வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட காஞ்சிரமோட்டையில் மக்கள் மீள் குடியேறிய  வன இலாகாவினரினால் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வரும் நிலையில் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தினையும் கவனத்தில் எடுக்காதே வன இலாகாவினர் அலட்சியம் செய்துள்ளனர். நேற்றைய தினம் அப்பகுதிக்கு சென்ற வன இலாகாவினர் மக்களது மீள்குடியேற்ற நடவடிக்கைக்கு தடையை ஏற்படுத்துயுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா வடக்கில் தமிழ் பழம்பெரும் கிராமமான காஞ்சிரமோட்டை கிராமம் அதிகளவான மக்கள்...
  வடக்கு மாகாண சபையின் பத­விக்­காலம் முடி­வ­தற்கு இன்னும் இரண்டு மாதங்கள் தான் இருக்­கின்ற நிலையில், வடக்கின் அர­சியல் களம் சூடு­பி­டிக்க ஆரம்­பித்­தி­ருக்­கி­றது. முத­லா­வது வடக்கு மாகா­ண­ச­பையின் பத­விக்­காலம் முடி­வுக்கு வர­வுள்ள நிலை­யிலும் கூட, வடக்கு, கிழக்கு உள்­ளிட்ட 6 மாகாண சபை­க­ளுக்கும், எப்­போது தேர்தல் நடத்­தப்­படும் என்­பது நிச்­ச­ய­மற்ற நிலை­யி­லேயே இருக்­கி­றது. தேர்தல் முறை தொடர்­பாக கட்­சி­க­ளுக்­கி­டையில் இன்­னமும் கருத்­தொற்­றுமை ஏற்­ப­டாத நிலையில், தேர்­தலை எப்­படி – எப்­போது நடத்து­வது என்று...
விசாரணைக்காக அழைக்கப்பட்ட  காணாமற் போய் தற்போது வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள ஊடகவியலாளர்களின் விபரம்-வெற்றிமகள்   மன்னார் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த நான்கு ஊடகவியலாளர்களை குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர். நாளை தெமட்டகொடவில் உள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் காரியாலயத்துக்கு வருமாறே அவர்களுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. விசாரணைக்கான கடிதம் சிங்கள மொழியிலேயே அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியாவின் சிரேஷ்ட ஊடகவியலாளர் மாணிக்கவாசகர், மற்றும் மன்னாரைச் சேர்ந்த மூன்று...
போக்குவரத்தில் ஏற்படும் ஆபத்தினை தடுக்க தயாரிக்கப்பட்டு வீதிகளில் காட்சிப்படுத்தப்பட்ட டம்பி பொலிஸ் உருவங்களை சில இளைஞர்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். புத்தளத்தை சேர்ந்த இரு இளைஞர்கள் வேக மீருடன் பொலிஸ் அதிகாரிகளுடன் சமமாக வைக்கப்பட்ட டம்மி உருவத்தை அங்கிருந்து அகற்றி கொண்டு சென்றுள்ளனர். இந்த குற்றச்சாட்டினால் கைது செய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார். புத்தளம் பொலிஸ் நிலைய போக்குவரத்து அதிகாரிகள் குறித்த...
விஞ்ஞானிகள் முதன்முறையாக தசைநார் தேய்வுக்கெதிராக மரபணுத் திருத்தமுறை மேற்கொண்டு அதில் வெற்றியும் கண்டுள்ளனர். இக் கண்டுபிடிப்பானது மனிதர்களில் மேற்படி நிலைமைகளிற்கு சிகிச்சையளிப்பதற்கான முக்கிய படிநிலையாகப் பார்க்கப்படுகிறது. தசைநார்த் தேய்வானது இலகுவில் குணப்படுத்தப்படமுடியாத நோய் நிலைமை ஆகும். இது தசைத் தொழிற்பாட்டு இழப்பிற்கு காரணமாகி தசை நார்களை வலுவிழக்கச் செய்கின்றது. தசைநார் தேய்வானது ஒரு குறித்த வகை புரத இழப்புக் காரணமாகவே ஏற்படுகிறது. அண்மையில் நாய்கள் மீது மேற்கொள்ளப்பட்டிருந்த ஆய்வொன்றில் விஞ்ஞானிகளால் அக் குறித்த புரதத்தை பகுதியாக...
விஞ்ஞானிகள் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி புற்றுநோய்க் கலங்கள் எவ்வாறு விருத்தியடைகின்றன என்பதுபற்றி கண்காணித்துள்ளனர். இப் புதிய தொழில்நுட்பம் Revolver (Repeated Evolution of Cancer) என அழைக்கப்படுகிறது. இங்கு புற்றுநோய்க் கலங்களில் ஏற்படும் DNA விகாரங்களின் போக்கு அறியப்பட்டு, வருங்காலத்தில் எவ்வாறான மாற்றங்கள் நிகழலாம் என்பது பற்றிய தகவல்கள் முன்கூட்டியே வழங்கப்படுகிறது. பொதுவாக புற்றுநோய்க்கலங்கள் தெடர்ச்சியான மாற்றங்களுக்கு உள்ளாவதால் அவற்றை சிகிச்சையளிப்பது கடினம். எனவே இப் புதிய நுட்பமானது வருங்காலத்தில் வினைத்திறனான...
அமெரிக்காவில் குடியிருப்பு வளாகத்தில் பகடை ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் துப்பாக்கிச் சூடு நடந்ததால், 6 பேர் படுகாயம் அடைந்ததுடன் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகம் ஒன்றில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கும்பல் ஒன்று நுழைந்துள்ளது. அந்த கும்பல் பகடை விளையாட்டில் ஈடுபட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட தகராறில் அவர்களுக்குள் துப்பாக்கிச் சூடு நடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல்...
புடலங்காயில் மிக அதிக அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. மேலும் இவற்றில் எல்லாவற்றையும் விட மிக அதிகமாக நீர்ச்சத்து இருக்கிறது. புடலங்காயில் வைட்டமின் ஏ, பி மற்றும் சி நிறைந்துள்ளது. அதோடு கார்போ ஹைட்ரேட், மினரல்கள், இரும்புச் சத்து, கால்சியம், மக்னீசியம், அயோடின், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீசு ஆகியவை நிறைந்திருக்கின்றன. இத்தனை ஊட்டச்சத்துக்கள் கொண்ட புடலங்காயில் இருந்து கிடைக்கும் சாற்றினை பருகுவதினால் கிடைக்கும் நன்மைகளை பற்றி பார்ப்போம். ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க புடலங்காயில் மிகக்...
சீனாவிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள  அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு பிரிட்டிஸ் தூதரக அதிகாரிகள் விஜயம் மேற்கொண்டுள்ளனர். இலங்கைக்கான பிரிட்டிஸ் தூதரகம் அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளது. பிரதிஉயர்ஸ்தானிகர் டிம்பேர்ன்ஸ் உட்பட தூதரக அதிகாரிகள் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொண்டனர் அவர்களை துறைமுக நடவடிக்கைகளை கையாளும் நிறுவனத்தின் அதிகாரிகள் வரவேற்றனர் எனவும் தூதரகம் தெரிவித்துள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்தின் நடவடிக்கைகளை கையாளும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாகவும் பிரிட்டனின் தூதரகம் தெரிவித்துள்ளது.