எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கும் தீர்மானத்தை இதுவ‍ரை எடுக்கவில்லை என  தெரிவித்துள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட், சொந்த தொழில் சார்ந்த விடயங்களில் முழு நேரம் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், நான் கிழக்கு முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திகளை சீராக முன்னெடுத்ததுடன் அதற்கான நிதி மூலங்கள் பல்வேறு வழிகளிலும் பெற்றுக்கொடுக்க முடிந்தது. ஆனால் தற்போது அபிவிருத்தி...
புத்தளம் - குருணாகல் வீதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவியொருவர் பலியாகியுள்ளார். இச் சம்பவம் நேற்றைய  தினம் மாலை பாடசாலை விட்டு வீடு செல்லும் போது  இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பாடசாலை நிறைவடைந்த நிலையில் 3 மாணவிகள் பேருந்தில் சென்று இறங்கி பாதை ஓரமாக நடந்து சென்றபோது குறித்த வீதியால் சென்ற  ஜீப் வண்டி மாணவி மீது மோதியுள்ளது. விபத்தில் காயமடைந்த குறித்த மாணவி உடனடியாக புத்தளம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்...
மத்திய முகாம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 12 ஆம் காலனியில் மக்கள் குடியிருப்பு பிரதேசத்தில் மூடப்பட்ட அரிசி ஆலையை மீள திறப்பதற்கு முன்னெடுப்புகள் இடம்பெறுகின்றன. மக்கள் குடியிருப்பு பிரதேசங்களில் அரிசி ஆலைகள் இயங்க முடியாது. சட்டம் இதை அனுமதிக்காது. ஏனென்றால் சுற்றாடல், ஒலி ஆகியன மாசடைந்து விடும். அத போல சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் போன்றவை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் முன்பு மூடப்பட்ட அரிசி ஆலையை மீள திறக்க நாவிதன்வெளி...
பாடசாலை மாணவியின் ஆபாச காணொளியை இணையத்தில் வெளியிட்ட மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காலி பொலிஸ் பிரிவு மற்றும் சிறுவர் விவகார பணியகத்தினால் பாடசாலை மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை மாணவியை ஆபாசமாக காணொளி பதிவிட்டு அதனை இணையத்தில் வெளியிட்டமை தொடர்பில் 17 வயதான பாடசாலை மாணவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்து அதனை வீடியோவாக பதிவிட்டு இணையத்தில் வெளியிட்ட மாணவன், குறித்த மாணவியை தொடர்ந்து பாலியல் நடவடிக்கையில்...
இலங்கையின் கடற்பரப்புக்குள் செல்லும் இந்திய மீனவர்களை மனிதாபிமான ரீதியில் நடத்துமாறு இலங்கையிடம் இந்தியா கோரியுள்ளது. சென்னை மேல்நீதிமன்றத்தில் நேற்று இந்திய மத்திய அரசாங்கம் இந்த விடயத்தை வெளியிட்டுள்ளது. இதன்படி இந்திய மீனவர்களை கைது செய்யும் போதும் பின் விளக்கமறியலில் வைக்கும் போதும் மனிதநேயத்துடன் நடத்துமாறு இலங்கை அரசாங்கத்தை தாம் கேட்டுள்ளதாக இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. மீனவர் சங்கம் ஒன்று தாக்கல் செய்த மனு ஒன்றுக்கு பதில் மனுவை சமர்ப்பித்தபோதே இந்திய மத்திய...
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில் தொகையை அதிகரிப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் விரைவில் அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இதன்மூலம் புலமைப்பரிசில் பெறுவோரின் எண்ணிக்கையையும் இரு மடங்காக அதிகரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், தற்போது வெளியாகவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய புலமைப்பரிசில் பெறுவோரின் எண்ணிக்கையையும் அதிகரிக்கவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
அனுராதபுரம் - பாதெனிய வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து பாதெனிய வீதியின் கலகமுவ பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்கள் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள், கெப் வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதில் தம்புத்தேகம மற்றும் அனுராதபுரம் பொலிஸ் நிலையங்களில் சேவையாற்றும் இருவரே உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் கெப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக...
யாழ். வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட வெளி மாவட்ட மீனவர்களை அப்பகுதி மீனவர்கள் மடக்கிக் பிடித்ததால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் குறித்த மீனவர்கள் மாவட்ட கடற்தொழில் சங்கத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து குறித்த பகுதிக்கு பருத்தித்துறை பொலிஸ் அதிகாரிகள் வந்துள்ளனர். அங்கு வந்த பருத்தித்துறை பொலிஸார் தடுத்து வைக்கப்பட்ட மீனவர்களை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று நீதிமன்றிடம் ஒப்படைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். எனினும் இதற்கு எதிர்ப்பு...
அனுராதபுரம் - பாதெனிய வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து பாதெனிய வீதியின் கலகமுவ பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்கள் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள், கெப் வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதில் தம்புத்தேகம மற்றும் அனுராதபுரம் பொலிஸ் நிலையங்களில் சேவையாற்றும் இருவரே உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் கெப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக...
யாழ். வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட வெளி மாவட்ட மீனவர்களை அப்பகுதி மீனவர்கள் மடக்கிக் பிடித்துள்ளனர். அத்துடன் குறித்த மீனவர்களை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த வடமராட்சி மீனவர்கள் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வெளி மாவட்ட மீனவர்களை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த நிலையில் அவர்களை நீதிமன்றில் ஒப்படைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர். எனினும் மீனவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டாம் எனக் கூறியும், மாவட்ட...