கனடாவின் வடமேற்கு ஒன்றாரியோ பகுதியில் மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை பிரச்சினையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். வீட்டு வாடகை, மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட மாதாந்த கொடுப்பனவுகளை செலுத்துவதா அல்லது உணவு கொள்வனவு செய்வதா என்ற நெருக்கடியை மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர். அண்மையில் சர்வதேச ஊடகமொன்றுக்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் அளித்த நேர்காணலில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர். போதியளவு வருமானம் இல்லாத காரணத்தினால் மக்கள் பெரும் சிரமங்களையும் அசௌகரியங்களையும் எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கட்டணங்களை செலுத்தாவிட்டால் வீட்டை...
  அமெரிக்காவின் இடோவில் கனடிய விமானமொன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. எயார் கனடா விமான சேவைக்கு சொந்தமான போயிங் 737 மெக்ஸ் ரக விமானமொன்று இவ்வாறு அவசரமாக பாதுகாப்பான முறையில் தரையிறக்கப்பட்டுள்ளது. விமானத்திலிருந்து எச்சரிக்கை ஒளி வெளியானதன் காரணமாக இவ்வாறு விமானி, விமனத்தை அவசரமாக தரையிறக்கியுள்ளார். மெக்ஸிக்கோவிலிருந்து வான்கூவார் நோக்கிப் பயணம் செய்த விமானம் எச்சரிக்கை ஒளி விளக்கு ஒளிர்ந்த காரணத்தினால் இடோவின் போய்ஸி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 122 பயணிகளும், 6...
  கனடாவின் ஒன்றாரியோவில் மாணவர் தங்கும் விடுதிகள், வீடுகளாக கருதப்படும் என மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது. மாணவர் தங்குமிடங்கள் மற்றும் ஓய்வூதிய இல்லங்கள் என்பன வீடுகளாக கணக்கிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பத்து ஆண்டுகளில் 1.5 மில்லியன் வீடுகளை நிர்மானிக்கும் இலக்கினை அடிப்படையாகக கொண்டு மாகாண அரசாங்கம் திட்டங்களை வகுத்து வருகின்றது. மாநகரசபைகளில் வீடுகளை கணக்கெடுக்கும் நடைமுறயைில் மாற்றம் கொண்டு வருமாறு மாகாண அராங்கம் அறிவுறுத்தியுள்ளது. நகராட்சி நிர்வாகங்களுக்கு இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. ஒன்றாரியோ மாகாண வீடமைப்பு அமைச்சர்...
  52 வயது பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்து அவரின் வீட்டிலிருந்து 50 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையடித்து சென்ற நபர் தொடர்பில் ஹம்பேகமுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த 5 ஆம் திகதி ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவுக்கு உபட்ட தஹய்யாகல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. திடீரென வீட்டுக்குள் நுழைந்த சந்தேகநபர் அதேசமயம் சம்பவ தினத்துக்கு முன்னைய தினம், பாதிக்கப்பட்ட பெண்ணின் அயல் வீட்டில் நபரொருவர் இந்தப் பெண்ணின் தொலைபேசி இலக்கத்துக்கு...
  சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 779 சிறை கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இத்ன்படி, அரசியலமைப்பின் 34 (1) வது சரத்தின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால், ஜனாதிபதியின் மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
  பாடசாலை ஒன்றின் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் விளையாட்டு ஆசிரியர் கைதாகியுள்ளார். சந்தேக நபர் புத்தல யுத்கனாவ காலனியில் வசிக்கும் 33 வயதுடையவர். 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிறுமிக்கு 15 வயதாக இருந்தபோது காதல் உறவைப் பேணி வந்துள்ளார். விஷத்தை குடித்த மாணவி இதனை அறிந்த சிறுமியின் தந்தை இந்த காதல் உறவை நிறுத்துமாறு எச்சரித்ததன் காரணமாக 04/04/2024 அன்று சிறுமி...
  அரச, அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து மொழி பாடசாலைகளுக்குமான முதலாம் தவணையின் முதற்கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளையுடன் (10-04-2024) நிறைவடையவுள்ளன. இதெவேளை, முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி செயற்பாடுகளுக்காக பாடசாலைகள் இம்மாதம் 24ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. அத்துடன், முஸ்லிம் பாடசாலைகள் இம்மாதம் 17ஆம் திகதி முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி செயற்பாடுகளுக்காக ஆரம்பிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
  கடற்றொழில் அமைச்சர் கபடத்தனமாக எமது பொன்னாவெளி கிராமத்தில் சுண்ணக்கல் அகழ எத்தனித்து வருகிறார். அதற்கு நாம் இடமளிக்க முடியாது என அனைத்து மக்கள் ஒன்றிய உறுப்பினர் வி.சிறிபாஸ்கரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். வெள்ளாவெளி மக்கள் நீண்ட காலமாக சுண்ணக்கல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதனையும் மீறி கடற்றொழில் அமைச்சர் தனியார் நிறுவனத்திற்கு சுண்ணக்கல் அகழ்வுக்கு அனுமதி வழங்கியுள்ள்ளார். சுண்ணக்கல் அகழ்வு எமது பிரதேசம்...
  காதலி ஒருவர் தவறான முடிவினை எடுத்து உயிரிழந்து 50ஆவது நாளில் காதலனும் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞரின் காதலியான தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த யுவதி ஒருவர் கடந்த 50 நாட்களுக்கு முன்னர் தவறான முடிவினை எடுத்து உயிரிழந்துள்ளார். உடற்கூற்று பரிசோதனை இந்நிலையில், குறித்த இளைஞன் அவரது இல்லத்தில் வைத்து தவறான முடிவெடுத்துள்ளார். அவரது சடலம் மீதான...
  மத்திய தபால் பரிவர்த்தனைக்கு இந்த புத்தாண்டுக் காலத்தில் அதிக எண்ணிக்கையிலான பொருட்களை வந்தடைந்துள்ளன. வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அதிக அளவில் பொருட்களை அனுப்பியுள்ளனர். புத்தாண்டு காலம் என்பதால் அந்த பொருட்களை துரிதமாக விநியோகிக்க வேண்டிய சவால் ஏற்பட்டுள்ளது என ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார(Shantha Bandara) தெரிவித்துள்ளார். இதன் போது, நெருக்கடிகள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் ஏப்ரல் 12ஆம் திகதி பொது விடுமுறையாக இருந்தாலும் அன்றைய...