இந்தியாவின் கேரள மாநிலத்தில் வேகமாக பரவி வரும் எலி காய்ச்சலுக்கு நேற்று ஒரேநாளில் 10 பேர் உயிரிழந்த நிலையில், பலியானோரின் மொத்த எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது. கடந்த மாதம் பெய்த கனமழையால் கேரளா மாநிலம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டது. வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி 488 பேர் உயிரிழந்துள்ளதோடு லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். தற்போது வெள்ளம் வடிந்து, மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி...
சிரியா நாட்டிலுள்ள ஈரான் இராணுவ தளங்களை இலக்கு வைத்து இஸ்ரேலிய படையினர் நடத்திய வான் வழி ஏவுகணை தாக்குதல்களை நடுவானில் பதில் தாக்குதல் நடத்தி இடமறித்து அழித்துள்ளதாக தெரியவந்துள்ளது.   சிரியாவின் டார்டோஸ் மற்றும் ஹாமா பகுதிகிலுள்ள ஈரான் நாட்டுக்கு சொந்தமான இராணுவ தளங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்த ஆரம்பித்தது. இதையடுத்து சிரிய இராணுவம் ஐந்து ஏவுகணைகளை நடுவானிலேயே எதிர் தாக்குதலை நடத்தி இடமறித்து...
தெலுங்கு நடிகர் பிரபாசையும், நடிகை அனுஷ்காவையும் இணைத்து நீண்ட நாட்களாக கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் காதலிப்பதாகவும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர் என்றும் கூறினர். இவர்களை திரையில் பொருத்தமான ஜோடியாகவும் ரசிகர்கள் கொண்டாடினார்கள். பாகுபலி படம் அவர்களுக்கு திருப்பு முனையாக அமைந்தது. பிரபாஸ் ரசிகர்கள் அனுஷ்காவை அண்ணி என்றே அழைத்தனர். பிரபாசை திருமணம் செய்துகொள்ள 6 ஆயிரம் பெண்கள் விண்ணப்பித்தனர். ஆனால் அனுஷ்காவை மணக்க எல்லா விண்ணப்பங்களையும் அவர் ஒதுக்கிவிட்டார் என்று...
92-வது எம்.சி.சி.-முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை (6-ந் தேதி) முதல் 16-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் ஓ.என்.ஜி.சி., இந்தியன் ரெயில்வே, இந்திய ராணுவம், மத்திய செயலகம், மும்பை ஆக்கி சங்கம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் பெங்களூரு ஆக்கி...
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில், 6 முறை சாம்பியனான செரீனா வில்லியம்ஸ் அரையிறுதிக்கு தகுதி பெற்றார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.  அமெரிக்க ஓபன் மகளிர் காலிறுதி சுற்று  இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதில், அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா ஆகியோர் மோதினர்.  பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 6-4,6-3...
நடிக்க வந்தபோது, தமிழில் முதலில் கெட்ட வார்த்தைகளை தான் கற்றுக்கொண்டேன் என நடிகை நமீதா கூறி உள்ளார். திரைப்படங்களில் நடிக்க வந்தபோது, தமிழ் மொழியைக் கற்ற அனுபவங்களை கலகலப்பாக நடிகை நமீதா பகிர்ந்து கொண்டார். சினிமாவில் குழு நடனம் ஆடும் கலைஞர்களின் வாழ்க்கை பற்றி கூத்தன் என்ற படம் உருவாகி உள்ளது. ராஜ்குமார் கதாநாயகனாக நடித்து இருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா  நடைபெற்றது. இதில் நமீதா பேசும்போது ‘மேலாளர் மனோஜ்...
கதாநாயகிகள் தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் நடிக்க ஆர்வப்படுகின்றனர். கதாநாயகர்களுடன் காதல் காட்சிகளில் நடிக்க விரும்புவது இல்லை. கதாநாயகிகளை முதன்மைப்படுத்தும் படங்களுக்கும் வரவேற்பு உள்ளது. முன்னணி நடிகர்கள் படங்களுக்கு இணையாக வசூலும் பார்க்கின்றன. அமலாபாலும் இப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் உள்ள படமொன்றில் நடிக்கிறார். இந்த படத்துக்கு ‘ஆடை’ என்று பெயர் வைத்துள்ளனர். மேயாத மான் படத்தை டைரக்டு செய்த ரத்னகுமார் ஆடை படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் கதையை...
வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி விசேட செயலணியின் அடுத்த கூட்டம் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாடாளுமன்ற கட்டட தொகுதியில் இடம்பெறவுள்ளது. அனைத்து அமைச்சர்கள், வடக்கு - கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை கடந்த மாதம் 27ஆம் திகதி இடம்பெற்ற செயலணியின் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில்...
யாழ். பொலிஸாரால் ஆறு மாத காலமாக தேடப்பட்டு வந்த ஆவா குழுவின் முக்கிய உறுப்பினர் நேற்று மாலை மானிப்பாய் பொலிஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த குமாரசாமி நிலோஜன் என்னும் 23 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் தலைமறைவாக இருந்த இவரை கடந்த ஆறு மாத காலமாக பொலிஸார் தேடி வந்துள்ளனர். இவர் ஆவா குழுவின் தனுரொக் என்பவருடன் நெருங்கி செயற்பட்டதுடன் யாழ். குடாநாட்டில்...
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியில் 6 வேகப்பந்து வீச்சாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் உள்பட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி வருகிற 15-ந் திகதி முதல் 28-ந் திகதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இதற்கான 16 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பஹீம் அஷ்ரப், ஹசன் அலி, உஸ்மான் கான், முகமது அமிர், ஷஹீன் அப்ரிடி, ஜூனைத் கான்...