பேருந்து சாரதி நொடிப்பொழுதில் எடுத்த முடிவால் 50 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தொலொஸ்பாகேயிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதிக்கு அருகில் உள்ள மலையில் மோதி நேற்று விபத்துக்குள்ளானது. பேருந்தில் பயணித்த மூன்று பாடசாலை மாணவர்கள், பயணிகள் ஐவர் மற்றும் சாரதி ஆகியோர் காயமடைந்து நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். தடுக்கப்பட்ட விபத்து நாவலப்பிட்டி தொலொஸ்பாகே பிரதான வீதியில்...
  ஓமந்தை பகுதியில் தொடருந்துடன் பிக்கப் ரக வாகனமொன்று மோதி விபத்துக்குள்ளாகியதில் படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (07.04.2024) இடம்பெற்றுள்ளது. மன்னார் - நானாட்டன் பகுதியைச் சேர்ந்த ராஜன் நிரோஜன் என்ற 32 வயதுடையவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தொடருந்து கடவையில் விபத்து கடந்த சனிக்கிழமை வவுனியா - யாழ்ப்பாணத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தொடருந்துடன் ஓமந்தை - பன்றிகெய்தகுளம் பகுதியில் தொடருந்து கடவையைக் கடக்க முயன்ற பிக்கப் ரக...
  அமைச்சர் மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் 24ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடுகள் இன்று (திங்கட்கிழமை) எடுத்துக்கொண்ட போதே கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன்...
  வவுனியா, சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் குறித்த பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 2 இல் கல்வி பயிலும் மாணவன் ஒருவன் கடந்த 03 ஆம் திகதி பாடசாலை முடிந்து வீட்டிற்கு சென்ற நிலையில், மாணவனின் முகத்திலும், தலையிலும் அடிகாயங்கள்...
  கண்டி, கட்டம்பே பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் உள்ள ஆலயம் ஒன்றின் கராஜில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, கண்டி பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. பொலிஸ் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டபோது, உயிரிழந்தவரின் கால்கள் மற்றும் கைகள் கயிற்றால் கட்டப்பட்டிருந்த நிலையில் அவர் முகத்தில் காயங்களுடன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் மெனிக்கின்ன பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடையவர்...
  டக்ளஸ் தேவானந்தாவின் நடவடிக்கைகள் இன்று நேற்று அல்ல அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போதே தமிழர்களுக்கு எதிராக விரோத நடவடிக்கைகளை கொண்டவர் என்று வெளிப்படையாக எல்லோருக்கும் தெரியும்” என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பொன்னாவெளி கிராமத்தில் சுண்ணக்கல் அகழ்வுக்காக கடந்த (05)திகதி சென்றிருந்த போது கிராம மக்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார். அடாவடி அரசியல் இதில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிர்ப்பு...
  சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக துறைமுகங்கள், விமானப் போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அவசர அரசியல் குழுக் கூட்டம் இன்று(8) கொழும்பில் கூட்டப்பட்டது. குறித்த கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதுடன் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகள் தொடர்பாக எழுந்துள்ள நெருக்கடி நிலைமையை கருத்திற் கொண்டே இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சி இதில், முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க...
  பிரசவ காலத்தின் போது தொழில் வழங்குநர்களுக்கு சுமையை ஏற்படுத்தாத விதத்தில் விசேட பிரசவகால கொடுப்பனவுகள் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த தகவலை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார(Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், முறைசாரா தொழிற்றுறைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து தொழிலாளர்கள் உட்பட தனியார் துறையில் பணிபுரிபவர்கள் அனைவரும் சீரான முறையில் பணியை தொடரும் வகையில் புதிய வேலைவாய்ப்பு பாதுகாப்புச் சட்டத்தை...
  எதிர்வரும் 2028 ஆம் ஆண்டளவில் கண்ணிவெடி மற்றும் வெடிக்காத வெடிகுண்டுகள் இல்லாத நாடாக மாற்றவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார். கண்ணிவெடிகள் இருந்த முழு நிலப்பரப்பிலிருந்து 1,340.87 கிலோமீற்றர் கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்பட்டுள்ளதாகவும், குறித்த பகுதியில் 2,492,081 கண்ணிவெடிகள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், வடக்கு கிழக்கில் மேலும் சுமார் 23 கிலோமீற்றர் கண்ணிவெடிகள் அகற்றப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பு இது...
  இலங்கை அணி டி20 உலகக்கிண்ணத்தை வென்று 10 ஆண்டுகள் ஆனது குறித்து அணி நிர்வாகம் பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக்கிண்ண தொடரை இலங்கை அணி கைப்பற்றி சாம்பியன் ஆனது. இறுதிப்போட்டியில் லசித் மலிங்கா தலைமையிலான இலங்கை அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி மகுடம் சூடியது. இலங்கை அணி டி20 உலகக் கிண்ணத்தை வென்று 10 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் வாரியம் தனது எக்ஸ்...