யாழ்ப்பாணத்தில் 119 கிலோக்கிராம் கஞ்சாவை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.வடமராட்சி கிழக்கு மாமுனை கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகை, கடலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் வழி மறித்து சோதனை செய்த போது , 48 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த 118 கிலோ கஞ்சாவை கைப்பற்றினார்கள். அத்துடன் படகில் பயணித்த மூவரையும் கைது செய்தனர்.கைது செய்யப்பட்டவர்களையும், அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட கஞ்சாவையும் நேற்றைய தினம் மாலை...
பாரிய மனித உரிமை மீறல்கள்  மற்றும் இனப்படுகொலைகளில் ஈடுபட்டு வந்த ஸ்ரீலங்கா அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பிரித்தானியா பரிந்துரைக்க  வேண்டுமென வலியுறுத்தியுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அதற்கான விவாதம் ஒன்றினை பிரிட்டன் பாராளுமன்றில் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் லண்டனில்  தீவிரமாக செயற்பட்டு வருகின்றது.   அந்த வகையில் கடந்த09/09/2018அன்று ஞாயிற்றுக்கிழமை லண்டன் லூசியம் சிவன்  ஆலய தேர்த்திருவிழாவின் போது நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்பாட்டாளர்கள் மக்களிடம் கையெழுத்து...
(மன்னார் நகர் நிருபர்)   மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இருந்து கடந்த மூன்று தினங்களில் 22 கர்ப்பிணித்தாய்மார்கள் வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரசவ விடுதியில் கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர் மீது கடந்த வியாழக்கிழமை(6) காலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவத்தை கண்டித்து வைத்தியர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் மன்னார் பொலிஸாரினால் மன்னார் நீதிமன்றத்தில்...
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பரிமாறப்பட்ட உணவை உட்கொண்ட மூவர் பாதிப்படைந்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த திருமணத்திற்கான மண்டப ஏற்பாடுகள் மற்றும் உணவு ஏற்பாடுகள் என்பவற்றை மணமக்கள் வீட்டார் மண்டப உரிமையாளர்களிடமே ஒப்படைத்துள்ளனர். குறித்த நிலையில் நேற்றைய தினம் திருமணம் நிறைவடைந்த பின்னர் உணவு பரிமாறப்பட்ட போது வழங்கப்பட்ட மாமிச கறிகள் பழுதடைந்த நிலையில் காணப்பட்டுள்ளது. அதனை அறியாது அதனை உட்கொண்டவர்கள் சிறிது நேரத்தில் வாந்தி எடுத்துள்ளனர். அதனை அடுத்து திருமண வீட்டில்...
மனித உரிமை மீறல்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்தவர்கள் எனக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட படையினரைத் தப்ப வைப்பதில் இலங்கை அரசு தீவிரமாக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசின் கீழ் உள்நாட்டில் நடத்தப்படும் விசாரணைகள் மூலம் யுத்தகால அநீதிகளுக்கு நீதி கிட்டமாட்டா என்பது தெளிவாகி வருகின்றது. ஆகவே, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்துக்கு அமைய சர்வதேசப் பங்களிப்புடனான நீதிப் பொறிமுறையே முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை ஐ.நா. பொதுச்...
பரீட்சையில் சித்தியடைவதைப் போன்றே தமது வாழ்க்கையையும் வெற்றிகொள்வதற்கான அறிவினை பெற்றுக்கொள்ளக்கூடியவாறு கல்விப் பாடவிதானங்கள் அமையப்பெற வேண்டும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். ஹம்பாந்தோட்டை கொடவாய மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பகூடத்துடன் கூடிய இரண்டு மாடிக் கட்டடத்தை நேற்று மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி தெரிவித்தார். பாடசாலைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மாணவ, மாணவிகள் ஆரவாரத்துடன் வரவேற்று அழைத்துச் சென்றனர். அதனைத் தொடர்ந்து புதிய தொழில்நுட்பகூடத்துடன் கூடிய இரண்டு மாடிக் கட்டடத்தை...
வவுனியாவில் குருக்கள்புதுக்குளம், பூவரசங்குளம் பகுதியில் இன்று  கட்டுத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 12.30 மணியளவில் சட்டவிரோதமாக பதிவுகளின்றி கட்டுதுப்பாக்கியுடன் காட்டு பகுதிக்கு வேட்டையாட சென்றிருப்பதாக விஷேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பூவரசங்குளம் காட்டு பகுதியில் பதிவுகள் ஏதுமின்றி சட்டவிரோதமாக கட்டுத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததன் பேரில் 25 வயதுடைய  நபரையே  கைது செய்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிசார்...
மஹிந்த ராஜபக்ஷ “இலங்­கை யின் முன்னாள் ஜனா­தி­பதி என்­ப­து டன், எதிர்­கால ஜனா­தி­ப­தி­யாக வர­வுள்­ளவர்” என்று இந்­திய பார­திய ஜனதா கட்­சியின் தலை­வர்­களில் ஒரு­வ­ரான சுப்­பி­ர­ம­ணியன் சுவாமி தெரி­வித்­துள்ளார். மஹிந்­தவின் புது­டில்லி விஜயம் குறித்து அவர், தனது டுவிட்டர் தளத்தில் கருத்து வெளி­யிடும் போதே இவ்­வாறு குறிப்­பிட்­டுள் ளார். இலங்­கையின் முன்னாள் ஜனா­தி­ப­தியும், அடுத்த ஜனா­தி­ப­தி­யா­கவும் வர உள்­ளவர், விராட் இந்­துஸ்தான் சங்கம் நடத்தும் நிகழ்வில் கலந்­து­கொள்ள புது­டில்லி வந்­துள்ளார். நாளை...
எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைவாக நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்ட பெற்றோல் மற்றும் டீசலின் விலை அதிகரிப்பினை அடிப்படையாக கொண்டு லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது. அதன்படி லங்கா ஓடோ டீசல் ஒரு லீட்டரின் விலை 123 ரூபாவாகவும் யூரோ F ரக சுப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலை 133 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 92 ரக ஒக்டெய்ன் பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 150 ரூபாவாகவும், 95...
யாழ்ப்பாணத்திலிருந்து மிகிந்தலை  நோக்கி கேரளா கஞ்சாவினை கடத்தி சென்றவரை வவுனியா பொலிஸார் நேற்று  இரவு 9.30மணியளவில் கைது செய்துள்ளனர்.இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்  யாழ் - மிகிந்தலை பேருந்தை நொச்சிமோட்டை பகுதியில் வழிமறித்து  சோதனை மேற்கொண்ட போது அப் பேருந்தில்  பயணித்த மிகிந்தலையை சேர்ந்த சந்தேக  நபர் 2கிலோ கிராம் கேரள கஞ்சா வைத்திருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின்னர்...