சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு ஜேர்மனியில் பேர்லின் நகரில் பல்லினமக்கள் கலந்து கொண்ட மாபெரும் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த பேரணியில், 10000 க்கும் மேலான ஜேர்மன் மக்கள் கலந்துக்கொண்டுள்ளனர். தமிழ் பெண்கள் அமைப்பு சார்பாக பிரதிநிதிகள் கலந்துகொண்டு தாயகத்தில் ஈழத்தமிழ் பெண்களுக்கு நடைபெறும் கொடுமைகள் தொடர்பாக விழிர்ப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். பேரணியில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் தாங்கிய பதாதை வேற்றின மக்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் அமைந்தது குறிப்பிடத்தக்கது.    
முல்லைத்தீவு கேப்பாப்புலவு பகுதியில் படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி கேப்பாப்புலவு மக்கள் தமது போராட்டத்தினை இன்று 9வது நாளாக தொடர்கின்றனர். கேப்பாப்புலவை சேர்ந்த 135 குடும்பங்கள் தமக்குச் சொந்தமான 480 காணிகளையும் இராணுவத்தினர் தங்களிடம் கையளிக்க வேண்டும் எனக் கோரியே இந்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது கேப்பபுலவு கிராமத்தை இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளதாகவும் இன்றுவரை தமது பூர்வீக நிலவங்கள் விடுவிக்கப்படவில்லை என்று கேப்பாபுலவு மாதர் சங்கத்...
வவுனியாவில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், இரு சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓமந்தைப்பகுதியில் இன்று காலை இடம்பெற்ற குறித்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணம் மேற்கொண்ட ஒருவரே உயரிழந்துள்ளதுடன், காயமடைந்த சிறுவர்கள் இருவரும் வவுனியா பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி ஓமந்தை பாலத்திலுள்ள மதவுடன் மோதியதில், இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்தில்...
தமிழ் நாட்டினை சேர்ந்த மீனவர் ஒருவர் கச்சதீவு அருகே சுட்டுக்கொல்லப்பட்டத்தினை தொடர்ந்து தமிழ் நாடு தங்கச்சி பகுதியில் பதற்ற நிலை காணப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஏற்பட்டிருக்கும் பதற்றநிலையினை கட்டுப்படுத்த இலங்கையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய இரு அரசும் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ கடந்த திங்கட்கிழமை அன்று இலங்கை கடற்படையினரின் கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானார். இருப்பினும் இது முற்றுமுழுதாக...
மிக நீண்ட பெயர் கொண்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் இலங்கையில் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பொலிஸ் அதிகாரி தனது பெயரில் 14 பெயரை கொண்டன் மூலமே இந்த பட்டியலில் அவர் இணைந்துள்ளார். வழக்கமாக இடமாற்றங்களை அறிவிக்கும் பொலிஸ் அறிக்கையின் ஊடாக இந்த விடயம் அவதானிக்கப்பட்டுள்ளது. அதற்மைய அத்தியட்சகர் ஹக்மன திஸாநாயக்க வாசல பண்டார அமுனுகம விஜேரத்ன குணதிலக்க ரஞ்சனாயக்க பண்டாரலாகே ஹக்மன வலவ்வே அனுருந்த பண்டார ஹக்மன என்பதே அவருடைய பெயராகும். பொலிஸ் தலைமையக...
வெளிநாட்டவர் ஒருவரை ஏமாற்றி ஹிக்கடுவ, சீனிகம கோவிலை தனது வீடு எனக் கூறி விற்பனை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ஹிக்கடுவ கடல் கரையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து செல்வது வழமையாகும். அங்கு வந்த ஜேர்மன் நாட்டவர் ஒருவர் மோசடியான முறையில் ஏமாற்றப்பட்டுள்ளார். இந்த ஏமாற்று சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த வழக்கில் பாதிக்கப்பட்டுள்ள ஜேர்மன் நாட்டவர் சார்பாக வாதிடும் சட்டத்தரணி,...
அவுஸ்திரேலியாவில் குடும்ப பிரச்சினை காரணமாக தமது கணவரை இலங்கை பெண்ணொருவர் கொலை செய்திருந்தார். வைத்தியரான மரி லியனகே என்பரே கொலைக் குற்றவாளியென நீதிமன்றினால் அறிவிக்கப்பட்டது.. இந்நிலையில் கணவரின் செயற்பாடு குறித்து அவர் தற்போது விளக்கமளித்திருந்தார். தான் நேசித்த கணவரினால் 5 வருடத்திற்கு மேலாக கடும் சித்திரவதைக்கு உட்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். தனது கணவனால் கடுமையாக தாக்கப்பட்டு, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டுள்ளார். தான் நேசித்த ஒருவரிடம் பயத்துடனே அவர் வாழ்ந்து வந்துள்ளார். மேற்கு அவுஸ்திரேலியாவில்...
கனடா டொரன்டோவின் நகரபிதா ஜோன் டொரி, தெற்காசியாவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். அவருடன், டொரன்டோ நகர சபை உறுப்பினராக அண்மையில் தெரிவான இலங்கைத் தமிழர் நீதன் ஷானும் வருகைத் தரவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. பதினாறு வயதில் அகதியாக கனடாவுக்கு இடம் பெயர்ந்த நீதன் ஷான், டொரன்டோ நகர சபை உறுப்பினராக தெரிவானார். கல்வி தொழிநுட்பத் துறை அபிவிருத்தியை நோக்காக கொண்டே, எதிர்வரும் 15ஆம் திகதி தெற்காசியாவுக்கு ஜோன் டொரி விஜயம் மேற்கொள்வுள்ளார். கனடா டொரன்டோவின்...
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு இன்று ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம். றியாழ் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. முன்னதாக வித்தியா கொலை வழக்கு விசாரணைகள் நீதிமன்றில் இடம்பெறும் போது சந்தேகநபர்களுக்கான பாதுகாப்பு சாதாரணமாகவே கொடுக்கப்பட்டிருக்கும். சந்தேகநபர்களை நீதிமன்றிற்கு அழைத்து வந்து குறித்த விசாரணைகள் நடைபெற்று முடிந்ததும் அவர்கள் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். ஆனால் இன்று வித்தியா கொலை வழக்கு விசாரணைகள் இடம்பெறும் போது வழமைக்கு மாறாக நீதிமன்ற...
இப்போது, டெல்லியில் குடியரசுத்தலைவரின் ராஷ்ட்ரபதி பவனில் இருக்கிறார் ஆகாஷ். அவரின் செல்போன் எண்ணைப் பிடிப்பதுதான் கடினமாக இருந்தது. தொடர்புகொண்டால், தயங்காமல் பேசுகிறார். பேசப் பேச, `10-ம் வகுப்புப் படிக்கும் மாணவரா இவ்வளவு தெளிவான உச்சரிப்புடன், தீர்க்கமாகப் பேசுகிறார்?’ என ஆச்சர்யமாக இருந்தது. ஆண்டுக்கு எட்டு கண்டுபிடிப்பாளர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் குடியரசுத் தலைவரின் `இன்னொவேஷன் ஸ்காலர்ஸ் இன்-ரெசிடென்ட்ஸ் புரோகிராம்’ திட்டத்துக்கு முழுக்க முழுக்கத் தகுதியானவர் என்பது பேச்சிலேயே...