கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடுகள் சிலவற்றுக்குள் அத்துமீறி நுழைந்த நபர்கள், அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி பணம் மற்றும் நகை கொள்ளையடித்துள்ளனர். இந்த குற்றச்சாட்டு தொடர்பில் ஐந்து பேர் கல்கிஸ்ஸ குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் 4 கையடக்க தொலைபேசிகள், தொலைக்காட்சிகள் இரண்டு, டெப் ஒன்றும், தங்க நகை மற்றும் நகை அடகு வைத்த பற்றுச் சீட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் பயன்படுத்தி பிளாஸ்டிக் துப்பாக்கிகள் மற்றும் இரும்பு...
இந்த தேங்காய் எண்ணெய் சமையலில் மட்டுமின்றி, சரும பராமரிப்பிற்கும் பெரிதும் உதவியாக இருக்கும். மற்ற எண்ணெய்களை விட தேங்காய் எண்ணெயில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளதால், இதைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு ஏற்ற மிகவும் சிறப்பான ஓர் அழகுப் பராமரிப்பு பொருள். இதற்கு காரணம் அதில் உள்ள சத்துக்கள் தான். முக்கியமாக ஒருவர் தினமும் இரவில் படுக்கும்...
யாழ் மாவட்டத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்கள் உள்ளிட்ட வன்முறைகளுடன் தொடர்பு கொண்ட முக்கிய சந்தேகநபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் சட்டவிரோத ஆவா குழுவுடன் இணைந்து செயற்பட்டதுடன், அண்மைக்காலமாக அதில் இருந்து விலகி தனிப்பட்டு பல வன்முறைகளில் ஈடுபட்டுவந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைமறைவாகி இருந்த அவர் நேற்று கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியில் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 12 விரைவில் தொடங்கவுள்ளது. இதற்கான அறிமுக விழா கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடந்த நிலையில், உண்மையான ஜோடிகள் தங்கவுள்ளனர். எனவே ஒவ்வொரு நாளும் வித்தியாசமான திருப்பங்கள் இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த சீசனில் பிரபல கிரிக்கெட் வீரரான ஸ்ரீசாந்த் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, இதற்கான அறிவிப்பும் ரகசியம் காக்கப்படுகிறதாம். ஸ்ரீசாந்த் தவிர, நடிகைகள் தனுஸ்ரீ தத்தா அவரின்...
கடந்த 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கிண்ண தொடரில் இலங்கை அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்தியா தோற்றதை என்றும் மறக்க முடியாது. ஆசிய கிண்ண 2008 தொடரில் ஆறு அணிகள் பங்கேற்ற நிலையில் இறுதி போட்டிக்கு இந்தியாவும், இலங்கையும் தகுதி பெற்றன. இப்போட்டியில், இலங்கை முதலில் பேட்டிங் செய்த நிலையில் ஜெயசூர்யா அபாரமாக சதமடித்தார். அந்த அணி 273 ஓட்டங்களை எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அடுத்து ஆடிய இந்தியா, மென்டிஸ்...
க.பொ.த. உயர்தரப் பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணியின் இரண்டாம் கட்ட நடவடிக்கை இடம்பெறும் நான்கு பாடசாலைகள் இம்மாதம் 11 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரையில் மூடப்பட்டிருக்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு ஆனந்தா, களுத்தறை குருகோமி, காலி சுதர்மா மற்றும் மாத்தறை சர்வேசஸ் ஆகிய 4 பாடசாலைகளுமே இவ்வாறு மூடப்பட்டிருக்கும். இதுதவிர, இன்னும் 20 பாடசாலைகள் பகுதியளவில் மூடப்பட்டு மதிப்பீட்டுப் பணி முன்னெடுக்கப்படும் எனவும்...
கூட்டு எதிரணியின் மக்கள் சக்திக்காக கொழும்பில் ஒன்று திரண்ட பாரிய மக்கள் கூட்டம் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கம் இப்போது ஒவ்வொரு கதையைக் கூற ஆரம்பித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கூட்டு எதிரணிக்கு ஆதரவான மக்கள் குழு, நாம் எதிர்பார்த்தது போலவே கொழும்புக்கு வந்தனர். இந்தளவு எண்ணிக்கையில் மக்கள் வருவார்கள் என அரசாங்கம் எதிர்பார்க்க வில்லை. நாம் நினைத்தது போலவே மக்கள் கூட்டத்தைக் கொண்டு வந்து அரசாங்கத்திடம் காட்டினோம். தற்பொழுது அரசாங்கம்...
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் குடாகம பகுதியில் மணல் அனுமதி பத்திர நிபந்தனைகளை மீறி மணல் ஏற்றிச் சென்றுகொண்டிருந்த லொறி சாரதி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் நேற்று மாலை ஒப்படைக்கப்பட்டதாக தலவாகலை விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரியொருவர் தெரிவித்தார். மணல் கொண்டு செல்வதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் அனுமதி பத்திரத்தில் திகதி குறிப்பிடப்படாமல் இருந்தமையே இந்த சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மணல் ஏற்றிச்...
எல்லா நடிகைகளை போல் கிளாமர் பக்கம் போகாமல் ஒருகட்டத்தில் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் நயன்தாரா. கோலமாவு கோகிலா என்ற படத்தை தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் இமைக்கா நொடிகள் என்ற படம் வெளியானது. படத்தின் கதையை பாராட்டி பலரும் பேசிவிட்டனர். இந்த படம் ஒரு வார முடிவில் சென்னையில் மட்டும் ரூ. 2.86 கோடி வசூல் செய்ய, தமிழ்நாட்டில் ரூ. 17 கோடி வரை வசூலித்திருக்கிறது.
இலங்கை காலநிலையில் நாளை முதல் மாற்றம் நிகழவுள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளை முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் இந்த மாற்றம் நிகழவுள்ளது. வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணத்தில் மாலை நேரத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கு பொருத்தமான வளிமண்டல நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக திணைக்களத்தின் அதிகாரி உதேனி வீரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டை சுற்றியுள்ள கடல் பிரதேசத்தில் இன்றைய தினம் மழையற்ற...