ஐக்கிய மக்கள் சக்தியின்(SJP)நான்கு முக்கிய உறுப்பினர்களுக்கு அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்களான தலதா அதுகோரல(Thalatha Atukorale), கபீர் ஹாசீம்(Kabir Hashim), முன்னாள் ராஜாங்க அமைச்சர்களான ஹர்ஷ டி சில்வா(Harsha de Silva) மற்றும் ஏரான் விக்ரமரத்ன(Eran Wickramaratne) ஆகியோருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். நேரடி அழைப்பு ஊடக சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே...
  இலங்கையில் பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த விசேட பயிற்சி வழங்கப்பட உள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார். எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்கு விஜயம் செய்திருந்த போது அவர் இன்றைய தினம் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி தப்பிச் செல்லும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களை மோட்டார் சைக்கிள்களில் துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்த பயிற்சி வழங்கப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார். விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த...
  ஆதிசிவன் ஆலயத்தில் வைத்து ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் வவுனியா மனிதவுரிமை ஆணைக்குழுவினரால் தொல்பொருள் திணைக்களத்திடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா, உள்வட்ட வீதியில் அமைந்துள்ள மனிதவுரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்திற்கு நேற்று(16) அழைக்கப்பட்ட தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் ஆகியோரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், வாக்கு மூலமும் பெறப்பட்டுள்ளது. இதன்போது, தொல்பொருள் சின்னத்திற்கு சேதம் ஏற்பட்டுத்தப்பட்டதாகவும் தாம் கடந்த மாதம் 9 ஆம் திகதி காலை...
  வடக்கு மாகாணத்தில் வீடற்றவர்களுக்கான சிக்கலை நிவர்த்திக்கும் நோக்கில் ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய புதிய வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வவுனியா நெடுங்கேணி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற வடக்கு மாகாண புதுவருட கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனை கூறியுள்ளார். மேலும், தெரிவிக்கையில், போதுமான அளவு விளைச்சல் “ பெரிய குளங்கள் மற்றும் சிறு குளங்களின் நீர்மட்டம் போதுமானதாக காணப்படுகின்றமையால் இடைபோகம் மற்றும் சிறுபோகம் ஆகியவற்றில் போதுமான அளவு விளைச்சலை எதிர்பார்க்க முடியும். ஆகவே...
  வாகனத் திருட்டு, வீடு உடைப்பு, தங்க சங்கிலி பறிப்பது போன்றவற்றைக் குறைக்கும் விசேட செயற்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. அதற்கமைய, மே மாதம் முதலாம் திகதி முதல் இந்த நடவடிக்கையை அமுல்படுத்த மூன்று மாத கால இலக்கு வழங்க பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் நடவடிக்கை எடுத்துள்ளார். பாதாள உலக குழுக்களை ஒடுக்குவதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள யுக்திய நடவடிக்கையுடன் இணைந்து இதற்கான செயற்திட்டத்தை மே மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு சிரேஷ்ட பொலிஸ்...
  கல்வித்துறை உத்தியோகத்தர்களின் வெளிநாட்டு பயணங்களுக்கான விடுமுறைகளை அனுமதிக்கும் அதிகாரம் மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆறு மாதங்கள் அதற்கு குறைவான காலப் பகுதிக்கான குறுகிய கால வெளிநாட்டு பயணங்களுக்கான விடுமுறைகளை மாகாண கல்விப் பணிப்பாளர்களே அனுமதிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீர்மானம் கல்வி அமைச்சினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கல்வி அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்படும் வெளிநாட்டு பயணங்களுக்கான விடுமுறை கோரிக்கைகளை பரிசீலனை செய்வதற்கு நீண்ட காலம் எடுத்துக்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறைசார்...
  வவுனியாவில் வெளிநாட்டில் இருந்து வருகைதந்த நபர் ஒருவருடன் இணைந்து புளியங்குளம் பொலிஸார் இளம் குடும்பஸ்தர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (15.04.2024) இரவு இடம்பெற்றுள்ளது. வவுனியா, சின்னப்பூவரசங்குளத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையே தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட நபர் குறித்த விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்ததாவது, "விசாரணை ஒன்று இருப்பதாக புளியங்குளம் பொலிஸார் என்னை அழைத்தனர். நான் அங்கு சென்ற நிலையில் எனது...
  மனிதநேயம் கொண்டவரான முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரின் இழப்பு செய்தி நாட்டிலுள்ள மூவின மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரதியமைச்சராக செயற்படும் அரசியல்வாதி என்ற நிலையை கடந்து தானும் சாதாரண மனிதன் என்பதை நிரூபிக்கும் வகையில் அவரின் வாழ்க்கை நடைமுறைகள் காணப்பட்டிருந்தன. இந்நிலையில், தனது மரணத்திற்கு ஏற்கனவே தயாராக இருந்ததாக பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார். முன்கூட்டியே அறிந்த மரணம் மரணிக்க சில வாரங்களுக்கு முன்னர் ஊடகமொன்றுக்கு வழங்கிய...
இலங்கைக்கு மட்டும் பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க இந்தியா தீர்மானித்துள்ளது. இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது இதன்படி 10,000 மெற்றிக் தொன் பெரிய வெங்காயத்தை இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதலில் அண்டை நாடு என்ற அடிப்படையிலும், புத்தாண்டு பண்டிகை காலத்தை கருத்திற் கொண்டும் இந்தியா இந்த தீர்மானத்தை எடுத்ததாக கூறப்படுகிறது.
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரின் கந்தர்பால் பகுதியில் உள்ள ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் பலர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்புப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மாநில பேரிடர் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. குறித்த படகில் சிறார்களும் உள்ளூர்வாசிகளும் கந்தர்பாலிலிருந்து பத்வாரா வரை பயணித்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் ஜீலம்...