நாசர் தமிழில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் ஏற்காத கதாபாத்திரங்களே இல்லை, ரஜினி, கமல், விஜய், அஜித் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து பெயர் பெற்றவர்.
இவருடைய மகன் Luthfudeen ஏற்கனவே சைவம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிவிட்டார், இதை தொடர்ந்து நாசரின் மூன்றாவது மகனும் சினிமாவில் களம் இறங்கவுள்ளார்.
ஆம், அவரின் மூன்றாவது மகன் அபிஹாசன், கமல் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தை தூங்காவனம் ராஜேஸ் இயக்க,...
யாழ்.புன்னாலைக்கட்டுவான் பகுதியில் கஞ்சா போதை பொருள் விற்பனையில் ஈடுப்பட்ட இளைஞர்கள் ஐவரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து ஒருகிலோ 250 கிராம் கஞ்சா போதைப்பொருளை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தமக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிப்பு.
ஜே.வி.பி யினால் கொண்டுவரப்பட்ட இச்சட்டமூலத்தை ஜே.வியின் பாராளுமன்ற உறுப்பினரான விஜித ஹேரத் சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடதக்கது.
(நோட்டன் பிரிட்ஜ் நிருபர்)
இந்துவாக வாழ்வோம் இந்து தர்மம் காப்போம் எனும் தொனிப்பொருளில் அகில இலங்கை இந்து மஹா சபையின் ஒன்று கூடல் அட்டன் சீடாவள நிலையத்தில் இடம்பெற்றது.
இலங்கையின் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மன்னர், வவுனியா, அனுராதபுரம், கண்டி, பதுளை, ரத்தினபுரி, கேகாலை, மாத்தளை, நுவரெலியா மற்றும் கொழும்பு போன்ற மாவட்டங்களிலிருந்து இந்து குருமார்கள் மற்றும் இந்து அமைப்புக்களின் பிரதிநிதிகள், இலங்கை முதல் உதவிச் சங்க இந்து சமயத் தொண்டர் சபையினர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் இலங்கையில்...
இமைக்கா நொடிகள் 5 நாட்களில் இத்தனை கோடி வசூலா! நயன்தாரா உண்மையாகவே வேற லெவல் தான்
Thinappuyal News -
நயன்தாரா, அதர்வா நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் இமைக்கா நொடிகள். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படம் வெளிவந்த 5 நாட்களில் ரூ 16 கோடி வரை தமிழகத்தில் மட்டுமே வசூல் செய்துள்ளதாம், இது மட்டுமின்றி கேரளாவில் ரூ 2 கோடி, கர்நாடகாவில் ரூ 1.5 கோடி, துபாயில் ரூ 1 கோடி என உலகம் முழுவதும் ரூ 22...
நம் அன்றாட உணவில் சேர்க்கப்படும் உப்பின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்பது குறித்து இங்கு காண்போம்.
உப்பின் அளவு சராசரியாக ஒரு நாளைக்கு 1500 மில்லி கிராம் இருக்க வேண்டும் என அமெரிக்க இதய மையம் தெரிவிக்கிறது. அமெரிக்க நபர் ஒருவர் ஒரு நாளைக்கு 3400 மில்லி கிராம் அளவு சோடியம் எடுத்துகொள்வதாகவும், ஆனால் 2300 மில்லி கிராமிற்கு மேல் இந்த அளவு இருக்கக் கூடாது எனவும் அந்த...
திருகோணமலை - மட்டக்களப்பு வீதியில் காரொன்று வீதியை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ள நிலையில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
மூதூரிலிருந்து திருகோணமலைக்கு சென்ற காரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதேவேளை, படுகாயங்களுக்குள்ளான இருவரும் கிண்ணியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கொழும்பில் நடத்த உள்ள ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக அமெரிக்க பிரஜைகள் பாதுகாப்பாக இருக்குமாறு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.
மக்கள் கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்த்துகொள்ளுமாறு இலங்கையில் உள்ள அமெரிக்க பிரஜைகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அலரிமாளிகையை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிடலாம் என்ற அச்சம் காரணமாக கொழும்பில் கொள்ளுபிட்டியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க வட்டாரங்களும் பொலிஸாரும் இதனை தெரிவித்துள்ளனர்
அலரிமாளிகையை முற்றுகையிடுவதற்கு திட்டமிடப்படடுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன என அவர்கள் தெரிவித்துள்ளனர்
இதன் காரணமாக மேலதிக பொலிஸார் கொழும்பு நகரத்தின் மத்தியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பொலிஸார் கலகமடக்கும் படையினருடன் விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொது எதிரணியினர் இன்று முன்னெடுத்துள்ள பேரணியில் கலந்துகொள்ளும் மக்களிற்கு குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு அரச தரப்பினர் முயன்றுவருவதா பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த தடைகளையும் மீறி பொதுமக்கள் பேரணியில் கலந்துகொண்டு கொழும்பை நோக்கி செல்கின்றனர் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு முதல் ஆதரவாளர்கள் எங்கள் பேரணிக்காக தயாராகி வந்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களின் குரல்கள் இன்று கொழும்பில் ஒலிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் இரக்கமற்ற கொள்கைகளால் மக்கள்...