வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெற்றிலைக்கேணி கடற்படையினர் நேற்று (17.04.2024) மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே கைது நடவடிக்கை குறித்த இடம்பெற்றுள்ளது. கைது நடவடிக்கை குறித்த நபர் அனுமதியற்ற மின் ஒளி பாய்ச்சி வலைகளை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்டிருப்பதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட நபர் கட்டைக்காடு பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதுடன் அவரது உடமைகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் பரிசோதகரிடம்...
  திருமணமாகி ஒரு மாதமான இளம் தம்பதிகளில் கணவனை காணவில்லை என மனைவியால் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த தம்பதிகள் வவுனியா - வேப்பங்குளம், மெதடிஸ்ட் தேவாலய வீதியில் தற்காலிகமாக வசித்து வந்த நிலையில் கணவன் கடந்த 12 ஆம் திகதி முதல் காணவில்லை என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் முறைப்பாடு இதன்போது 25 வயதுடைய வில்வராசா ரக்சன் என்பவரே காணாமல் போயுள்ளார். பதிவு திருமணம் செய்து ஒரு மாத காலமான நிலையில்...
  பெருந்தோட்ட மக்கள் சஜித்(Sajith Premadasa) பக்கமே நிற்கின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா(Dylan Pereira) தெரிவித்துள்ளார். அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe), ராஜபக்சர்கள் பக்கம் நிற்கும் வரை அவரால் மலையகப் பெருந்தோட்ட மக்களின் ஆதரவைப் பெற முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மொட்டுச் சின்னத்தில் பதுளை மாவட்டத்தில்...
  ரம்புக்யாய பகுதியில் மோட்டார் சைக்கிளில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சென்ற இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய நேற்று (17.04.2024) இடம்பெற்றுள்ளது. கைது நடவடிக்கை கைது செய்யப்பட்ட நபர் 26 வயதுடைய மஹியங்கனை, பதியத்தலாவ வீதி 47, கட்டையில் வசிக்கும் நபர் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேகநபர் கொழும்பில் இருந்து கொண்டு வரப்பட்ட போதைப்பொருளை பொதி செய்து மஹியங்கனை பகுதியில் உள்ள...
  நாட்டின் பல பகுதிகளில் வெப்பமான வானிலை தொடர்பான செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த தகவலை தெரிவித்துள்ளது. இதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் குறித்து அவதானமாக இருக்குமாறும் திணைக்களம் (Department of Meteorology) கோரிக்கை விடுத்துள்ளது. மனித உடலால் உணரப்படும் வெப்பம் வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, கிழக்கு, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரிக்கலாம் என எதிர்வு...
  மந்துவில் பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் டக்ளஸின் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பிற்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றையதினம் (17.04.2024) காலை இடம் பெற்றுள்ளது. ஊடகவியலாளர் மீது அச்சுறுத்தல் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மந்துவில் கிராமத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் அமைச்சர் உள்ளிட்ட குழுவினருக்கும் மக்களுக்கும் இடையில் மக்கள் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் மக்கள் மற்றும் அமைச்சர் குழுவினரிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் செய்தி சேகரிப்பதற்கு சென்றிருந்த...
  பெலியத்தை பிரதேசத்தில் இரு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் தந்தையை கூரிய ஆயுத்தினால் தாக்கி காயப்படுத்திய கும்பல், மகனை வெட்டிக் கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் நேற்று (17.04.2024) மாலை இடம்பெற்றுள்ளது. பொலிஸ் விசாரணை இதன்போது 12 வயதுடைய சிறுவனே மேற்படி சம்பவத்தில் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் 38 வயதுடைய தந்தை படுகாயம் அடைந்த நிலையில் பெலியத்தை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காணித் தகராறு காரணமாக இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின்...
  வீடொன்றின் படுக்கையில் எரிகாயங்களுடன் உயிரிழந்த நபரின் சடலம் ஒன்று நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மரணத்தில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக உயிரிழந்தவரின் மகன் மற்றும் மனைவி கைது செய்யப்பட்டதாக உடவலவ பொலிஸார் தெரிவித்தனர். உடவலவ பகுதியை சேர்ந்த 48 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான பொடி அப்பு எனப்படும் பத்திரனகே அஜித் விஜேரத்ன என்பவரே உயிரிழந்துள்ளார். பொலிஸாரிடம் வாக்குமூலம் இறந்தவரின் மனைவி, வீட்டுக்கு முன்பாக கடை நடத்தி வருவதாகவும், அன்றைய தினம் அதிகாலை அந்த கடையில்...
  அளுத்கம, மொரகல்ல கடற்கரையில் பாடசாலை மாணவன் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக பெந்தோட்டை காவல்துறையினர் தெரிவித்தனர். நேற்று முன்தினம் மாலை நீராடச் சென்ற போது காணாமல் போன பாடசாலை மாணவனின் சடலமே நேற்று பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. 16 வயதுடைய மொஹமட் சமீன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள சாதாரணதர பரீட்சைக்குத் தோற்ற இருந்த நிலையில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவன் நேற்று முன்தினம்...
  பரமேஸ்வரா சந்திக்கு அருகாமையில் மோட்டார் சைக்கிள் ஒன்று காருடன் மோதி இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய இளைஞன் காயமடைந்துள்ளார். செவ்வாய்க்கிழமை (16) பிற்பகல் யாழ்ப்பாணத்திலிருந்து பலாலி வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியைக் கடக்க முற்பட்ட காருடன் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய இளைஞன் காயமடைந்து வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்த கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.