முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மாமூலை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது, நேற்றையதினம் (09.04.2024) இரவு 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மாமூலை விஸ்ணு கோவில் வீதியில் வேகமாக நேர் எதிரே வந்த இரு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
இந்த விபத்தின் போது முள்ளியவளை பூதன்வயல் கிராமத்தினை சேர்ந்த 18 வயதுடைய இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அத்துடன், 17...
பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி திணைக்கள செயளாலர் கீதாஞ்சலி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பட்டிருப்பு கல்வி வலய பிரிவிற்குட்பட்ட பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலய(களுவாஞ்சிகுடி) கல்வி சமூகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் காரணமாக அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதன்படி குறித்த கல்வி பணிப்பாளர் திருகோணமலையில் உள்ள மாகாண கல்வி திணைக்களத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும், கூறியுள்ளார்.
பாதாள உலக குழுக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு கைத்துப்பாக்கிகள் கொண்ட விசேட பொலிஸ் மோட்டார் சைக்கிள் பிரிவு களமிறங்கவுள்ளது.
இந்த குழுவினர் விசேட பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் மேற்பார்வையில் விசேட பயிற்சி பெறும் இந்தக் குழுவினர் விசேட தாக்குதல் மோட்டார் சைக்கிள் அணியாக வரவுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
விசேட பொலிஸ் குழு
பாதாள உலகக் குழுக்கள் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்துபவர்களுக்கு உடனடி பதிலடி கொடுப்பதற்காக...
வேட்பாளர் தொடர்பில் தீர்மானம் எடுத்து அதனை அறிவிக்கும் பொறுப்பு மகிந்த ராஜபக்சவிடம்
Thinappuyal News -
ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் தொடர்பில் தீர்மானம் எடுத்து அதனை அறிவிக்கும் பொறுப்பு அக்கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் (Mahindha Rajapaksha) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நேற்று (09) நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன (Rohitha Abeygunawardena) தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டம் நேற்று கொழும்பில் கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும்...
பண்டிகைக்காலத்தை முன்னிட்டு பராமரிப்பு பணிகளுக்காக மேற்கொள்ளப்படும் மின் துண்டிப்புகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி (Ministry of Power and Energy) அமைச்சின் செயலாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
பண்டிகைக்காலத்தில் எவ்வித இடையூறுமின்றி மின்சாரத்தை விநியோகிப்பதற்கு அவசியமான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
எரிபொருள் விநியோகம்
இதனிடையே, பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தேவையான எரிபொருளை அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போதுமான எரிபொருள் கையிருப்பு நாட்டில் காணப்படுகிறது என...
இளம் தாயின் மரணத்துடன் தொடர்புடையவர் என கூறப்படும் நபர் சாணக்கியனின் பயிற்சி முகாமில்! வெடித்தது அடுத்த சர்ச்சை
Thinappuyal News -
அமெரிக்க தூதரகத்தின் அனுசரணையுடன் இயங்கும் International Republican Institute (IRI) நிறுவனத்தினால் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கு தம்புள்ள தனியார் விருந்தினர் விடுதியில் வழங்கப்பட்ட வதிவிட பயிற்சி முகாம் புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்துதான் தற்பொழுது சர்ச்சை எழுந்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான இரா.சாணக்கியன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றதாகக் கூறப்படுகின்ற அந்த பயிற்சி முகாமில், வலி வடக்கு பிரதேசசபை முன்னாள் தவிசாளர் சுகிர்தன் என்பவர் கலந்துகொண்டதைத் தொடர்ந்தே,...
நுரைச்சோலை நகரில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் உயிரிழந்தவர் நுரைச்சோலை கொய்யாவாடிய பகுதியைச் சேர்ந்த சமிர லசந்த பெர்னாண்டோ (26) என்பவரே உயிரிழந்துள்ளார்.
வாகன விபத்து
இவர் மின்சார சபையில் பணியாற்றும் ஊழியர் எனத் தெரிய வந்துள்ளது.
கல்பிட்டியில் இருந்து தேங்காய் ஏற்றிச் சென்ற லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிளில் மோதியுள்ளது.
இளைஞன் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் தேங்காய் லொறியில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம்...
பாடசாலையொன்றின் இல்ல விளையாட்டுப் போட்டிகள் தொடர்பாக அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் பொலிஸார் கேள்வி எழுப்பியமை இனவாத அடக்குமுறை என நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கம் ஒன்று கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ் தேசிய மலராக கருதப்படும் காந்தள் (கார்த்திகை பூ) மலரின் வடிவில் இல்லம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளமை குறித்து பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
பொலிஸாரின் நடவடிக்கையினால் பாடசாலை மாணவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை மனித உரிமைகள்...
மொனராகலை பிரதேசத்தில் வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரை ஏமாற்றிய சம்பவம் தொடர்பில் பெண் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை மொனராகலை பிரிவின் விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.
சந்தேகநபர் கோட்டை ரஜமஹா விஹார மாவத்தையில் வசிக்கும் 55 வயதுடைய பெண் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி முதல் இந்த வருடம் ஜனவரி மாதம் 11ஆம் திகதி வரை மொனராகலை பிரதேசத்தில் உள்ள...
தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பலைச் சேர்ந்த வெல்லே சாரங்கவின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்குளிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் தயாரிக்கப்பட்ட இரண்டு வாள்கள் மற்றும் கைக்குண்டு ஆகியவற்றுடன், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
யுக்திய நடவடிக்கையின் கீழ் மட்டக்குளிய பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் மேல்மாகாண புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் விசாரணை
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் களனி, கங்காமொல வீதி, மட்டக்குளிய ஆனையிறவுத் தோட்டம், கொழும்பு...