யாழ். தீவக மக்களுக்கு குடிநீரை விநியோகிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக 2000 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. வடமராட்சி களப்பு நீர் வளத்தை பயன்படுத்தி யாழ் தீவகத்தில் வாழும் மக்களுக்கு சுத்தமான குடிநீரை விநியோகிப்பதற்காக உத்தேச திட்டம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள சாத்தியக்கூறு அறிக்கைக்கு அமைவாக 2000 மில்லியன் ரூபா முதலீட்டுடன் குடிநீர் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்காக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,...
செவட்ட செவன நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் புதிய வீடுகளிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு கரைச்சி, பச்சிலைப்பள்ளி, கண்டாவளை ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் இன்று நடைபெற்றுள்ளன. பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் 82வீடுகளிற்கும், கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 59 வீடுகளிற்கும், கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் 12வீடுகளிற்குமான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடுகளிற்கான அடிக்கல்லினை நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் நாட்டி வைத்துள்ளார். கரைச்சி...
பொலநறுவையில் புதுமண தம்பதியர் பயணித்த வாகனம் ஒன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மெதகம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற விபத்தில் புதுமண தம்பதியர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த வாகனத்தில் பயணித்த மாப்பிள்ளை தோழன் மற்றும் சாரதி ஆகியோரும் காயமடைந்துள்ளனர். புதுமண தம்பதியினர் தேனிலவுக்காக ஹோட்டல் ஒன்றுக்கு சென்று கொண்டிருக்கும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மீஸில்ஸ் என்ற ருபெல்லா நோய் அற்ற நாடாக இலங்கையை உலக சுகாதார ஸ்தாபனம் நேற்று அறிவித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது சுகாதார அமைச்சின் செயலாளர் நிப்புன் ஏக்கநாயக்கவின் தகவல்படி, ருபெல்லா நோயற்ற நாடாக இலங்கையை அறிவிக்கும் சான்றிதழ், உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென்னாசிய பணிப்பாளர் பூனம் கெட்ராபால் சிங்கினால், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் புதுடில்லியில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இலங்கை மலேரியா அற்ற நாடாக 2015ஆம் ஆண்டும், யானைக்கால் அற்ற...
வடபகுதிக்கு செல்லும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தன்னை இழிவுபடுத்தி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற சத்தியாக் கிரக போராட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், எனது ஆட்சிக் காலத்தில் நான் ஈட்டிய வெற்றிகளினாலேயே இன்று பிரதமரும், ஜனாதிபதியும் வடக்கில் சென்று என்னை இழிவுபடுத்துகின்றனர். வடக்கிற்கு சென்று என்னை கேவலப்படுத்துவதற்கான சூழ்நிலையை நானே உருவாக்கியிருக்கின்றேன். விடுதலைப் புலிகளை தோற்கடித்து பெற்றுக்கொடுத்த...
கொழும்பில் நேற்று இடம்பெற்ற கூட்டு எதிரணியின் “ஜனபலய” போராட்டத்தையடுத்து பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்துக்கள் பாதிப்படைந்து ஸ்தம்பிதமடைந்திருந்த நிலையில் இன்று போக்குவரத்துக்கள் யாவும் வழமைக்குத் திரும்பியுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தல‍ைமையில் நேற்றைய தினம் கொழும்பில் பொது எதிரணியினர் முன்னெடுத்த மக்கள் எழுச்சி பேரணியும் சத்தியாக்கிரகப் போராட்டமும் நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்துள்ளது. அரசாங்கத்தின் முறையற்ற பொருளாதார நடவடிக்கை, மாகாண சபைத் தேர்தல் காலம் தாழ்த்தப்படுதல், ஆட்சி மாற்றம், நாட்டின் வளங்களை...
தேசிய ரீதியில் நடைபெற்ற வூசோ குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்ற வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரி மாணவிகள் இரண்டு பேரை கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரியின் அதிபர் ரீ.பூலோகசிங்கம் தலைமையில் இன்று (05) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கொழும்பு மகறகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் (10-08-2018) தேசிய ரீதியில் நடைபெற்ற வூசோ குத்துச்சண்டை போட்டியில் வடமாகாணத்தை பிரதிபலித்து கலந்துகொண்டு கே.டிலக்சினி தங்கப்பதக்கத்தையும், என்.றோசிமன்யு வெள்ளிப்பதக்கத்தையும் சுவீகரித்து வடமாகாணத்திற்கு பெருமை சேர்த்திருந்தனர். அதனை...
மருத்துவ குணங்கள் நிறைந்த கற்றாழை பெண்களின் தலை முடியின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.. தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமா? அப்ப கற்றாழை எண்ணெய் யூஸ் பண்ணுங்க…, பயன் தரும் கற்றாழை பெண்களின் தலை முடியின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.. கற்றாழை மிகவும் அற்புதமான மூலிகைப் பொருள். இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இது உடல் ஆரோக்கியம் முதல் சருமம், தலைமுடி போன்றவற்றின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த வல்லது. தலைமுடி அதிகம் உதிரும் பிரச்சனை உள்ளவர்கள்,...
இரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் ஒரு சிலருக்கு சில வேளைகளில் நன்மையை தந்தாலும், பெரும்பாலோனோருக்கு உடலில் கலோரி அதிகமாகி, உடல் எடை அதிகரிக்க காரணமாக அமைகிறது. இரவு உணவுக்குப் பின் சிலர் வாழைப்பழம் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த பழக்கம் ஒரு சிலருக்கு ஒரு சில வேளைகளில் நன்மை தந்தாலும், பெரும்பாலோனோருக்கு உடலில் கலோரி அதிகமாகி, உடல் எடை அதிகரிக்க காரணமாக அமைகிறது. இதற்கு காரணம் வாழைபழத்தில்...
தென்னிந்திய சினிமாவின் வசூல் என்பது தற்போது பாலிவுட் படங்களுக்கே கடும் சவாலாக உள்ளது. அந்த வகையில் இதுவரை வந்த தென்னிந்திய படங்களிலேயே அதிகம் வசூல் செய்த படம் எது என்பதன் விவரத்தை பாக்ஸ் ஆபிஸ் தளம் ஒன்று வெளியிட்டுள்ளது. இதில் பெரும்பாலும் தெலுங்குப்படங்களின் ராஜ்ஜியமே அதிகம் உள்ளது, மேலும், தமிழ் படங்களில் ரஜினி, விஜய் படங்களின் ஆதிக்கமே அதிகம் உள்ளது, இதோ முழு விவரம்... பாகுபல்2- தெலுங்கு- ரூ 1730...