இந்தியாவிற்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டிற்கான இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்ஸ், போப் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து- இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. தற்போது நான்கு போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, வருகிற வெள்ளிக்கிழமை லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது.
இந்த...
மூலிகைகளின் ராணி என்று அழைக்கப்படும் துளசியை பிரதானமாக பயன்படுத்தி தயாரிக்கப்படும் டீயை பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
துளசி - 1 கப்
தண்ணீர் - 2 கப்
டீத்தூள் - 2 ஸ்பூன்
தேன் அல்லது கருப்பட்டி - சுவைக்கு
பால் - தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி சூடானதும் அதில் 1 கப் துளசி இலையை போட்டு...
உங்கள் பக்கம் அதிர்ஷ்ட காற்று வீச உதவும் சில அதிர்ஷ்ட பொருட்களை உங்கள் பாக்கெட்டில் வைத்துக் கொண்டால், நினைத்த காரியம் கைக்கூடும்.
அத்தகைய அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் பொருட்கள் என்னவென்று பார்ப்போம்.
அதிர்ஷ்ட சின்னங்கள்
அதிர்ஷ்ட சின்னங்களில் நட்சத்திரம், ஸ்வஸ்திகா சின்னம் போன்ற பல்வேறு வடிவங்கள் உள்ளன இவற்றை பாக்கெட்டில் எப்போதும் வைத்திருந்தால், அது நேர்மறை ஆற்றல்களை ஈர்த்து, வாழ்வை சிறப்பாக்கும்.
கொல்லிக் கண்
சிறிதாக இருக்கும் கொல்லிக் கண்ணை, ஒருவர் தங்களது பாக்கெட்டில் வைத்துக்...
வெளிநாட்டவர்களால் கொல்லப்படும் ஜேர்மானியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: வெளியான தகவல்
Thinappuyal News -
ஜேர்மனியில் வெளிநாட்டவர்களால் கொல்லப்படுவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விடவும் அதிகரித்துள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் ஜேர்மனியில் 731 கொலைக்குற்றங்களை பொலிசார் பதிவு செய்துள்ளனர். இதில் சுமார் 83 வழக்குகளில் பாதிப்புக்கு உள்ளானவர்கள் ஜேர்மானியர்கள் என பொலிசார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மட்டுமின்றி இந்த வழக்குகளில் பெரும்பாலும் வெளிநாட்டவர்களே குற்றவாளிகள் எனவும் சுட்டிக்காட்டும் பொலிசார், அவர்கள் எந்த நாட்டினர் என்பதை அடையாளம் காண்பதில் கோட்டை விட்டுள்ளனர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு...
ரஷ்யாவில் கணினி விளையாட்டில் தோலிவியை சந்தித்த 15 வயது சிறுவன் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் Mogochino கிராமத்தில் குடியிருக்கும் சிறுவன் பவெல் மாட்வேவ், சம்பவத்தன்று தங்களது தோட்டத்துக்குள் புகுந்து அங்கிருந்த செயின்சா ஒன்றை பயன்படுத்தி தற்கொலை செய்து கொண்டுள்ளான்.
இந்த விவகாரம் தொடர்பில் குற்றவியல் நடவடிக்கை மேற்கொண்டுவரும் பொலிசார், சிறுவன் கணினி விளையாட்டில் தோல்வியை தழுவியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சிறுவன்...
கனடாவில் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த நபர் மரணமடைந்துள்ளார்.
இது குறித்த தகவலை பெடரல் அரசு ஏஜன்ஸியான Correctional Service of Canada வெளியிட்டுள்ளது.
கோலின் விக்டர் ஸ்டீவர்ட் (36) என்பவர் கடந்த 2009-ஆம் ஆண்டு செப்டம்பர் வான்கவரில் ரஜிந்தர் சூமல் என்பவரை சுட்டு கொன்றார்.
இவ்வழக்கு சம்மந்தமாக விக்டர் மற்றும் கெவின் ஜேம்ஸ் என்பவரை பொலிசார் கைது செய்தனர்.
அவர்கள் மீதான வழக்கு விசாரணை 2016-ல் முடிந்த நிலையில் அப்போதிலிருந்து சிறை...
சூர்யாவுக்கென ஒரு தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. படம் வெளியாகும் போது அவர்களின் மாஸ் என்ன என்பதை நாம் காணலாம். தன் ரசிகர்கள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டவர் சூர்யா.
அவர் செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்தில் நடித்து வந்தார். அண்மையில் இதன் ஒரு கட்ட படப்பிடிப்புகள் நிறைவு பெற்றது. இதனையடித்து அவர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நேற்று இணைந்துள்ளார்.
இதன் முதல் கட்ட படப்பிடிப்புகள் லண்டனில் எடுக்கப்படுகிறது. அடுத்தகட்ட படப்பிடிப்புகள் சென்னை,...
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற அமர்வின்போது, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் கையசைத்து சைகை காட்டி பேசிக்கொண்டுள்ளனர்.
சபைக்கு வருகைத்தந்த மகிந்த ராஜபக்ச, அவரது ஆசனத்தில் அமர்திருந்த நிலையில் ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவை பார்த்து கையசைத்து சைகை காட்டினார். எனினும் மகிந்த ராஜபக்ச தெரிவித்த சைகையை விளங்காத வகையில் அனுரகுமார சைகையால் தெரிவித்தார்.
இதனை அடுத்து ஆசனத்தில் இருந்து...
நாளை கொழும்பில் நடைபெறவுள்ள கூட்டு எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்டத்திற்கு பதிவு செய்யப்பட்டிருந்த கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான 5 மைதானங்களை வழங்குவதற்கு கொழும்பு மாநகர சபை மறுப்பு தெரிவித்துள்ளது.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள் சிலரால் கடந்த ஒகஸ்ட் மாதம் முதல் வாரத்தில்...
யாழ். நல்லூரில் மின்சாரம் தாக்கி இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் கூறினார்.
மேலும், சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த அப்பாவும், மகனும் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
குறித்த ,சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா இன்று 20ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகிறது.
இந்த நிலையில் திருவிழாவில் வெளிநாட்டவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான...