இந்தியாவின் மூன்று போர்க்கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்தில் நேற்று நங்கூரமிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று கப்பல்களும் 6 நாட்கள் நடத்தப்படவுள்ள பயிற்சியில் பங்கேற்பதற்காகவே வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஎன்எஸ் சுமாத்ரா, ஐஎன்எஸ் கிர்ச், ஐஎன்எஸ் கோரா திவ் ஆகிய கப்பல்களே இலங்கை கடற்படையினருடன் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளன.
இந்திய உயர்ஸ்தானிகரக தகவல்படி இந்த பயிற்சிகள் அடுத்து வரும் இரண்டு வருடங்களுக்கும் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா தற்போது நடைபெற்று வருகின்றது.
கடந்த மாதம் 16ஆம் திகதி ஆலயத்தின் திருவிழாவானது கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பமாகியிருந்தது.
இந்த நிலையில் இன்று சித்திரவேலைப்பாடுகளுடன் கூடிய திருத்தேரில் வலம் வந்து காட்சி தரும் வேலனை காண பெருந்திரளான மக்கள் அங்கு திரண்டுள்ளனர்.
இந்த மக்கள் கூட்டத்தில் உள்நாட்டவர்கள், வெளிநாட்டவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளதுடன், பக்தர்கள் தமது நேர்த்திக்கடன்களையும் நிறைவேற்றி வருகின்றனர்.
இதேவேளை தற்போது...
தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் என தெரிவித்து தமிழ் பெண் ஒருவரை கடத்திச் சென்று கூட்டுப்பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்களுக்கு கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட இருவருக்கு 30 ஆண்டுகால கடூழிய சிறை தண்டனை விதித்து அனுராதபுரம் மேல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
அனுராதபுரம் - தேவநம்பியதிஸ்ஸபுர, நிராவிய பிரதேசத்தைச் சேர்ந்த 58 மற்றும் 68 வயதுடைய இரண்டு பேருக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு எதிராக 3...
வவுனியா புளியங்குளம் - பரிசங்குளம் பகுதியில் வீட்டிலிருந்து கணவன் , மனைவி இருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
வவுனியா புளியங்குளம் பரிசங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து கணவன்,மனைவியான 25 வயதுடைய நந்தகுமார் மற்றும் 19 வயதுடைய கெளதமி என்ற இருவருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
வவுனியா கனகராயன் குளத்தைச் சேர்ந்த இவ்விருவரும் பரிசங்குளத்தில் உள்ள தமது உறவினர் வீட்டில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளனர்
மனைவி தூக்கில் தொங்கிய நிலையிலும் கணவன் மனைவிக்கு அருகே...
ஜப்பான் நாட்டின் ஹொக்கைடோ மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் புதையுண்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இன்று 16 ஆக அதிகரித்தது.
ஜப்பான் நாட்டில் கடந்த 4 ஆம் திகதி ‘ஜெபி’ புயல் தாக்கியது. இந்தப் புயல் காரணமாக பெய்த கனமழையினால் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. புயல், மழையில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர்.
பல்வேறு நகரங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கின. விமானங்கள், கப்பல்கள், ரயில் சேவைகள் ரத்தாகி...
அமெரிக்காவில் வங்கிக்குள் நுழைந்த மர்ம நபர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் இந்தியர் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் அமைந்துள்ள தனியார் வங்கி நேற்று வழக்கம் போல் இயங்கிக் கொண்டிருந்த போது, திடீரென வங்கிக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
இதில் அங்கிருந்த வாடிக்கையாளர்களில் ஒரு இந்தியர் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில் பொலிஸார் குறித்த மர்ம நபரை சுட்டுக் கொன்றனர்....
பகிடிவதையை தடுத்தல் தொடர்பான சட்டத்தை உரியவாறு நடைமுறைப்படுத்தி பகிடிவதையுடன் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு இடமளிக்க முடியாது என்றும் பல்கலைக்கழக கல்வியின் தரத்தினை பாதுகாப்பதற்காக அரசாங்கம் விரைவில் விசேட நிகழ்ச்சித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள பொலன்னறுவை தேசிய தொழிற்பயிற்சி நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டும்...
தனக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னணியில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மட்டுமல்லாது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பலரும் இருப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
நீதிமன்ற அவமதிப்பு விடயத்தில் மேன் முறையீட்டு நீதிமன்ற அழைப்பாணை பிரகாரம் இன்றுஅவர் மேன் முறையீட்டு நீதிமன்றில் ஆஜரான பின்னர் வெளியேறிச் செல்கையில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கொழும்பில் இருந்து யாழ் சென்ற இ.போ.சபை பஸ்ஸிலிருந்து இறங்க முற்பட்ட இளைஞன் பஸ்ஸின் சில்லில் அகப்பட்டு பலியாகியுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் வவுனியா, புளியங்குளம், பரசங்குளம் அருகே ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸில் பயணித்த இளைஞர் ஒருவர் வவுனியா, புளியங்குளம், பரசங்குளம் பகுதியில் பஸ்ஸிலிருந்து இறங்க முற்பட்ட போது அவருடைய பயணப்பை...
வவுனியாவில் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் நேற்று இரு வீட்டுத்திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டன.
116 மற்றும் 117 வது மாதிரிக் கிராமங்களாக அமைக்கப்பட்ட வீமன்கல்லு மற்றும் வவுனியா வடக்கு சிவாநகர் ஆகியவையே பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.
வீமன்கல்லு கிராமத்தில் 12 வீடுகளும், சிவாநகரில் 12 வீடுகளுமாக 24 வீடுகள் வழங்கப்பட்டிருந்த நிலையில் வாழ்வாதார உதவித்திட்டங்கள், தொழில் முயற்சியாளர்களுக்கான பொருட்கள், கடன் திட்டங்கள் மற்றும் இலவச மூக்குகண்ணாடிகள் என்பனவும் இதன்போது வழங்கப்பட்டிருந்தன.
இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர்...