பொலிஸ் சிசிடிவி கமரா அமைப்புடன் பொது மற்றும் தனியார் துறைக்கு சொந்தமான கமரா அமைப்புகளை இணைத்து குற்றங்களை கண்டறியும் பாதுகாப்பு கமெரா அமைப்பை விரிவுபடுத்த பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது.
அதன்படி முதற்கட்டமாக கொழும்பு நகரின் தனியார் பிரிவில் இரண்டாயிரம் கேமராக்கள் சிசிடிவி. அமைப்பில் இணைந்து கொள்ள விரும்புபவர்களுடன் கலந்தாலோசித்து இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்தார்.
இந்த சிசிடிவி வரம்பை விஸ்தரிப்பதுடன், இலங்கையின் ஏனைய...
குருநாகல் – பொல்பித்திகம பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் இலங்கை போக்குரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமமைந்துள்ளனர்.
குருநாகல், பொல்பித்திகம, ரம்பாகொடெல்ல பகுதியில் வீதியோரத்தில் லொறியொன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், குருநாகலில் இருந்து – மடகல்ல நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து, அதன் பின்னால் அதிவேகமாக வந்து மோதியுள்ளது.
இந்த விபத்தில், 8 பேர் காயமடைந்த நிலையில், பொல்பித்திகம ஆரம்ப...
கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவு வாங்க வந்த வெளிநாட்டவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த நபர் 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும் 10 இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வாழைத்தோட்ட பொலிஸார் சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
அளுத்கடை பகுதியில் உள்ள வீதியில் உணவு வாங்க வந்த வெளிநாட்டவரை தகாத வார்த்தைகளால் திட்டி அச்சுறுத்திய
சம்பவம் தொடர்பில் கடை உரிமையாளரை வாழைத்தோட்ட...
கந்தேநுவர, ஹுனுகல பிரதேசத்தில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
குடும்ப தகராறு காரணமாக கணவரே மனைவியை கொலை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹுனுகல, அல்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொலையை செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கந்தேநுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் தொடர்பில் ஆராயவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் கருத்துக்கள் ஆராயப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நுவரெலியா – மீபிலிபான “அபி யூத்” இளைஞர் அமைப்பினால் நுவரெலியா மாவட்டச் செயலகம், பிரதேச செயலகம் இணைந்து இன்று (14) ஏற்பாடு செய்திருந்த சித்திரைப் புத்தாண்டு நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார்.
பாரம்பரிய சம்பிரதாயங்களுக்கு அமைவாக, இடம்பெற்ற...
சர்வோதய அமைப்பின் ஸ்தாபகர் கலாநிதி ஏ.ரி. ஆரியரத்ன காலமானார்.
92 வயதான இவர் உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்று (16) காலமானார்.
அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்படல் வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கைது செய்யப்பட்டு கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரசியல் கைதி செ.ஆனந்தவர்மன் எனப்படும் அரவிந்தனை நேற்று (16) பார்வையிட்ட பின் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் போராளி செல்வநாயகம் ஆனந்தவர்ணன் கடந்த 2024.03.26...
கெஹலிய ரம்புக்வெல்ல விளக்கமறியலில் வைக்கப்பட்டதிலிருந்து, அவர் அமைச்சராக இருந்தபோது அவருக்கு வழங்கப்பட்ட இரண்டு உத்தியோகபூர்வ வாகனங்களும் இன்னும் அவரது குடும்ப உறுப்பினர்களால் பயன்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னாள் அமைச்சருக்கு விஜேராம மாவத்தையில் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லமும் இதுவரை கையளிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அரசு அதிகாரி ஒருவர் தடுப்புக் காவலில் இருந்தால்
அரசு அதிகாரி ஒருவர் தடுப்புக் காவலில் இருந்தால், அவர் பெற்றுள்ள சலுகைகள் அனைத்தும் உடனடியாக...
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு, தருண் கார்த்திகேயனுடன் நேற்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு முதல் ஸ்டாலின் வருகை தந்திருந்தார்.
மேலும் திரையுலகை நட்சத்திரங்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன், நயன்தாரா, சூர்யா, அட்லீ, ரன்வீர் சிங், மோகன்லால், சிரஞ்சீவி என பலரும் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.
ரஜினிகாந்த் செய்த விஷயம்
நடிகர் ரஜினிகாந்த் எந்த திருமணத்திற்கு சென்றாலும், மணமக்களை வாழ்த்திவிட்டு கிளம்பிவிடுவாராம். ஆனால், ஷங்கரின் மகள் திருமணத்தில் மட்டும்...
ஐஸ்வர்யா - தனுஷ் விவாகரத்து சர்ச்சை தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. கடந்த 2004ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர்.
கடந்த 2022ஆம் ஆண்டு தங்களுடைய பிரிவை தனுஷ் - ஐஸ்வர்யா அறிவித்தனர். இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. மேலும் சமீபத்தில் விவாகரத்து கேட்டு இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் முறையிட்டனர். 2004ஆம் ஆண்டு நடந்த தங்களுடைய திருமணம் செல்லாத என அறிவிக்க...