பிலிப்பைன்ஸை தாக்கிய மாங்குட் சூறாவளியின் காரணமாக இதுவரை 64 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அந் நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ‘மங்குட்’ புயலானது பிலிப்பைன்ஸ் நாட்டின் ககாயன் மாகாணத்திலுள்ள லூஷான் என்ற தீவை கடுமையாக தாக்கியதுடன், பக்காயோ என்ற இடத்தில் கரையை கடந்தது. இந்த புயலின் காரணமாக மணிக்கு 305 கிலோமீற்றர் வேகத்திலான பலத்த காற்று, வெள்ளப் பெருக்கு என்பவற்றில் சிக்குண்டு மீட்பு படையினர் உட்பட 64 பேர்...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் மீண்டும் சரிவு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அந்த வகையில் அமெரிக்க டொலர் ஒன்றிற்கான இலங்கை ரூபாவின் விற்பனை பெறுமதி 165.14 ஆக வீழ்ச்சியடைந்துள்ளதென மத்திய வங்கி அறிவித்துள்ளது.
சீகிரியா, பஹத்கம காட்டுக்குள் நடத்தப்பட்ட பாரிய ஆபாசக் களியாட்ட வைபவம் ஒன்று பொலிஸாரால் சுற்றிவைளக்கப்பட்டுள்ளது. இதன்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளிநாட்டு யுவதிகள் நிர்வாணமாக இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சீகரிய பஹத்கமவில் காணப்படும் அடர்ந்த காட்டுப் பகுதிகள் 'டீப் ஜன்கல் பெஸ்டிவல் ஸ்ரீலங்கா  'Deep Jungle Festival  sri lanka ' என்ற பெயரில் 3 நாட்களை கொண்ட ஆபாச களியாட்ட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுக்கான...
1.6 கிலோகிரோம் நிறையுடைய ஹெரோயின் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் பிரஜை ஒருவரை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்கப்பிரிவு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். அத்துடன் இவரிடமிருந்து மீட்கப்பட்ட ஹெரோயின் போதைப் பொருளின் பெறுமதியானது 1 கோடியே 60 இட்சம் ரூபாவாகும்.
-மன்னார் நகர் நிருபர்-   மன்னார் நகர சபையின் கீழ் உள்ள மன்னார் சிறுவர் பூங்காவின் அபிவிருத்தி பணிகள் முழுமையாக பூர்த்தியடைந்துள்ள நிலையில் நாளை செவ்வாய்க்கிழமை (18) சிறுவர்களின் பாவனைக்காக குறித்த பூங்கா திறந்து விடப்படவுள்ளதாக மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார். மன்னார் நகர சபையின் பாதீட்டு நிதியின் கீழ் சுமார் 10 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறித்த சிறுவர் பூங்கா புனரமைப்பு செய்யப்பட்டு அபிவிருத்தி...
இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது அதிகரித்துள்ள எரிபொருள் விலையேற்றத்தையடுத்து பஸ் கட்டணங்களை அதிகரிப்பதற்கு பஸ்கட்டண விலைச் சூத்தரமொன்றை ஏற்படுத்தி தமது பிரச்சினைக்கு தீர்வை வழங்குமாறு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் அரசாங்கம் தமது கோரிக்கைக்கு தீர்வு வழங்காவிடில் தாம் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்து காலக்கெடுவும் வழங்கியுள்ளனர். அரசாங்கத்தினால் தீர்வொன்று வழங்கப்படாதவிடத்து இம்மாதம் 24...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தேசப்பற்று என்ற தோளில் ஏறி ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய பதவி நாற்காலிகளை பெற்றுக்கொண்டு ராஜபக்ச குடும்பத்திற்கு நாட்டை உரிமையாக்க முயற்சித்து வருவதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அம்பாறை ஜெயந்திபுர பிரதேசத்தில் நடைபெற்ற கிராம உதயம் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 124வது கிராமத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். சஜித் பிரேமதாசவுக்கு 2030ம் ஆண்டு வரை உயர்ந்த இடத்திற்கு...
தரகர்கள் பொதுவாக, வியாபாரங்களில் தான் அதிகம், ஆனால், அரசியலிலும் தரகர்கள் இருப்பதுண்டு. இலங்கை அரசியலைப் பொறுத்தவரையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ், போன்றவர்களை அவ்வாறானவர்கள் எனக் குறிப்பிடலாம். ஒரு பக்கம் வணிகப் பெரும்புள்ளியாக இருந்து கொண்டே, ஆளும்கட்சி, எதிர்க்கட்சி இரண்டுக்குமிடையே தரகு வேலைகளையும் செய்து ஆட்களை கவர்ந்திருக்கிறார்கள். அதிகார மாற்றங்களுக்கும் துணை போயிருக்கிறார்கள். அதுபோலவே, இந்தியாவின் அரசியல் கோமாளி என்று வர்ணிக்கப்படும் சுப்ரமணியன் சுவாமியும் இப்போது, ஒரு தரகு அரசியல்வாதியாகத்...
யாழில் திருமண வீட்டில் இடம்பெற்ற கைகலப்பின் போது கத்திக்குத்துக்கு இலக்காகி இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம், வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. இதில், அதே பகுதியை சேர்ந்த தந்தை, மகன் இருவரும் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளனர். திருமண நிகழ்வின் போது மாலை வேளை மதுபோதையில் இருவர் முரண்பட்டு கைக்கலப்பில் ஈடுபட்டனர். அதன் போது ஒருவர் மற்றொருவரை கடுமையாக தாக்கியுள்ளார். தாக்குதலுக்கு இலக்கான நபர் இரவு நேரத்தில் தன்னை...
வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்தவர்கள் மற்றும் நெடுந்தீவு மேற்கை சேர்ந்தவர்கள் யாழ். நோக்கி சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்து தொடர்பில் மயிரிழையில் உயிர் தப்பிய சிறுவன் சாட்சியமளித்துள்ளார். அந்த சாட்சியத்தில் “புகையிரதம் வருகிறதென எச்சரித்தும் சாரதி மாமா காரை செலுத்தினார்” என்ற அதிர்ச்சி தகவலை சிறுவன் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். அத்துடன், இந்த நிலையிலேயே தான் கதவை திறந்து பாய்ந்து தப்பியதாகவும் குறித்த சிறுவன் தெரிவித்துள்ளார் வவுனியா -...