தற்போதைய இந்திய கிரிக்கெட் அணி தான் சிறந்த அணி என்று ரவி சாஸ்திரி கூறியதற்கு, பதிலடி கொடுக்கும் விதமாக கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி, 3-1 என்ற கணக்கில் தொடரை இழந்தது. 4வது டெஸ்ட் போட்டியில் வெற்றிக்கு அருகில் வந்த இந்தியா, துடுப்பாட்ட வீரர்களின் மோசமான ஆட்டத்தால் தோல்வியை தழுவியதால் தொடரையும் இழந்தது. இதனால் இந்திய அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளதுடன், விராட்...
அமெரிக்காவில் வங்கி கட்டிடத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்மநபரை போலீசார் சுட்டுக்கொன்றனர். #USBankShoot அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தில் சின்சினாட்டி நகரில் உள்ள ஒரு வங்கி கட்டிடத்தில் நேற்று துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. 30 மாடிகளை கொண்ட அந்த கட்டிடத்துக்குள் உள்ளூர் நேரப்படி நேற்று காலை 9 மணி அளவில் புகுந்த ஒரு மர்ம நபர் திடீரென்று அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால்...
ஈக்வடார் நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. ஈக்வடார் நாட்டில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ள இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை என அமெரிக்க புவிசார்மையம் தகவல் தெரிவித்துள்ளது. தெற்கு அம்பாடோ நகரத்திலிருந்து சுமார் 94 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பகுதியை மையமாக கொண்டு 112 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக...
சுகாதார அமைச்சு ஏற்பாடு செய்த இலவச வைத்திய முகாம் ஒன்று இந்த மாதம் இரண்டாம் திகதி ஞாயிற்றுக் கிழமை தெஹியத்தகண்டி தேசிய பாடசாலையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில் சுமார் 1500 நோயாளர்கள் சிகிச்சை பெற்றனர்.அவர்கள் அனைவருக்கும் இலவசமாக  மருந்துகள் வழங்கப்பட்டதோடு 700 பேருக்கு மூக்கு கண்ணாடிகளும் வழங்கப்பட்டன. அத்தோடு,இரண்டாயிரம் தென்னங்கன்றுகளும் 15 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களும் 20 நீர்த்தாங்கிகளும்...
நாட்டின் தென் கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கான சாத்தியத்தைத் தவிர நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு அல்லது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும். ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது 50-60 கிலோ மீற்றர்...
ஓரின சேர்க்கை சட்ட விரோதமானது அல்ல என்று சுப்ரீம் கோர்ட்டு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கி இருப்பதை நடிகர்–நடிகைகள் வரவேற்று உள்ளனர். அதன் விவரம் வருமாறு:– நடிகை திரிஷா:– ஓரின சேர்க்கை சம்பந்தமான 377 சட்ட பிரிவு ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் சம உரிமைக்கு செல்வதற்கான வழி கிடைத்துள்ளது. ஜெய் ஹோ.. நடிகை கஸ்தூரி:– ஓரின சேர்க்கை குற்றம் என்ற சட்டத்தை நீக்க தொடர்ந்து நடந்த போராட்டங்களுக்கு வெற்றி...
வடக்கு கிழக்குப் பிரதேசத்தில் அண்மைக் காலமாக பௌத்த துறவிகளை சிங்கள அரசியல் தலைமைகள் ஏவி விட்டு புதிதாக புத்தர் சிலைகளை அமைப்பதிலும் அல்லது இரவோடு இராவாக புத்தர் சிலைகளை தமிழ்க் கிராமங்களில் புதைத்துவிட்டு ஆராச்சி செய்வதாகக் கூறி அதனைத் தோண்டி எடுத்து பல நூற்றாண்டுகளுக்கு முன்பு புத்தர் வாழ்ந்த இடம் என்று கூறி அங்கே தமது கோவில்களைக் கட்டுவதற்கான முன்னெடுப்புக்கள் கூட பல இடங்களில் இடம்பெற்றிருக்கின்றது. கடந்த வாரத்தில்...
மன்னாரில் கடந்த 2ஆம் திகதி நடைபெற்ற இஸ்லாமிய மக்களின் புனித விழாவான ஹஜ் விழாவில் அன்பு, நற்பண்பு, ஒழுக்க விழுமியங்களை கொண்டுள்ள இஸ்லாமிய மார்க்கத்தின் விழாவில், தேவையற்ற பொய்யான அரசியல் பரப்புரைகளை செய்த அமைச்சர் றிஸாட் பதியுதீனின் செயலுக்காக மிகவும் மனம் வருந்துகின்றோம் என மன்னார் நகர சபையின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இவ் விடயம் தொடர்பாக மன்னார் நகர சபையின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து இன்று...
பேசிக்கொண்டு இருக்கும் போது “சீமான் யார்? என்று புலிகளின் தலைவர் பிரபாகரன் கேட்ட கேள்வியால் அதிர்ந்து போனேன் என்று திரைப்பட இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். “ஈழத் தமிழரின் வாழ்க்கை முறையை திரைப்படமாக இயக்கித் தாருங்கள்” என்று விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் விடுத்த கோரிக்கை தொடர்பில் இந்திய ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியிருந்தது. இதற்கு பதிலளிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், பிரபாகரனை சந்தித்தபோது, ஈழத்தமிழர் வாழ்க்கையை படமாக இயக்குவது குறித்து...
வவுனியா சூடுவெந்தபுலவு கிராமத்தில் நீண்ட காலமாக பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வரும் தமது காணிகளை வன இலாகாவினர் உரிமை கோருவதாக தெரிவித்து மக்கள் நேற்றைய தினம் முரண்பட்டுள்ளனர். தொடர்ந்து அங்கு வருகை தந்த வன இலாகா அதிகாரியின் வாகனத்தினை மறித்து வீதியில் தடையேற்படுத்தி தடுத்த மக்கள், சமரசப்பேச்சுக்களை அடுத்து வாகனத்தை விடுவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, சூடுவெந்தபுலவு கிராமத்தில் பல ஆண்டு காலமாக அப்பகுதியில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் அங்குள்ள...