கண்டி இராசதானியை கைப்பற்ற இங்கு மன்னராட்சி  இடம்பெறவில்லையென  ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். அரசாங்கத்திற்கு எதிராக போராடுவதாக குறிப்பிட்டு களியாட்டத்தை அரங்கேற்றியவர்கள்  மீண்டும் கண்டி  நகரில் போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாக குறிப்பிடுவது அவர்களின் மனநிலையினை  வெளிப்படுத்துகின்றது. அரசாங்கம்  இப் போராட்டத்திற்கு  எவ்வித தடையும்  விதிக்காது கண்டி இராசதானியை கைப்பற்றும் வரை போராட முடியும். 05 ஆம் திகதி இடம் பெற்றதன்  இரண்டாம் பாகத்தை கண்டியில் காணலாம் எனவும்...
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவித் திட்டத்தன் கீழ் இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு 160 புகையிரத பெட்டிகள் வழங்கப்படவுள்ளன. கடந்த 7 ஆம் திகதி ரைட்ஸ் நிறுவனம் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கிடையில் சலுகையடிப்படை நிதியுதவித் திட்டத்தின் கீழ் இந்தியாவிடமிருந்து 160 புகையிரத பெட்டிகளை வழங்குவதற்காக சுமார் 82.64 மில்லியன் ரூபாவுக்கு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை ரைட்ஸ் நிறுவனம் பணிப்பாளர் முக்கேஷ் ராத்தோர் மற்றும் இலங்கை போக்குவரத்து மற்றம் சிவில் விமான சேவைகள்...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கைகளில் விரக்தியடைந்திருக்கும் வடமாகாண முதலமைச்சர் தமிழ் மக்களுக்கு சேவையாற்ற லங்கா சமசமாஜ கட்சியுடன் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றேன் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார். சோசலிச மக்கள் முன்னணி இன்று (10) கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்தெரிவிக்கையிலேயே திஸ்ஸ விதாரண இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், முதலமைச்சர் விக்னேஸ்வரன் எமது லங்கா சமசமாஜ கட்சியுடன் இணைந்து...
அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 200 பசுக் கன்றுகள் உயிரிழந்துள்ளதாக அகில இலங்கை விவசாய சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் மே மற்றும் டிசம்பர் மாதங்களில் அவுஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 5000 பசுக்கன்றுகளில் 200 பசுக்கன்றுகளே உயிரிழந்துள்ளதாக அகில இலங்கை விவசாய சங்கத்தின் அமைப்பாளர் நாமல் கருணாரட்ன தெரிவித்துள்ளார். நாட்டில் பால் உற்பத்தியை மேம்படுத்தல் மற்றும் 2020 ஆம் ஆண்டளவில் பால் உற்பத்தியில் தன்னிறைவை அடையும் திட்டத்தின் கீழ்...
கல்முனை, சவளக்கடை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தொன்றில் கணவன் உயிரிழந்துள்ள நிலையில், மனைவி படுகாயமடைந்துள்ளார். ஆசிரியர்களாக பணியாற்றும் குறித்த தம்பதியினர், பாடசாலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, பஸ் ஒன்றை முந்திச்செல்ல முற்பட்ட போது அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் 41 வயதுடைய கணவன் ஞானமுத்து ஜயந்தசீலன் பலியாகியுள்ளதுடன், 35 வயதுடைய மனைவி தாட்சாயினி படுகாயமடைந்து கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் கல்முனைப்...
இந்தியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான கட்சித் தலைவர்கள் குழு இன்று காலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்திய அரசாங்கத்தின் அழைப்பையேற்று சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான கட்சித் தலைவர்கள் குழு நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு விஜயம் செய்தது. இந்த விஜயத்தில் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன், அகில...
நோட்டன்  பிரிட்ஜ் நிருபர்  மலைநாட்டு புதிய கிராமங்கள் உள்கட்டமைப்பு அமைச்சு முன்னெடுத்து வரும் வீடமைப்புத்திட்டங்களுக்கு சூட்டப்படும் பெயர்கள் முன்னையவர்களை நினைவு படுத்துவதற்கு மட்டுமல்ல. அது உங்கள் முகவரியும் கூட. இருநூறு வருஷகாலமாக முகவரியற்று இருந்த மக்களுக்கு இதன் மூலம் இருப்பையும் இடத்தையும் உறுதிபடுத்தும் வகையில் நமது அடையாளமாக அதனை நடைமுறைக்கு கொண்டுவர அதனை நீங்கள் புழக்கத்தில் பயன்படுத்த வேண்டும் என தொழிலாளர் தேசிய முன்னணியின செயலாளர் நாயகமும் நுவரலியா மாவட்ட...
பிக்பாஸ் முதல் சீசன் வெற்றியாளர் ஆரவ்வை விட மக்களிடம் பிரபலம் அடைந்தவர் ஓவியா. இரண்டாவது சீசனின் ஒரு ரீச்சிற்காக ஓவியாவை வீட்டிற்குள் ஒரு நாள் அனுப்பி வைத்தனர், அந்த அளவிற்கு அவருக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இவர் எங்கு போனாலும் கூட்டம் தான். அண்மையில் இலங்கையில் உள்ள ஒரு நகைகடை திறப்பு விழாவிற்கு சென்றுள்ளார். அங்கு அவரை காண ஏராளமான ரசிகர்கள் கூறியிருந்துள்ளனர். அதோடு அங்கு பத்திரிக்கையாளர்கள் ஓவியாவை பேட்டி...
மேஷராசி அன்பர்களே! பணவரவும் அதற்கேற்ற செலவுகளும் சமமாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியுமான சூழ்நிலையே காணப்படும்.  தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருமணத்துக்கு வரன் தேடும் முயற்சிகளில் பொறுமை அவசியம். இருக்கும் வீட்டை மாற்றும் முயற்சியில் இப்போது ஈடுபடவேண்டாம். பிள்ளைகள் வழியில் பெருமைப்படத் தக்க செய்தி கிடைக்கும். வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு இந்த வாரம் சில சலுகைகள் கிடைக்கும். உற்சாகமாகக் காணப்படுவீர்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்கள் அதற்கான முயற்சிகளை...
(பா.திருஞானம்)   மலையக மக்கள்  முன்னணியின் தோட்ட தலைவர்களுடான சந்திப்பு ஒன்று கல்வி இராஜாங்க அமைச்சரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வே.இராதாகிருஸ்ணன் தலைமையில் மஸ்கெலியாவில் (10) நடைபெற்றது. இந் நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் உட்பட மலையக மக்கள் முன்னணியின் நிர்வாக உயர் உறுப்பினர்கள் உட்பட பிரதேச தோட்ட தலைவர்கள் கலந்து கொண்டார்கள். இதன் போது தோட்டங்களில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திட்டங்கள் தொடர்பில்...