சீனாவிடம் இருந்து இலங்கை மேலும் கடன்களை பெறமுயற்சிப்பது நாட்டுக்கு பாரிய கடன் சுமையை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் சீனாவின் மக்கள் வங்கியிடம் இருந்து 250மில்லியன் டொலர்களை பெறமுனைகிறது 6.3வீத வட்டி வீதத்தில் இந்தக்கடன் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. இது இலங்கைக்கு மேலும் கடன் சுமையை ஏற்படுத்தும். அத்துடன் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என சர்வதேச ஊடகம் ஒன்று அச்சம் வெளியிட்டுள்ளது.
மாரவில பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் தன்னை தேட வேண்டாம் என கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டுச் சென்றுள்ளார். கடிதத்தை பார்த்த தந்தை, மாரவில பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். தனது மனைவி வெளிநாட்டில் தொழில் செய்து வருகின்ற நிலையில், மகள் இவ்வாறு வீட்டைவிட்டு சென்றுள்ளார். குறித்த மாணவி வகுப்பு ஒன்றுக்கு சென்ற நிலையில், வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த தந்தை அவரை தேடியுள்ளார். இதன்போது வீட்டில் கதவுக்கு அருகில்,...
மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான வீட்டுத்திட்டங்கள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட 50,000 வீடுகளில் 25,000 வீடுகள் தொடர்பான கேள்விகோரல்கள் முடிவடைந்துள்ளதாக வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி விசேட செயலணியின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் UNHABITAT, UNOPS நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டு கட்டுமானப்பணிகளை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி விசேட செயலணியின் செயலாளர் வே.சிவஞானசோதி மேலும் கூறுகையில், ஒப்பந்தக்காரர்களை தெரிவு செய்யும் கடினமான செயற்பாடு முடிவுக்கு...
-மன்னார் நகர் நிருபர்-   மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஆட்காட்டிவெளி பங்கின் சாளம்பன் கிராமத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள புனித அடைக்கல அண்னை ஆலயத்தை நேற்று செவ்வாய்க்கிழமை(4) மாலை 5.30 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இமானுவல் பெர்னாண்டோ ஆண்டகை வைபவ ரீதியாக திறந்து வைத்தார். குறித்த ஆலையத்தை ஆயர் அவர்கள் அபிசேகம் செய்து வைபவ ரீதியாக திறந்து வைத்தார். இதன் போது அருட்தந்தையர்களும் ஆயருடன் இணைந்து குறித்த ஆலயத்தை திறந்து வைத்தனர். குறித்த...
-மன்னார் நகர் நிருபர்- மன்னார் சின்னக்கடை தெற்கு வயல் வீதி பகுதியில் உள்ள வீட்டினுள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு(4) உற்புகுந்த முதலையினை அப்பகுதி மக்கள் இணைந்து பாரிய போராட்டத்தில் மத்தியில் பிடித்து கட்டியுள்ளனர். மன்னார் சின்னக்கடை தெற்கு வயல் வீதியில் புனரமைப்பு செய்யப்பட்ட குளம் உள்ளது.  குறித்த குளத்தில் அதிகலவான தாமரை காணப்படுகின்றது. குறித்த குளத்தில்   முதலைகள் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் குறித்த குளத்தில் காணப்பட்ட முதலை ஒன்று...
காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று கையளிக்கப்படவுள்ளது. குறித்த அறிக்கையை பலவந்தமாக காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான சர்வதேச தினமான ஓகஸ்ட் 30ஆம் திகதி வெளியிட முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், குறித்த சந்தர்ப்பதில் ஜனாதிபதி பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்க நேபாளத்திற்கு பயணம் மேற்கொண்டிந்தார். எனவே, அவர் நாட்டில் இல்லாத காரணத்தால் அறிக்கை வெளியீட்டை பிற்போடுவதாக காணாமல்போனோர் தொடர்பான பணியகத்தின் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இன்றைய...
தேசிய ரீதியிலான சுனாமி அனர்த்த ஒத்திகை நிகழாவு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வழிகாட்டலில் இன்று புதன்கிழமை இடம்பெறவுள்ளது. இதற்கிணங்க இலங்கையின் கரையோர மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து எச்சரிக்கை கோபுரங்களும் ஒரே நேரத்தில் காலை 8.30 மணியளவில் இயங்கவுள்ளன. அதன்படி யாழ்.மாவட்டத்தின் சுனாமிக்கான எச்சரிக்கை கோபுரங்கள் அமைந்துள்ள நெடுந்தீவு மத்தி, வல்வெட்டித்துறை, வடமேற்கு, பருத்தித்துறை, மணற்காடு, உடுத்துறை ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில் இச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளது. அத்துடன் இந்த ஒத்திகை நடவடிக்கையானது இலங்கை...
எல்லை தாண்டிவந்த இந்திய படகுகளை அரசுடமையாக்குமாறு வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யுமாறு கோரி படகு உரிமையாளர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கை ஊர்காவற்துறை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த ஜூன் மாதம் நெடுந்தீவு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட குறித்த மூன்று இந்திய இழுவைப்படகுகளை புதிய கடல்வள பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அரசுடமையாக்குமாறு கடந்த மாதம் 28 ஆம் திகதி ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது இந்நிலையில் தமிழகத்திலிருந்து வருகைதந்த குறித்த படகுகளின்...
கிளிநொச்சி குளத்தின்  நீரேந்து பகுதியும், இரத்தினபுரம் பாலத்தின் ஒதுக்கீட்டு பகுதிகளும் தனியார்களால் அத்து மீறல்கள் தொடர்ந்து  இடம் பெற்று வருகின்றது. ஊடகங்களும், பொது அமைப்புகளும் இதனை சுட்டிக்காட்டி  வருகின்ற  நிலையில்  அவை நிறுத்தப்பட்டதாக தெரியவில்லை என மீண்டும் பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி குளத்தின் நீரேந்து பகுதியும், இரத்தினபுரம் பாலத்தின் இருமருங்கிலும் பல தனியார்கள் நிலங்களை அத்துமீறி பிடித்து கட்டடங்கள் மற்றும் மதில்களை அமைத்துள்ளமையினால்  மழைக்காலங்களில் வெள்ளம்  வழிந்தோடுவதில்...
அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்க எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான கூட்டு எதிரணியின் மக்கள் எழுச்சிப் பேரணியில் கலந்து கொள்வதற்காக மக்களை ஏற்றி வருவதற்கு தயாரான பஸ் ஒன்றின் மீது பதுளை பகுதியில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலக்கத் தகடு அற்ற கனரக வாகனம் ஒன்றில் வந்தவர்களே இந்த தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர். அத்துடன் இந்த பஸ்ஸில் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவின் ஆதரவாளர்கள் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.