ஆசிரியர் சேவை சார்ந்த சம்பளப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அமைச்சு மட்டத்தில் யோசனையொன்றை வரையுமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். பல வருட காலமாக முறையற்ற விதத்தில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை ஏற்பட்டுள்ளன. இதனால் வேறு பல பிரச்சினைகளும் எழுந்துள்ளன. இதனைக் கருத்திற்கொண்டு ஆசிரியர்களின் தொழில் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில் பிரச்சினைகளைத் தீர்க்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த...
வவுனியா பூந்தோட்டம் பகுதியில் இன்று  காலை 5 மணியளிவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சாரதி மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் முயற்சி மேற்கொண்டுள்ளனர். மதீனா நகரிலிருந்து வவுனியா இ.போ.ச சாலைக்கு கடமைக்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த அகில இலங்கை மக்கள் போக்குவரத்து சபையின் தலைவரும் வவுனியா சாலையின் சாரதியுமான 34 வயதுடைய நபர் மீது பூந்தோட்டம் பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த...
வவுனியாவில் இலங்கை போக்குவரத்து சபையினரினால் மேற்கொள்ளப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டமானது இன்று காலை 5.30மணியளவில் கைவிடப்பட்டுள்ளது. வவுனியா புதிய பஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று முன்தினம் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பஸ்ஸின் நடத்துனர் ,சாரதி மற்றும் பஸ் உரிமையாளரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. குறித்த தாக்குதலில் காயமடைந்த இ.போ.ச பஸ் நடத்துனர் எஸ்.தயாபரன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா பொலிஸார் தனியார் பஸ் சாரதி மற்றும்...
Blogs Introduction Games Slots Wagering Requirements Playojo is the world's most trusted online casino with a range of exciting games, fast cashouts and excellent customer service. Playojo offers more than 400 different games that are powered by the most robust platform in the industry. Playojo has an impeccable reputation for player-centric design...
  புகையிரதத் திணைக்களத்தின் அசமந்தமே தொடரும் விபத்துக்களுக்கு காரணம்: வடக்கின் புகையிரதத் கடவைகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் விபத்துக்களுக்கு புகையிரதத் திணைக்களத்தின் அசமந்தமே காரணம் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சாட்டியுள்ளார். வவுனியா, ஒமந்தை, பன்றிகெய்தகுளம் பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரதத் கடவையை கடந்து சென்ற கார் ஒன்றின் மீது யாழில் இருந்து வந்த புகையிரதம் மோதியதில் நான்கு பெண்கள் மரணமடைந்திருந்ததுடன், இருவர் படுகாயமடைந்தனர். இச் சம்பவம் குறித்து...
(நோட்டன்  பிரிட்ஜ்  நிருபர்  மு.இராமச்சந்திரன்)  நுவரெலிய கல்வி வலயத்திற்குட்பட்ட கொட்டகலை பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில்  இரு ஆசிரியைகளுக்கு  இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.  கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலை நேரத்தில் பாடசாலை வகுப்பறையில்  இரு ஆசிரியைகள் மாணவர்களுக்கு மத்தியில்  மோதலில் ஈடுபட்டுள்ளனர். மோதல் சம்பவம் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா வலயக்கல்வி அதிகாரி தெரிவித்ததுடன், குறித்த ஆசிரியர்கள்...
மியான்மரில் நேற்று காலை சிறைக் கைதிகள் இடையே திடீரென ஏற்பட்ட மோதல் பின் கலவரமாக மாறியதால் சிறையை உடைத்து 41 கைதிகள் தப்பி சென்றுள்ளனர். மியான்மரில் ஹபா-அன் என்ற இடத்தில் அமைந்துள்ள. சிறைச்சாலையில் ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை அங்கு அடைக்கப்பட்டிருந்த சிறைக் கைதிகள் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. பின்னர் அது கலவரமாக மாறியது. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. அதை பயன்படுத்தி கொண்ட...
போதைப்பொருள் நடவடிக்கை குறித்து முறைப்பாடு வழங்க பொலிஸ் தலைமையகத்தில் விசேட பிரிவொன்று நிறுவப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த விசேட பொலிஸ் பிரிவானது நாளை முதல் தனது செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளது. மேலும் போதைப்பொருள் பாவனை, போதைப் பொருள் கடத்தல் போன்ற போதைப் பொருளுடன் சம்பந்தப்பட்ட அனைத்து விடயங்களையும் பொது மக்கள், 0113024803/ 0113024815/0113024820/0113024848/0113024850 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்புகொண்டு தெரிவிக்க முடியுமென பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளமை...
முகத்திற்கு அழகை கொடுக்கும் கண்களை பராமரிப்பது மிகவும் அவசியமே. மேலும் இத்தகைய கண்களில் ஏற்படும் குறைகளை போக்கி அழகான கண்களை பெற உதவும் சில இயற்கை முறைகளைப் பற்றி பார்ப்போம் குளிர்ந்த நீர் கண்களை சுத்தம் செய்யும் பொழுது எப்பொழுதும் குளிர்ந்த நீரினை கொண்டு கழுவ வேண்டும். மேலும் தினமும் அதிக நீர் அருந்துவதும் கண்களுக்கு குளிர்ச்சியை கொடுத்து கண் குறைபாடுகளை தடுக்கும். ரோஸ் வாட்டர் ரோஸ் வாட்டரில் ஒரு சிறு துணியினை கொண்டு நனைத்து...
கொழும்பில் ஒன்றுகூடிய அதிநவீன கார்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. பல கோடி ரூபா பெறுமதியான BMW i8 கார்கள் கொழும்பில் ஒரே நேரத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் குறைந்த அளவிலேயே உள்ளதாக கருதப்படும் BMW i8 கார்கள் எட்டு ஒன்றாக கொண்டு வரப்பட்டுள்ளன. கோடி ரூபா பெறுமதியான இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் தங்கள் வாகனத்தை ஒரே நாளில் கொழும்பிற்கு ஓட்டி வந்து ஒன்றாக இணைந்துள்ளனர். தங்கள் வாகனங்களின் அழகை புகைப்படம் எடுப்பதற்காகவே இந்த வாகனங்கள்...