சமீபத்தில் காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டனை சேர்ந்த விக்டோரியா ரோஸ் எனும் மருத்துவர் , தான் யுத்தத்தினால் காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரகிசிச்சை செய்ததாக தெரிவித்துள்ளார். காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரசிகிச்சை செய்தேன் அந்த எண்ணிக்கை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். 16 வயதிற்கு உட்பட்ட பலருக்கு சத்திரசிகிச்சை செய்ததாக தெரிவித்துள்ள அவர் அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். அதோடு துப்பாக்கி சூட்டு காயங்கள் எரிகாயங்கள் ஏனைய...
  உக்ரைனில் உள்ள டிரிபில்லியா மின்சார உற்பத்தி நிலையத்தை கடந்த 11 திகதி ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் உற்பத்தி நிலையம் முழுமையாக சேதமடைந்து 100 சதவீதம் மின்சாரம் தயாரிக்கும் திறனை இழந்ததாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜெலன்ஸ்கி கூறுகையில், "ரஷ்யா 11 ஏவுகணைகளை மின்சார உற்பத்தி நிலையம் நோக்கி வீசியது. அதில் உக்ரைன் ராணுவம் ஏழு ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியது. 4 ஏவுகணைகள் டிரிபில்லியா மின்சார...
  ஓமானில் பெய்து வரும் கனமழை மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காணாமல் போன இருவரை மீட்புக் குழுக்கள் இன்னும் தேடி வருவதாக அவசரகால மேலாண்மைக்கான தேசியக் குழு தெரிவித்துள்ளது. மோசமான காலநிலை காரணமாக முசந்தம், அல் புரைமி, அல் தாஹிரா மற்றும் அல் தகிலியா ஆகிய ஐந்து அலுவலகங்களில் உள்ள அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின் பணியை அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளதாக...
  டென்மார்க்கில் 400 ஆண்டுகால டென்மார்க் கலாச்சார பாரம்பரியம் தீப்பிடித்து எரிந்துள்ளதாக அந்நாட்டு கலாச்சார அமைச்சர் ஜாகோப் ஏங்கல்-ஷ்மிட் தெரிவித்துள்ளார். டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனின் மத்தியிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பழைய பங்குச் சந்தை கட்டிடம் செவ்வாய்கிழமை (16) காலை தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. 1625 ஆம் ஆண்டுக்கு முந்தைய கட்டிடம் இந்த கட்டிடம் 17 ஆம் நூற்றாண்டின் போர்சன் நகரின் பழமையான கட்டிடங்களில் ஒன்றாகும். இது “தி ஃபோல்கெட்டிங்" எனப்படும் டென்மார்க்கின் பாராளுமன்றம் மற்றும்...
  வவுனியா நகரில் தனது குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயை, மூவர் அடங்கிய கும்பல் வழிமறித்து, அவரின் குழந்தையின் மீது கத்தியை வைத்து மிரட்டி நகைகளை பறித்ததுடன், மோட்டார் சைக்கிளையும் அபகரித்துச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமனை முன்பாகவுள்ள கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு செல்லும் வீதியில் இன்று (2024.04.17) அதிகாலை இடம்பெற்றுள்ளது சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், விசாரணை குறித்த பெண் கடவுச்சீட்டு காரியாலத்திற்கு முன்பாக விண்ணப்படிவம் நிரப்பும் தொழிலில்...
  ஹஜ் (Hajj) யாத்திரீகர்களுக்கான ஒதுக்கீடுகளை இடைநிறுத்தவும் முறையான ஒதுக்கீட்டிற்காக பாதிக்கப்பட்ட பயண முகவரை சேர்க்கவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சவூதி அரேபிய (Saudi Arabia) அரசாங்கம் யாத்திரீகர்களின் வருகையை நிர்வகிப்பதற்கு ஒவ்வொரு நாட்டிற்கும் ஒதுக்கீட்டை வழங்குகிறது. இந்தாண்டு இலங்கையில் இருந்து 3,500 யாத்திரீகர்கள் வருகை தருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெவ்வேறு பயண முகவர்களுக்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இடைநீக்கம் இந்தநிலையில் பயண முகவர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை அடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம்...
  குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கு நோய் குறிப்பிடத்தக்க அளவில் பரவுகின்ற நிலையில் பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் (Lady Ridgeway Hospital) குழந்தை நல மருத்துவ வைத்தியர் தீபால் பெரேரா (Deepal Perera) வலியுறுத்தியுள்ளார். நீட்டிக்கப்பட்ட விடுமுறை நாட்களை தொடர்ந்து குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கு அதிகம் பரவி வருவதாக குறிப்பிடப்படுகிறது. அடிக்கடி தண்ணீருடன் மலம் வெளியேறுதல், வயிற்று வலி அல்லது பிடிப்புகள், பசியின்மை, குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை இந்த நோய்க்கான அறிகுறிகளாக...
  மஸ்கொல்ல, மொரஹேன பிரதேசத்தில் வசிக்கும் தாய் மற்றும் மூன்று பிள்ளைகள் விஷம் அருந்திய நிலையில் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 38 வயதுடைய பெண் ஒருவரும் அவரது 16, 13 மற்றும் 10 வயதுடைய மூன்று ஆண் பிள்ளைகளுமே இவ்வாறு விஷம் அருந்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நால்வரும் நேற்று முன்தினம் இரவு கம்பளை, பன்விலதன்ன பிரதேசத்தில் இடம்பெற்ற புத்தாண்டு இசை நிகழ்ச்சியை மற்றுமொரு குழுவினருடன் பார்வையிடச் சென்றுள்ளனர். வாக்குவாதம் இசை நிகழ்ச்சி முடிந்து...
  வவுனியா பொது வைத்தியசாலையின் பாதுகாவலர்கள் மீது இளைஞர்கள் குழு ஒன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று முன்தினம் (15.04.2024) இரவு இடம்பெற்றுள்ளது. பொலிஸ் விசாரணை வவுனியா பொது வைத்தியசாலையில் நோயாளி ஒருவரை பார்வையிடுவதற்காக நேற்றிரவு 11 மணியளவில் இளைஞர்கள் குழு ஒன்று வருகை தந்துள்ளது. இதன்போது கடமையில் இருந்த பாதுகாவலர்களுக்கும் அவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ளது. சம்பவத்தில்தாக்குதலுக்கு இலக்கான பாதுகாவலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் தாக்குதலை...
  வெளிநாடுகளுக்குச் செல்வதற்காகப் பணம் கொடுத்து ஏமாறும் சம்பவங்கள் அண்மைய நாள்களில் வெகுவாக அதிகரித்துள்ளன. இந்நிலையில், வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக யாழ்ப்பாணத்தை (Jaffna) சேர்ந்தவர்களிடம் சுமார் 2 கோடியே 50 இலட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்த பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மோசடி நடவடிக்கை குறித்து மேலும் தெரியவருகையில், வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு குறித்த பெண் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகவும், வெளிநாடுகளில் வேலை வாய்ப்புக்களை பெற்று தருவதாகவும், சமூக ஊடகங்கள் ஊடாக விளம்பரங்களை...