் உற்பத்தி நிலையங்களுக்கு அருகில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வேகமாக குறைவடைந்து வருகின்றது.
இதனால் அதிகளவான மின்சாரம், அனல் மின் உற்பத்தி நிலையங்களில் தயாரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலைமை மேலும் தொடர்ந்தால், இடை விடாமல்...
வரட்சியான காலநிலை காரணமாக அநுராதபுரம், நுவரவாவியின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதால் அநுராதபுரம் நகருக்கு குடிநீரை வீநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் அநுராதபுரத்திலுள்ள பொது மக்கள், போதனா வைத்தியசலைகள், இராணுவ முகாம்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் குடிநீரை தடையின்றி வழங்க வேண்டியுள்ளதனால், போதிய நீரை மகாவலியிலிருந்து நுகரவாவிக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றது.
ஆகவே நிலவும் வரட்சியான கலாநிலையை கருத்திற் கொண்டு பொது மக்கள்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்ட ஐந்து பேரிடம் எதிர்வரும் நாட்களில் வாக்கு மூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாக தெரியவருகிறது.
பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா, ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இவ்வாறு வாக்கு மூலங்களைப் பெற்றக்கொள்ள உள்ளது.
ஜனாதிபதி, முன்னாள் பாதுகாப்புச்...
கிணறு கட்டிக்கொண்டிருந்த நிலையில் குறித்த கிணற்றுக்குள் தவறி விழுந்து மூதாட்டியொருவர் உயிரிழந்த சம்பவமொன்று கிளிநொச்சி பாலாகடைச் சந்தி புதுமுறிப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கிணறு கட்டிக்கொண்டிருந்த போது கிணற்றில் தவறுண்டு விழுந்து கிணறு கட்டுவதற்கு பயன்படுத்திய சாரப் பலகையுடன் மோதியே குறித்த மூதாட்டி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் 76 வயதுடைய சண்முகநாதன் சிவஞானம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் மக்களுக்கு அதிகாரங்களை வழங்கக் கூடாது என்ற மன நிலையிலேயே சிங்களத் தலைவர்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
யாழ். பொதுநூலக மண்டபத்தில் நேற்று நடைபெற்ற முதலாவது தமிழ் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 91ஆவது பிறந்த நாள் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு - கிழக்கில் ஒவ்வொரு தமிழ் கிராமத்திலும் அமரர் அமிர்தலிங்கத்தின் கால்கள் பதிந்துள்ளன. மக்களோடு மக்களாக இருந்த ஒரேயொரு...
நைஜீரியாவில் பெய்த கனமழைக்கு 100 பேர் உயிரிழந்துள்ளனர் என பேரிடர் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
நைஜீரியாவில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
குறித்த மழையால் நைஜீரியாவில் உள்ள 10க்கும் மேற்பட்ட மாகாணங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
அங்குள்ள கோகி, நைஜர், அனம்ப்ரா மற்றும் டெல்டா ஆகிய மாகாணங்களை பேரிடர் மாகாணங்களாக அந்நாட்டு பேரிடர் மீட்பு குழு அறிவித்துள்ளது
வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை மூன்றாவது முறையாகவும் சந்தித்து பேசுவதற்காக தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் பியாங்யாங் சென்றடைந்துள்ளார்.
பியாங்யாங் சர்வதேச சிமான நிலையத்தை சென்றடைந்த மூன் ஜே இன்னை வட கொரிய அதிபரின் சகோதரி கிம் யோ ஜாங் நேரில் சென்று வரவேற்றுள்ளார்.
உலகமே உற்றுநோக்கிய வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றம் கிம்...
விளையாடிக்கொண்டிருந்த சிறுவனொருவன் மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று கிளிநொச்சி செல்வாநகரில் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்தில் 8 வயதுடைய சத்தியசீலன் மதுசன் என்ற சிறுவனே உயிரிழந்தவராவார்.
குறித்த சிறுவன் பெற்றோருக்கு ஒரேயொரு பிள்ளையெனவும் ஆரம்பத்தில் குறித்த சிறுவன் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவரெனவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சிறுவன் உடனடியாக வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக எடுத்துச்செல்லப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஹெரோயின் போதைப்பொருள் கொண்டு சென்ற குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
திருகோணமலையிலிருந்து அம்பாறை சென்ற தனியாருக்குச் சொந்தமான குளிரூட்டப்பட்ட பஸ் வண்டியில் மலவாயிலில் மறைத்து ஹெரோயின் போதைப்பொருள் கொண்டு சென்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 3 சந்தேக நபர்களையும், தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.கே. இப்னு அசார் தெரிவித்தார்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து கடந்த...
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் ஆறாவது அமர்வு இன்று காலை 10 மணிக்கு பிரதேச சபைத்தலைவர் துரைசாமி நடராஜசிங்கம் தலைமையில் இடம்பெற்று வருகின்றது.
இதில் கலந்துகொண்டு மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வருவதற்கு சென்ற பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு சபைத்தலைவரினால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊடகவியலாளர்கள் தமது பணிகளை மேற்கொள்வதற்கு சபைத்தலைவரினால் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் மக்களின் அபிவிருத்தி தொடர்பாக செய்திகளும் வெளிக்கொண்டுவரப்படவில்லை.
இது தொடர்பாக பிரதேசபைத்தலைவர் இது எமது சபையின் குடும்பவிடயங்கள் இங்கு இடம்பெறும்...