இலங்கையில் வெதுப்பக உணவுகளின் விலை மீண்டும் ஐந்து ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த உணவுகளின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் எண்ணெய்க்கு அரசாங்கத்தால் புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே விலைகளை அதிகரிக்க சிற்றூண்டி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை கோதுமை மாவின் விலை அண்மையில் அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில் வெதுப்பக உணவுகளின் விலை அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சியில் திடீரென மயங்கி விழுந்த மாணவிகள்! பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்
Thinappuyal News -
கிளிநொச்சி கந்தபுரம் பாடசாலை மாணவிகள் மூவர் பிஸ்கட் சாப்பிட்ட பின்னர் மயக்கமடைந்து விழுந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்திருந்தது.
இந்நிலையில் அந்த பிஸ்கட்டில் ஏதோ ஒரு வகையான போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கடந்த 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை கந்தபுரம் பாடசாலை மாணவிகள் மூவர் பாடசாலைக்கு அருகிலுள்ள கடையில் பிஸ்கட் பக்கட்டை வாங்கி சாப்பிட்டுள்ளனர்.
சாப்பிட்ட சற்று நேரத்தில் மூவரும் மயக்கமடைந்த நிலையில் விழுந்துள்ளனர். உடனடியாக அவர்கள்...
இன்று பெண்கள் கல்வியில் மேம்பட்டுள்ளனர், பெண்கள் வௌ;வேறு வகையான தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். பெண்கள் பல தளங்களிலும் தமது ஆற்றல்களையும் திறன்களையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இது வடக்குக் கிழக்கில் தமிழ் மக்கள் வாழும் பகுதி எல்லாவற்றிலும் நடந்துள்ளது. யுத்தகாலத்தில் பெண்கள் ஏற்கனவே செய்யாத பல பங்குபாத்திரங்களை வகித்திருக்கின்றனர். இவ்வளவும் நடந்திருந்தாலும் இன்னமும் பல பெண்கள் வன்முறைக்கு உட்படுத்தப்படுபவர்களாகவும், இலகுவில் பாதிக்கப்படக் கூடியவர்களாகவும், நிவாரணங்களுக்காக அலைகின்றவர்களாகவும், ஏமாற்றப்படுபவர்களாகவும் இருக்கின்றனர்.
சுனாமிக்குப் பின்னரும், யுத்தத்துக்குப்...
முதலமைச்சர் விக்னேஸ்வரன் சிங்களப்பேரினவாதி ஆக இருப்பது பிரச்சனை அல்ல அவர் தமிழ்மக்கள் பிரச்சனையயில் கொள்கையுடன் செயற்ப்படுகிறாரா என்பதைத்தான் பார்க்கவேண்டும் -அமைச்சர் கந்தையா சிவனேசன் பவன் அதிரடி
வடமாகாண சபையை ஊழல் நிறைந்த சபை என்று கூறமுடியாது கட்சிகளுடைய கால்ப்புணர்ச்சியே காரணம் யார் முதலமைச்சர் என்பது பிரச்சனை அல்ல கொள்கையில் யார் சிறந்தவர்கள் என்பதுதான் அவசியம் -அமைச்சர் கந்தையா சிவநேசன் தினப்புயல் களம் சமகால அரசியலின் போது
விபத்தின்நூடாக தமிழ் அரசுக்கட்சிக்குள் வந்தவர்கள்...
அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதனின் தொழிற்சங்க சேவையினை பாராட்டி கௌரவித்தார் முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன்
தொழிலாளர் உரிமைக்காக போராடுகின்றோம் என்று கூறுபவர்களுள் ஒரு சில அரசியல்வாதிகளின் கைப்பொம்மைகளாக உலா வருகின்றனர் இவர்கள் எம்மத்தியில் வாழ்கின்ற பச்சோந்திகளாவர். இதே வேளை தமது உயிரையும் பொருப்படுத்தாது உண்மைக்காக உரத்துக் குரல் கொடுக்கின்ற நீர்மயமான தொழிற்சங்கவாதிகளும் எம்மத்தியில் உள்ளனர். இவர்களுள் ஒருவராகத்தான் அகில இலங்கை...
காணாமல் போனவர்கள் குறித்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கில் மூடப்பட்ட கிணறுகளை தோண்டினால் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க முடியும் என விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக விடுதலைப்புலிகள் தொடர்பில் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்தால் அவர் பெரும் சிக்கல்களுக்கு முகங்கொடுத்து தனது, இராஜாங்க அமைச்சு பதவியையும் இழந்து, அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை...
கிளிநொச்சி மாவட்டத்தில் காலபோக செய்கையின் போது உரம் களஞ்சியப்படுத்தி வைக்கக்கூடிய களஞ்சிய வசதியில்லாத நிலை காணப்படுவதாக மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் வே.ஆயகுலன் தெரிவித்துள்ளார்.
மானியம் வழங்குவது குறித்து விவசாயிகள் வினவிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்,“காலபோகத்தின் போது விவசாயிகளுக்கு வழங்குவதற்கு 8000 மெற்றிக்தொன் உரம் தேவைப்படுகின்றது. இவ்வாறு தேவையான உரத்தினை களஞ்சியப்படுத்தக்கூடிய போதிய களஞ்சிய வசதிகள் இல்லை.
960 மெற்றிக்தொன் உரத்தினை களஞ்சியப்படுத்தக்கூடிய களஞ்சிய வசதிகள் மாத்திரமே...
முத்துராஜவெல எண்ணெய் களஞ்சியத்தொகுதிக்கு கடலினூடாக மசகு எண்ணெய் கொண்டுசெல்லும் குழாயில் ஏற்பட்ட கசிவின் காரணமாக கடந்த சனிக்கிழமை அதிகாலை மசகு எண்ணெய் கடலில் கலந்தது.
இதனால் திக்ஓவிட்ட கடற்பிராந்தியத்தைச் சூழவவுள்ள உஸ்வெட்ட கெய்யாவ முதல் ஜா எல – பமுணுகம வரையிலான கரையை அண்மித்த பகுதிகளில் சுற்றாடல்சார் பிரச்சினைகள் ஏற்படும் அச்சம் ஏற்பட்டிருந்தது.
கடற்பிராந்தியத்தில் கலந்த மசகு எண்ணெயைச் சுத்திகரிக்கும் பணிகளில் கரையோரப் பாதுகாப்புப் பிரிவு கடற்படை சமுத்திரச் சூழல் பாதுகாப்பு...
நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் மற்றும் அவரின் மகன் ஆகியோர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
150 மில்லியன் ரூபா பெறுமதியான நிர்மாணப் பணிகளுக்கான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை கடத்தியமை தொடர்பில் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸ்மா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய...
உயர்தர வகுப்பு மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி, அந்த காட்சிகளை இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்ததாக கூறப்படும் உயர் தர வகுப்பு மாணவனை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரான மாணவன், மாணவியை காதலித்து வந்ததுடன் அவரை உணவட்டுன ரூமஸ்வல பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதுடன், அந்த காட்சிகளை தனது செல்போனில் பதிவு செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இதனையடுத்து சந்தேக நபர் அந்த காட்சிகளை இணையத்தளத்தில் பதிவேற்றியுள்ளார். அந்த காட்சிகளை...