ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரிகள் இருவர் மாளிகாவத்தை பிரதேசத்தில் வைத்து வெள்ளவத்தை ஊழல் தடுப்பு பிரிவு பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 27 கிராம் 330 மில்லிகிராம்ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளனது. நேற்று பிற்பகல் 1.35 மணியளவில் மாளிகாவத்தை சமகி மாவத்தையில் வைத்து வெள்ளவத்தை ஊழல் தடுப்பு பிரிவு பொலிஸாரால் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். ஜூம்மா மஸ்ஜித் வீதியைச் சேர்ந்த 30 வயதுடைய மொஹமட் சுமித் மொஹமட் ரிஸ்வான் என்பவரே கைதுசெய்யப்பட்டார். இவரை கைதுசெய்த வேளையில்...
(நோட்டன் பிரிட்ஜ்  நிருபர்)  அட்டன்  மல்லியப்பூ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிர் இழந்த இருவரும் அடையாளம்  காணப்பட்டுள்ளனர். அட்டன் - நுவரெலியா பிரதான வீதியின் அட்டன் மல்லியப்பூ பகுதியில் 16.09.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 05.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, அட்டன் மல்லியப்பூப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து குறித்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டிவி.கேமராவில் பதிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. கொழும்பு மட்டக்குளியப் பகுதியைச்...
சின்னத்திரை நடிகை நிலானி திருமணம் செய்துகொள்ள பிரபலம் ஒருவர் வற்புறுத்தி வருவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் அளித்திருந்தார். அவரது அந்த விஷயத்தில் இப்போது ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. அதாவது அவரை லலித் குமார் என்ற உதவி இயக்குனர் தான் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தி வந்திருக்கிறார். நிலானி உடனே போலீஸை நாட லலித் குமார் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அதனை பார்த்தவர்கள் உடனே...
தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் தெறி, மெர்சல் என இரண்டு மெகா ஹிட் படங்களில் நடித்தவர். இதில் மெர்சல் சீனா மொழியில் டப் செய்து ரிலிஸாகும் அளவிற்கு பிரமாண்ட ஹிட். இந்நிலையில் தளபதியின் அடுத்தப்படத்தையும் அட்லீ தான் இயக்கவுள்ளார் என கூறப்படுகின்றது, இதுக்குறித்து ஒரு சில மறைமுக தகவல்களை அட்லீ சமீபத்தில் கூறியுள்ளார். இவரிடம் அடுத்தப்படம் எப்படியிருக்கும் என்று கேட்கையில் ‘முந்தைய இரண்டு படங்களை விட செம்ம மாஸாக இருக்கும்’ என்று...
வடக்கில் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க புதிய தொழிற்சாலைகள் உருவாக்கப்படவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். வேலணை பிரதேச செயலர் பிரிவில் உத்தியோகபூர்வ பணி ஜனாதிபதி மக்கள் சேவை வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு  தெரிவித்தார். மேலும் நல்லாட்சி அரசினால் வடக்கில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக முன்னைய அரசாங்கத்தினால் புறந்தள்ளப்பட்ட மாற்றுத்திறனாளிகள், பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பத்தினர் மற்றும்...
வவுனியாவில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையினர் இன்று முதல் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். “வவுனியா புதிய பேருந்து நிலையம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு கீழ் இயங்குவதினால் எமக்கு பாதுகாப்பில்லை, தூர சேவை பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்திற்குள் செல்வதற்கு அனுமதி வேண்டும், நேற்றைய தினம் தனியார் பேருந்து சங்க ஊழியர் உரிமையாளரினால் இ.போ.ச நடத்துனர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட...
இலங்கையில் வெதுப்பக உணவுகளின் விலை மீண்டும் ஐந்து ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த உணவுகளின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் எண்ணெய்க்கு அரசாங்கத்தால் புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே விலைகளை அதிகரிக்க சிற்றூண்டி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை கோதுமை மாவின் விலை அண்மையில் அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில் வெதுப்பக உணவுகளின் விலை அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழு மீண்டும் எதிர்வரும் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகலில் நாடாளுமன்ற கட்டடத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். நிபுணர் குழுவினால் புதிய அரசமைப்புக்கான நகல் வடிவத்துக்குரிய யோசனைத் திட்டம் ஆங்கிலத்தில் தயாரித்து வழங்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அதை அங்கீகரித்துள்ள வழிநடத்தல் குழு, அந்த யோசனைத் திட்டத்தின் சிங்கள, தமிழ் மொழிபெயர்ப்புக்களை பரிசீலிப்பதற்காக வெள்ளியன்று...
தலைமன்னார் பியரிலிருந்து படகு ஒன்றில்  மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தரான மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளமையால் தலைமன்னார் கடற்படையினர் உட்பட அப் பகுதி மீனவ சமூகம் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இவ் சம்பவம் பற்றி தெரியவருவதாவது, நேற்று ஞாயிற்றுக் கிழமை (16.09.2018) பிற்பகல் 6 மணியளவில் தலைமன்னார் பியரைச் சேர்ந்த இராமசாமி சிறிகாந் (வயது 30) மூன்று பிள்ளைகளுக்கு தந்தையான இவர் வழமைபோன்று வெளிகள இயந்திர படகு ஒன்றில் தனிமையாக மீன்...
(நோட்டன்  பிரிட்ஜ்  நிருபர்)    மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவை முன்னிட்டு அட்டன் நகரில் தமிழ் புத்தக கண்காட்சி இடம்பெறவுள்ளது. மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சின் ஏற்பாட்டில்  அட்டனில் இடம்பெறவுள்ளது. மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவை முன்னிட்டு எதிர்வரும் 19 ம் திகதி முதல் 24 ம் திகதி வரை தமிழ் புத்தக கண்காட்சியும் மலிவு விற்னையும் இடம்பெறவுள்ளது. அட்டன் டிக்கோயா நகரசபை மண்டபத்தில்  ஆயிரக்கணக்கான தலைப்புக்களில் புத்தகங்கள்...