சிம்பு என்றாலே வம்பு என்று தான் சொல்லி வந்தார்கள். ஆனால், மணிரத்னம் படத்தில் இத்தனை நல்லவரா சிம்பு என்று கேட்கும் விதத்தில் படப்பிடிப்பு சென்று அசத்திவிட்டார். இந்நிலையில் நேற்று செக்கச்சிவந்த வானம் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது, இதில் சிம்புவும் கலந்துக்கொண்டார். அப்போது அவரை மேடையில் பேச சொல்ல, முதல் சில நிமிடம் ரசிகர்கள் கைத்தட்டி சிம்புவை சந்தோஷத்தில் ஆழ்த்தினர். பிறகு மைக் எடுத்த சிம்பு ‘சார்(மணிரத்னம்) நன்றி, அதை தவிர...
 மன்னார் நகர் நிருபர் மன்னார் முருங்கன் கட்டுக்கரை கோர மோட்டை பகுதியில்  யுத்தம் காரணமாக கைவிடப்பட்டிருந்த காணியினை அதன்   உரிமையாளர்  துப்பரவு செய்துள்ள போது   குறித்த  காணியில்  காணப்பட்ட கிணற்றினை துப்பரவு செய்யும்  போது  குறித்த கிணற்றில்   ஆபத்தை விளைவிக்கும் வெடி பொருட்களை கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த  வீட்டின் உரிமையாளர்  உடனடியாக முருங்கன் பொலிஸ இன்று நிலையத்தில்   புதன் கிழமை (5) முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டை தொடர்ந்து  குறித்த பகுதிக்கு சென்ற   பொலிஸார்...
நடிகை சமந்தா தற்போது மிகுந்த சந்தோசத்தில் இருக்கிறார். சூர்யா, விஜய் மற்றும் சில முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள அவர் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இருவரும் சேர்ந்து நடித்துள்ள சீமராஜா படம் வரும் செப்டம்பர் 13 ல் விநாயகர் சதுர்த்திக்காக வெளியாகவுள்ளது. தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் அவர் திருமணம் செய்துகொண்ட பிறகு பல படங்களில் கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் அவர் ட்விட்டர் பக்கத்தில் பின் தொடருபவர்களின் எண்ணிக்கை 7 மில்லியனாக உயர்ந்துள்ளது.
திம்புள்ள - பத்தனை, கொட்டகலை பகுதியில் உள்ள கால்நடை வளர்ப்பாளர்கள் பால் வழங்கியமைக்கான கொடுப்பனவுகள் கிடைக்காமையினால் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். கொட்டகலை - நுவரெலியா பிரதான வீதியில் அமைந்துள்ள கொட்டகலை பால்சபைக்கு முன்பாக நேற்று காலை 8 மணி தொடக்கம் 10.45 வரை இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. கொட்டகலையில் உள்ள தனியார் பால் சபைக்கு மாதாந்தம் குறித்த பகுதி கால்நடை வளர்ப்பாளர்கள் பால் வழங்கி வருகின்றனர். சுமார் ஒரு வருடகாலமாக அந்த மக்களுக்கான...
குன்றத்தூரில் கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக தனது குழந்தைகளை விஷம் கொடுத்து கொலை செய்து போலீசாரிடம் சிக்கியுள்ள அபிராமி கொடுக்கும் வாக்குமூலங்கள் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. சுந்தரம், அபிராமி இருவரையும் பொலிசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். அபிராமி தொடர்புடைய பல விவகாரங்கள் தினமும் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், பொலிசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் அபிராமி கூறுகையில், ‘நான் குழந்தைகளுக்கு கொடுத்தது தூக்க மாத்திரைகள் அல்ல. மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்தும்...
உலகின் வயதான தம்பதி என்ற உலக சாதனையை ஜப்பான் ஜோடி ஒன்று படைத்துள்ளது. டகாமட்ஷூ (Takamatsu) என்ற இடத்தைச் சேர்ந்தவர் மியாகோ மட்ஷூமோட்டோ (Miyako Matsumoto) இவர் கடந்த 1937ம் ஆண்டு மசாவோ என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். மசாவோ ராணுவ வீரர் என்பதால் 2ம் உலகப் போரின் போது பல்வேறு நாடுகளில் பங்கேற்று போரிட்டவர். தற்போது அவருக்கு 108 வயதாகிறது. இந்நிலையில் உலகில் நீண்ட காலம் சேர்ந்து வாழும் தம்பதி...
திருகோணமலை நகரம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் நாளை வெள்ளிக்கிழமை காலை 6.00 மணிமுதல் நாளைமறுதினம் சனிக்கிழமை 6.00 மணிவரை இரு தினங்களுக்கு நீர் விநியோகம் தடை செய்யப்படும் என திருகோணமலை நீர்வழங்கல் வடிகாலமைப்புச் தெரிவித்துள்ளது. அந்த வகையில் கிண்ணியா, திருகோணமலை நகரம், பட்டினமும் சூழலும், பாலைபற்று, தம்பலகாமம், ஆண்டான்குளம், சாம்பால்தீவு முதல் இரக்கண்டி வரை நீர் விநியோகம் தடைசெய்யப்படவுள்ளது. பிரதான நீர்வழங்கல் பாதையில் இடம்பெறவிருக்கும் திருத்த பணிகள் காரணமாகவே நீர்...
யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்புக்கு காரில் 16 கிலோ கேரளா கஞ்சாவை விற்பனைக்கு  எடுத்து வந்த 5 பேரை நேற்று இரவு கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து  ஊழல் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சப்இன்பெஸ்டர் ஏ. சிவதர்சன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவதினமான நேற்று இரவு வாழைச்சேனை விபுலானந்த வீதியில் வைத்து இரு கார்ககளையும் நிறுத்தி சோதனையிட்டபோது  காருக்குள் மறைத்து எடுத்து...
யாழ். கல்வியங்காடு, ஆடியபாதம் வீதியில் ஆவா குழுவினரால் இன்று அதிகாலை வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வீடு, மோட்டார்சைக்கிள் உட்பட பல பொருட்களுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஆடியபாதம் வீதியில் உள்ள 2 வீடுகளுக்குள் இன்று அதிகாலை நுழைந்த ஆவா குழுவினர் வாள்களுடன் சென்று வீட்டிலிருந்த பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர்....
திருகோணமலை - புல்மோட்டை பகுதியில் விவசாயி ஒருவர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். புல்மோட்டை பகுதியில், மரக்கறி தோட்டம் வைத்துள்ள இவர், இரவில் காவல் காத்துவிட்டு காலையில் வீடு திரும்பும் போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதில், 54 வயதுடைய, மில்டன் அப்புஹாமி என்பவரே உயிரிழந்துள்ளார். இவருடைய சடலம் புல்மோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.